பாண்டி அகராதி

இன்னாபா = என்ன , வன்கம் = வணக்கம் , டாங்குசுபா = நன்றி , இனி மேட்டு = இனிமேல் , மெர்சலாவாதே = பயப்படாதே , டகால்ட்டி = ஏமாற்றுதல் , கலீஜா = அசிங்கமாக , சொம்மா = சும்மா , பிரீலே = புரியவில்லை , டாமாகோலீ = பெரியதாக , கீறியே = இருக்கின்றாய் , மன்சாலு = மனிதர்கள் , அக்காங் =ஆமாம் , பேஜாரா பூட்சி = கஷ்டமாக இருக்கிறது , அந்தே மேரி = அது மாதிரி , கொரலுகுட்தேன் = குரல் கொடுத்தேன் , சோக்கு = அழகாக , பெல்லக்கா பையன் = சின்னப் பையன் , தோஸ்துக்கோ = தோழர்கள் , மட்ச்சீ வந்தே = மதித்து வந்தாய் , கீது = இருக்கிறது , பாந்த்ரா பாந்த்ராவ = பெரிது பெரிதாக , குன்சா = அதிர்ஷ்டவசமாக , ரோசகாரமன்சன் = தன்மானமுள்ள மனிதன் , டிமிக்கி குட்தாம்பா = ஏமாற்றிவிட்டான் , கொட்டா = தியேட்டர் , பகுரா = பகட்டாக , சல்பேட்டா = சரக்கு , அப்பால = பிறகு , ஓர = சாராயம் , பிகிலு = சரியாக , உஸ்தாது = மிடுக்காக, டுபாகூரு = பொய் ,டாணாகார் - போலீஸ்கார் , உதாரு உட்டேன் - பயம் காட்டினேன் , சோக்கு குஜிலி - அழகான பெண் , ஜவ்வு - அறுவை , சோக் மாலு - நிறைய பணம் , பிஸ்தா - ரவுடி , அபீட்டு - வந்து விட்டேன் ,

டவுசரு கண்ட நியாயம்

·

நானு ஊருக்கு போய் வந்த வொடனே, நம்ப 

ஏரியால கீற அல்லாருக்கும் நம்ப மேல ஒரு 
மரியாத வந்து, இன்னாங்கோ பாண்டி சார் ,டீ 
குடிகீறிய இல்ல காபி தண்ணி சொல்ட்டா ! 
அப்டீன்னு ஒரு மேரி நம்பல மச்சிகினாங்கோ ! 
நம்பாளு நொட்ட இன்னாடான்னா ! கலரு 
கண்ணாடி ,அப்பால வாசான வருமே ! அத்தே 
தடவிக்கினு ஒரே குசால் தான் போ.அப்ப தான் நம்ப 
ஏரியால மளீ கட ,அட அதாம்பா இந்த அல்லாமே 
விக்கற கட , அதான் , அதுக்கு நா ஒரு கூள் ட்ரிங்கு 
குடிக்கலான்னு, போனே, அங்க பாத்தா 
ஒரு போர்ட்டு வச்சி கீது, அதுல போட்டு கீது ..  
"கான மயிலாட
கடன் வந்து மேலாட
வாங்கியவன் கொண்டாட
நான் இங்கு திண்டாட
தயவு செய்து
கடன் கேட்காதிர்கள் "  

அப்டீன்னு போட்டு இர்ந்துசி , அவன கூப்ட்டு, டேய் , 
கசமாலம் இன்னடா இதுல எழதி கீது அப்டீனு கேட்டேன் ,
அதுக்கு அவன், டவுசரு இன்ன பிரியல உனக்கு நீ தான் 
உஸ்தாது கணக்கா ,ஊருக்கு அல்லாம் போய் வந்தியே ! 
இன்னா டவுட்டு சொல்லு அப்டீன்னா !
அதுக்கு நா டேய் இதுக்கு வரிக்கு வரி நீ எனக்கு அர்த்தம் 
சொல்லு இல்லன்னா உன் நெஞ்சில கீற மஞ்சா சோத்த 
எட்துடுவேன் அப்டீன்னு கொரலு உட்டேன் ,அதுக்கு 
அவன் இரு நா சொல்லறேன், இன்னுட்டு கான மயிலாட , 
அப்டீனா காட்டுல மயில் டான்சு ஆடுது, அடுத்து கடன் 
வந்து மேலாட - அப்டீன்னா , கடன்னு நம்ப மேல 
டான்சு ஆட, அடுத்து வாங்கியவன் கொண்டாட உன்ன 
மேரி ஆளுங்கோ , குசலா ! இருக்க சொல்ல,  
நான் இங்கு திண்டாட - நா நாமத்த போட்டுக்க ,  
தயவு செய்து கடன் கேட்காதிர்கள் " உன்ன கெஞ்சி
கேட்டு கீறேன், கடன் மட்டு சொல்லாதேபா !! 
இத்தா மேட்டரு , இன்னு சொல்லி ஒரு வையா 
முட்சாம்பா , எனுக்கு கோவமான கோவம்
வந்து அவன புட்சி  டேய் சோமாறி ,  
மயிலு காட்ல கீது அது டான்சு அடனா, உனுக்கு 
இன்னா ? அப்பால ,உனுக்கு கடனு கீதுன்னா ,
அத்த நீ தாண்டா சோமாரி அடிக்கணும் அத்த 
வுட்டுட்டு ,??  நீ நாமாத்தன்னா போட்டுக்கோ ! 
இல்ல காட்டி வேற எத்தனா போட்டுக்கோ ? 
எனுக்கு இன்னடா ? ஓயுங்கு மரியாதையா ,இந்த 
போர்ட எட்துடு , கடன் இல்லன்னா !
"நம்ப கடைல கடன் இல்ல" அப்டின்னு 
எய்து இன்னு சொல்லி ரெண்டு போடு போட்டுட்டு 
அப்பால தான் நா ஊட்டுக்கே வந்தேன் .  
பின்ன இன்னாபா ! ஒரு நியாயம் வாணாம் ! 

நீயே சொல்லு ????????


10 கருத்துகள்:

வேலன். said...

கடன் கேட்காதிர்கள் - கேட்காதீர்கள் என வரவேண்டும் டவுசர்பாண்டி...

இதுக்குதான் மழைக்காவது ஸ்கூலான்ட ஒதுங்கனும்னு சொல்லுவாங்க...
வரட்டா...

வாழ்க வளமுடன்,
வேலன்.

டவுசர் பாண்டி said...

எங்கப்பா நம்ப ஏரியா ,பக்கமே காநோம், காலீலையே, வண்டே, ஒரு வாய் காபி தண்ணி குட்சீட்டு போப்பா ! அதான் மருவாதி .அக்காங் !!!!!

டவுசர் பாண்டி said...

//கடன் கேட்காதிர்கள் - கேட்காதீர்கள் //

ரெண்டுதுக்கு யீன்னா, நம்ப டவுசரு பாண்டி அகராதில படிப்பே ஏர்ல பா ,அப்பால அல்லாம் ஒன்னு தான் ,நம்பளுக்கு மேட்டரு மிக்கியம், அதாவர்ட்டா .

Mohan said...

யேப்பா டவுசரு! அப்டி எய்தி வச்சதில என்னாத்த அநியாயத்த கண்டுகின!
ஒரு நல்ல கானாக் கணக்கா ஜோராதானக் கீது! அத அப்டியே வுட்ருப்பா, அக்காங்!!

நட்புடன் ஜமால் said...

நல்லா குயிக்கிறாய்ங்கப்பா வியக்கம்

டவுசர் பாண்டி said...

மோகனு அண்ணாத்தே , நீயே !
சொல்லு இந்த அநியாயத்த,
இவங்கோ போர்டு போடுவாங்களாம் !
நம்பள்லாம் கடன் கிடன் ,
சொல்ல கூடாந்தாம்பா ! இன்னா
அநியாயம் பாத்தியா ?

டவுசர் பாண்டி said...

ஐயோ ! எங்க ஜமாலு அண்த்தே
எப்பிடி கீறே அண்த்தே ?
நம்ப ஏரியால அல்லறோம் நல்லா
கீரங்களா ?அடிக்கடி வண்டு
போ அண்த்தே !

sakthi said...

கான மயிலாட
கடன் வந்து மேலாட
வாங்கியவன் கொண்டாட
நான் இங்கு திண்டாட
தயவு செய்து
கடன் கேட்காதிர்கள் "

nalla kavithai

டவுசர் பாண்டி said...

//nalla kavithai//

- sakthi சொன்னது.
அண்ணாத்தே ,,
மொத தபா நம்ப ஏரியாக்கு வந்ததுக்கு
டான்குசுபா , அடிக்கடி வாப்பா !!

ivingobi said...

innapa tavusaru un area pakkam vanthaavae vayithu valiyoda thaan poganum pola keethu pa... orea damasa keethu pa akkanggg..........

கருத்துரையிடுக

.
.
எதாவது புரீரா மேரி எழ்து தலீவா !! .

நம்ப பேட்டைக்கி வந்து , நம்பள, கண்டுகுனதுக்கு ரொம்ப டாங்க்ஸ், வாஜாரே !! அடிக்கடி வந்துட்டுப் போங்க தலீவா !!

இப்ப நேரம் / தேதி

அவாடு குத்தாங்கோ

Photobucket Photobucket

50 -வது பதிவிற்காக, சகோதரி ஜலீலா கொடுத்த விருது

Photobucket

BEST TECHNICAL AWARD

Photobucket Photobucket

இங்கல்லாம் கீறேன்.

அடிக்காதீங்க !! !! !!!

 

IcyBlue | Copyright © 2009 - Blogger Template Designed By Simrandeep Singh