பாண்டி அகராதி

இன்னாபா = என்ன , வன்கம் = வணக்கம் , டாங்குசுபா = நன்றி , இனி மேட்டு = இனிமேல் , மெர்சலாவாதே = பயப்படாதே , டகால்ட்டி = ஏமாற்றுதல் , கலீஜா = அசிங்கமாக , சொம்மா = சும்மா , பிரீலே = புரியவில்லை , டாமாகோலீ = பெரியதாக , கீறியே = இருக்கின்றாய் , மன்சாலு = மனிதர்கள் , அக்காங் =ஆமாம் , பேஜாரா பூட்சி = கஷ்டமாக இருக்கிறது , அந்தே மேரி = அது மாதிரி , கொரலுகுட்தேன் = குரல் கொடுத்தேன் , சோக்கு = அழகாக , பெல்லக்கா பையன் = சின்னப் பையன் , தோஸ்துக்கோ = தோழர்கள் , மட்ச்சீ வந்தே = மதித்து வந்தாய் , கீது = இருக்கிறது , பாந்த்ரா பாந்த்ராவ = பெரிது பெரிதாக , குன்சா = அதிர்ஷ்டவசமாக , ரோசகாரமன்சன் = தன்மானமுள்ள மனிதன் , டிமிக்கி குட்தாம்பா = ஏமாற்றிவிட்டான் , கொட்டா = தியேட்டர் , பகுரா = பகட்டாக , சல்பேட்டா = சரக்கு , அப்பால = பிறகு , ஓர = சாராயம் , பிகிலு = சரியாக , உஸ்தாது = மிடுக்காக, டுபாகூரு = பொய் ,டாணாகார் - போலீஸ்கார் , உதாரு உட்டேன் - பயம் காட்டினேன் , சோக்கு குஜிலி - அழகான பெண் , ஜவ்வு - அறுவை , சோக் மாலு - நிறைய பணம் , பிஸ்தா - ரவுடி , அபீட்டு - வந்து விட்டேன் ,

ஒரு மிக்கியமான மேட்டரு!

·

சும்மா பாஞ்சு பாஞ்சு அலுத்து போயி

அட நம்ப எலீக்சனு வந்து ட்துபா ,  
நம்ம நாடாளுமன்ற தேர்தலை தான்
சொல்றேன். நம்ம தமிழ் நாட்டு நிலைமையை 
கொஞ்சம் பார்போம் , இந்த கூட்டணி அந்த
கூட்டணி, இன்னு நம்ம தலைவருங்க 
சும்மா பேஜாரா பூடாங்கப்பா ! நம்ப
ஜனங்க இன்னாடான்னா இது வரிக்கும்
யாரையும் கண்டுக்கல, இந்த முறை நம்ப
அண்ணாத்தே! நெலமை தான் ஒன்னும்
பிரியலப்பா , அவர யாரும் சேத்துக்கலன்னா!
இன்னாப்பா பண்றது ? நம்ப கலைஞ்சரு 
அண்ணாத்தே கூட இந்த காங்கரசு கட்சி கீது ,
அப்பால உன்னும் நம்ப விஜீகாந்து கூட 
கலைஞ்சரு கட்சி கூட தான் போவரப்போல கீது ,
அம்மா கட்சில இது வரிக்கும் இந்த கம்மீ நிச்டு
அட பேரு செரியா வரலப்பா ! உன்னும் இந்த சினிமா
ஆச்டறு கட்சி, அப்பால உன்னும் கீற எல்லா 
கட்சிக்களுக்கும் சும்மா ஜூரம் வந்தாம்மேரி,
நம்ப கபாலீகும் கட்சி ஆசை வந்தூட்சீபா 
அதனால இந்த தடவ நம்ப தோசுத்துக்கு தான் 
நம்ப ஒட்டு , ஆனா எந்த தோகீதில நிக்காலாமொன்னு
நீங்களே நல்லா ரோசன பண்ணி நம்ப கிட்ட
சொல்லுங்கப்பா ! அட புள்ள ஆச படுது நின்னுட்டு
தான் கௌலீச்சிட்டு போட்டுமே ! நம்பளுக்கும் 
ஒரு ஒத்தாசயா இருக்கும் , எந்த தோகீதில 
நிக்காலாமொன்னு சீக்கீரமா எளுது அண்ணாத்தே !


மேட்டர பட்சிட்டியா அண்ணாத்தே ! அப்பிடியே 
நம்ப கபாலி பேர சொல்லி ஒரு ஓட்ட போடு தலீவா ! ரொம்ப டாங்க்ஸ்பா ,
3 கருத்துகள்:

டவுசர் பாண்டி said...

அட இன்னாப்பா! இது அக்குறும்பா கீது நம்ப கபாலிய எலீச்சுன்னுல நிக்க வானாமுன்னு சொல்றாக்களா? ஒண்ணுமே பிரியலீயே !

ஆனந்த். said...

உன்க்கு எங்க நிக்க்கலாமின்னு தோணுதோ அங்க நில்லம்ப்பா

R.Gopi said...

தல கபாலி

நீ எங்க வேணும்னாலும் நில்லுப்பா.......... ஆனா, கோபாலபுரம் பக்கம் மட்டும் போயிடாத......

அப்பாலிக்கா, ஒன் டவுசர் உன்னுது இல்ல..........

கருத்துரையிடுக

.
.
எதாவது புரீரா மேரி எழ்து தலீவா !! .

நம்ப பேட்டைக்கி வந்து , நம்பள, கண்டுகுனதுக்கு ரொம்ப டாங்க்ஸ், வாஜாரே !! அடிக்கடி வந்துட்டுப் போங்க தலீவா !!

இப்ப நேரம் / தேதி

அவாடு குத்தாங்கோ

Photobucket Photobucket

50 -வது பதிவிற்காக, சகோதரி ஜலீலா கொடுத்த விருது

Photobucket

BEST TECHNICAL AWARD

Photobucket Photobucket

இங்கல்லாம் கீறேன்.

அடிக்காதீங்க !! !! !!!

 

IcyBlue | Copyright © 2009 - Blogger Template Designed By Simrandeep Singh