
உங்களிடம் சில வார்த்தைகள் ,
கடந்த மார்ச் மாதம் 4 -ஆம், தேதி இந்த பதிவுலகத்தில் காலடி எடுத்து
வைத்தேன் , இதற்கு முழு முதற்க் காரணம் , எனது அருமை நண்பர்
திரு வேலன் அவர்கள் தான்,
நாங்கள் இருவரும் ஒரே ஊர் என்பதாலும் அவரிடம் பேசும் சந்தர்பம்
கிடைத்தது , ஒரு நாள் பேச்சு வாக்கில் கணினி பற்றி பேச்சு வந்தது ,
அப்போது அவர் என்னிடம் நீ கூட ஒரு பிளாக் ஆரம்பிக்கலாம் , என்று
சொன்னார் அப்போது நான் சொன்னேன் , அண்ணா எனக்கு கணினி பற்றி
ஒன்றும் தெரியாது என, முதலில் படித்துப் பார் என்றார் ,
அவரின் பதிவுகளை பற்றியும் சொன்னார் , அடடா !! என நினைத்து
முதலில் அவரின் பிளாக் படித்தேன் , பிறகு ,
மற்ற பதிவுகளையும் படிக்க ஆரம்பித்தேன், அப்போது தான் எனக்கு
ஒவ்வருவரும், அவர்களுக்கென ஒரு பாணியுடன்
எழுதுகின்றனர் ,என்பதை அறிந்தேன் ,
அதன் விளைவாக நான் முயற்சி செய்த ஒரு பாணி தான் இந்த
குப்பத்து தமிழ் , முதலில் காமிடி எழுதினேன் ,
பிறகு படிப்படியாக தொழில் நுட்பம் பற்றி எழுதினேன் , இது வரை
எனக்கு கணினி பற்றி யாரும் சொல்லித் தந்ததில்லை ,
எனது சுய முயற்சியில் நானே கற்று அதை செயல் படுத்திப் பார்த்து ,
பிறகு அதை எழுதுகின்றேன் ,
எனக்கு ஆங்கில டைப்பிங் மட்டுமே தெரியும் , தமிழ் எழுத
google transliteration தான் பயன் படுத்தி வருகிறேன்,
இதில் தமிழ் எழுத முடிகிறது ஆனால் , டவுசர் பாண்டி தமிழ் மிகவும்
கஷ்டமாக இருக்கும் ,
எனக்கு வந்த கருத்துக்களில் சில பேர் இது என்ன தமிழ் ஒன்றும்
புரியவில்லை ? என என்னை திட்டிக் கூட இருக்கின்றார்கள் ,
சில பேர் இதனாலேயே நண்பர்களாகவும் கிடைத்து இருக்கிறார்கள் ,
அப்படி கிடைத்த நண்பர் தான் கக்கு -மாணிக்கம் , என்ற நண்பர் துபாய்
நாட்டில் வேலை பார்த்து வருகிறார் ,
அதே போல் புனே வில் இருக்கும் அன்பு தம்பி ஜெய் ( யூர்கன் க்ருகியர் )
மற்றும் பாரிஸ் நாட்டில் இருக்கும் நண்பர் நித்தியானந்தம் ,
சமீபத்தில் கிடைத்த நண்பர் ஹரி ராஜகோபாலன் , இவர்
கலி போர்னியாவில், இருக்கிறார் ,
கருவாச்சி - இவர் திருப்பூரில் இருக்கிறார் , இவர்கள் அனைவரும்
எனக்கு இந்த வலை உலகம் மூலம் கிடைத்த மிக நெருங்கிய நண்பர்கள்
மேலும் , காலடி , மோகனச்சாரல் , INVISIBLE - விஜி ,போன்ற வலை
தளம் எழுதும் நண்பர்களும் இருக்கிறார்கள் ,
மேலும் எனது வலைத்தளத்தை follow செய்யும் 63 - நண்பர்களுக்கும்
நன்றி , நன்றி , மேலும் உங்கள் ஆதரவை வேண்டி - டவுசர் பாண்டி ,
டவுசர் பாண்டியின் தமிழ் புரியவில்லை என சொல்பவர்களுக்கு , ஒரு சின்ன வேண்டுகோள்,அவர்களுக்காகவே , எனது பிளாக்கில்
பாண்டி அகராதி என கொடுத்து இருக்கிறேன் ,
முடிந்தால் அதை படிக்கவும் ,
- நன்றி "பாண்டி "
நாம வெச்சிக்கீர பென் டிரைவ்வுல , எதுனா மிக்கியமான மேட்டர்
வெச்சிருப்போம் !! அத்த பாஸ் குடுத்து லாக் பண்றது பத்தி இப்போ
பாக்கலாம் ,
இங்க போய் இந்த சாப்ட்வேர் down load பண்ணிக்கோங்க !! ( 79 Kb அளவு தான் ) அப்பால ,
அத open பண்ணி run பண்ணுங்க, இது மேரி ஒரு ஐகான் வரும்

இப்போ !! மொதல்ல நம்ப பென் டிரைவை போடுங்க !! அப்பால,
இதை ஓபன் பண்ணுங்க !! உங்களுக்கு இது போல் ஓபன் ஆகும்,

உங்கள் விருப்பம் போல் password கொடுக்கலாம்
(அதில் 16 digit என இருப்பதை பார்த்து மிரள வேண்டாம் }
இதில் old password என்பதை விட்டு விட்டு , new pass word என்பதையும்
அதை மறுபடி type செய்யவும் , HInt கொடுக்க வேண்டாம் ,
பிறகு Apply கொடுக்கவும் , முடிந்தது ,அதை remove செய்து விட்டு
மீண்டும் போடும் போது தான் லாக் ஆகும் ,
நமது பென் டிரைவ் இப்போது லாக் ஆகி விட்டது ,

இப்போது , பென் டிரைவை எடுத்து விடுங்கள் மீண்டும் அதை
போட்டுவிட்டு mycomputer சென்று open செய்து பாருங்கள் ,
இது போல் வரும் ,

மீண்டும் உங்கள் பென் டிரைவை மீட்க்க முதலில் உள்ள ஐகானை ஓபன்
செய்து அதில் unlock என்பதை பிரஸ் செய்தால் இது போல் தோன்றும் ,
இதில் உங்கள் password கொடுத்து OK செய்யுங்கள் ,
அவ்வளவு தான் , உங்கள் pen டிரைவ் மீண்டும் செயல் படும் ,
மீண்டும் லாக் செய்வதற்கு அதே போல் செய்யவும் , ஒன்று இரண்டு
முறை செய்தால் சரியாக வரும் , உபயோகப் படுத்திப் பாருங்கள் ,
இந்த பதிவு பிடித்திருந்தால் மறக்காமல் வாக்களித்து ஆதரவு
தருமாறு கேட்டுக் கொள்கிறேன்
உங்கள் கருத்துக்காக காத்திருக்கும் டவுசர் பாண்டி .