பாண்டி அகராதி

இன்னாபா = என்ன , வன்கம் = வணக்கம் , டாங்குசுபா = நன்றி , இனி மேட்டு = இனிமேல் , மெர்சலாவாதே = பயப்படாதே , டகால்ட்டி = ஏமாற்றுதல் , கலீஜா = அசிங்கமாக , சொம்மா = சும்மா , பிரீலே = புரியவில்லை , டாமாகோலீ = பெரியதாக , கீறியே = இருக்கின்றாய் , மன்சாலு = மனிதர்கள் , அக்காங் =ஆமாம் , பேஜாரா பூட்சி = கஷ்டமாக இருக்கிறது , அந்தே மேரி = அது மாதிரி , கொரலுகுட்தேன் = குரல் கொடுத்தேன் , சோக்கு = அழகாக , பெல்லக்கா பையன் = சின்னப் பையன் , தோஸ்துக்கோ = தோழர்கள் , மட்ச்சீ வந்தே = மதித்து வந்தாய் , கீது = இருக்கிறது , பாந்த்ரா பாந்த்ராவ = பெரிது பெரிதாக , குன்சா = அதிர்ஷ்டவசமாக , ரோசகாரமன்சன் = தன்மானமுள்ள மனிதன் , டிமிக்கி குட்தாம்பா = ஏமாற்றிவிட்டான் , கொட்டா = தியேட்டர் , பகுரா = பகட்டாக , சல்பேட்டா = சரக்கு , அப்பால = பிறகு , ஓர = சாராயம் , பிகிலு = சரியாக , உஸ்தாது = மிடுக்காக, டுபாகூரு = பொய் ,டாணாகார் - போலீஸ்கார் , உதாரு உட்டேன் - பயம் காட்டினேன் , சோக்கு குஜிலி - அழகான பெண் , ஜவ்வு - அறுவை , சோக் மாலு - நிறைய பணம் , பிஸ்தா - ரவுடி , அபீட்டு - வந்து விட்டேன் ,

இதனால சகலமானவங்களுக்கும் தெரிவிப்பது இன்னான்னா ...

·

ஒரு கற்பனை பேட்டி, 


( ரொம்ப நாள் ஆச்சி, பேட்டி எட்து ) டவுசர் பாண்டி, நொட்ட சேகர், இந்த முறை, மைக்கு, புட்சிக்க நம்ப குள்ள பாலுவ வேற கூட்டி கினு வந்தேன் அல்லாரும் நம்ப அறிவாலயம் வந்தாச்சி, 

( உள்ள போவரத்துக்குள்ள யப்பா !! வேத்து பூட்ச்சிபா )

டவுசர்; தலீவா !! வணக்கம், எப்பிடி கீற ?

கலைஞர்: வா என் கண்மணி, தேர்தலுக்கு முன் பார்த்தது. எப்படி இருக்கிறாய்?

டவு ; நா நல்லா தான் கீறன், சொம்மா, சாவுக்கு சங்கு ஊதுனா மேரி, மொத்த பேரையும் ஊட்டுக்கு அம்சிட்டியே, இத்த பத்தி நீ இன்னா சொல்ற ?

கலை ; காட்டாறு போல நம் தம்பிகளாம் கழகக் கண்மணிகள், வீறு கொண்டு எதிரியின் படைகளை, ஓட ஓட விரட்டி, களத்திலே புது ஒரு மௌன கீதம் இசைத்திட்டார்கள். என் சொல்வேன்,

டவு ; ஒரு எழவும் பிரில, நா இன்னா கேட்டேன், நீ இன்னா சொல்ற , செரி, அத்த வுடு , சோக்கா, ஊ புள்ளங்கோ ரெண்டு பேரையும், ராஜா மேரி ஆக்கிட்ட அத்த பத்தி சொல்லு ?

கலை ; மனதில் ஈரம் இல்லாமல் பேசாதே, இந்த இடத்திற்கு அவர்களை கொண்டு வர நான் பட்ட பாடு எனுக்கு தான் தெரியும். இருவரும் கழகதிருக்கு ஆற்றிய பணிகள் ஏராளம்

டவு ; தெரியும், தெரியும், செரி உங்க இளவரசிய இன்னாத்துக்கு கலட்டி உட்டுட்டே.

கலை ; யாரை கேட்கிறாய் ?

டவு ; கனி மொழி அம்மாவத்தாம்பா கேக்குறேன்.

கலை ; சமயம் வரும் போது அவர்களின், திறமைக்கு ஏற்ப பதவி தரப்படும்.

டவு ; அப்போ , இப்ப பதவி வங்கனவுங்கோ அல்லாரூம், தெறம சாளிங்கோ இல்லியா ?

கலை ; யாரடா ! இவன் தூக்கி வெளியே போடு .  

( டவுசர் எஸ்கேப் , அடுத்து நம்ப கேப்டன் வீடு )  

டவு ; வாஜாரே, வணக்கம்.

கேப் ; வா டவுசரு , சுகமாக இருக்கிறாயா ?

டவு ; இன்னாத்த சொகத்த கண்டேன் , ம்ம் இந்த பாழா போன சனக்கோ உனுக்கு ஒட்டு
போடல பத்தியா ? எனுக்கு அதுக்கே , சொம்மா மொளகா கட்சா மேரி கீது பா .

கேப் ; வெற்றியும் தோல்வியும் வீரனுக்கு சகஜம் .

டவு ; அதாம்பா , எனுக்கு கூட சந்தேகம், ஒரு பழ மொழி கீது, அழம் தெரியாம கால உடாதே இன்னு , நீ அத்த படிக்கலியா?

கேப் ; சும்மா , வெந்த புண்ணில் வேல உடாதே , டவுசரு ,

டவு ; எங்க உங்க ஊட்டு அம்மா , இந்த எலிக்சன்னுல, சொம்மா கீ கீன்னு கீச்சிட்டான்களே,

கேப் ; அதனால தான், ரெஸ்ட் எடுக்க போய் இருக்கின்றார்கள்.

டவு ; நீ கத்துன கத்துக்கு ஒரு இடமாவது வந்து இருக்கலாம், நீ உன்னூ கொஞ்சம் கருப்பா ஆனது தான் மிச்சம் .

கேப் ; எம்மேல, உனுக்கு இருக்குற பாசம் கூட இந்த மக்களுக்கு இல்லையே டவுசரு.

டவு ; செரி, செரி , அழுவாதே இனி மேட்டாவது பாத்து சூசகமா, நட்த்துக்கோ, வர்ட்டா .  

( டேய், நொட்ட, இந்த அம்மா எங்கட ஆளையே காநோம், டவுசரு வண்டிய கொட நாட்டுக்கு வுடு , அங்க தான் கீறாங்கோ, ) 

கொட நாட்டுக்கு வெளியே , ஏம்பா !! உள்ள போய், இந்த மேரி டவுசரு வந்து கீரான்னு ஒரு வார்த்த சொல்லு ,

வாட்ச் மேன் : யோவ், தள்ளி போயா , வந்டாருடா வடிவேலு

டவு ; ஏம்பா, கூட்டாளி நீ நம்ப ஆளா போய்ட்டே, ரவ கதுவ தெறந்து வுடேன், போ சொல்ல உன்ன கவுன்சிக் கிறேன். 

வாட் ; தே, சுருக்கா போய் உசாரா வந்துடுப்பா, ரெண்டு பேரும் , சொம்மா காண்டா கீறாங்கோ. 

டவு ; செரி ,செரி , டூ மினிட்ல வந்துட்ரம்பா .  


டவு ; அம்மா , வணக்கம், அக்கா வணக்கம் .

ஜெய ; இந்த கன்றி புருட்ட யாரு உள்ள விட்டது . டீ, சசி, கம் கம் , இந்த பசங்கள இன்னான்னு கொஞ்சம் கேளு .

சசி ; யாரு நீங்கலாம் ?

டவு ; யக்கா ! என்ன அடையாளம் தெரிலையா ? நல்லா பாரு யக்கா !!! நான் தான் டவுசரு பாண்டி .

சசி ; அக்கா , இவுங்க நம்ப பேட்ட நிருபருங்க அக்கா, நைஸ் மேன் .

ஜெய ; சரி , என்ன வேணும் .

டவு ; அம்மா உங்க கிட்ட சில கேள்வி .

ஜெய ; என்னது என் கிட்ட கேள்வியா ? எப்பவும் நான் தானே கேள்வி கேப்பேன் .

டவு ; சொம்மா, சில கேள்வி தாம்மா !!

ஜெய ; சரி கேள் .

டவு ; இந்த மேரி ஒரு தோல்விய நீங்க எதிர் பாத்தீங்களா?

ஜெய ; யார் தோத்தது, இது வந்ததே பெரி விஷயம் .

டவு ; செரி, இன்னாமோ ஒட்டு போட்டில சூது கீது இன்னு சொன்னீங்களே ? அது இன்னா மேரி கம்பிளைண்டு .

ஜெய ; சும்மா, நம்ப ஆளுங்க எல்லாம் சொல்ல சொன்னாங்கோ அதான் சொன்னேன் .

டவு ; அப்போ, ஒட்டு போட்டில வொண்ணும் இல்ல, இல்லையா ?

ஜெய ; அட நீ வேற சும்மா இந்த தேர்தல நியாபகப் படுத்தாதே, அடுத்த விஷயம் என்ன ?

டவு ; எப்ப மெட்ராஸ் வந்து உங்க கட்சி காரங்கள பாக்க போறீங்கோ ?

ஜெயா ; ரெஸ்ட் எடுத்து கொண்டு இருக்கிறேன் . இன்னும் ஒரு வருடத்தில் வந்து விடுவேன்

டவு ; அங்கு வந்த உடனே, இன்னா பொது குழுவ 
கூட்ட போறீங்களா ?

ஜெயா; சீ , சீ , உடனே பையனூர் பங்களா சென்று ஓய்வு எடுப்பேன் .

டவு ; அதுக்கு எத்தினி நாளு ஆவும், ?

ஜெயா ; உனக்கு எதற்கு நான் பதில் சொல்ல , சசி முதல்ல இந்த ஆள தூக்கி வெளிய போடு.  
( டவுசரு எஸ்கேப் , நொட்ட, டேய் டவுசரு அடுத்து நம்ப எங்க போறோம் , யப்பா !!நொட்ட இந்த எலீச்சன்ள சொம்மா வாந்தி , பேதி ஆனா மேரி கீறாங்களே , நம்ப டாக்டரு அய்யா , அவுர ரவ கண்டு கினு போலாம்பா )  

டவு ; அய்யா !! வணக்கம் , நல்லா கீறிங்களா ?

அய்யா; வா !! தம்பி , நான் நலமாக தான் இருக்கிறேன் .

டவு ; உங்க கட்சி இன்னா மேரி கவுந்துடுச்சி, அப்ப கூட சொம்மா உஸ்தாது மேரி கீறியே ?

அய்யா ; இது ஒரு தோல்வியா ? இந்த மாயா உலகத்தில் எந்த முறையுலோ எங்களையும் மக்களையும் ஏமாற்றி அவர்கள் பெற்ற வெற்றி ஒரு வெற்றியா ?

டவு ; அப்ப, இன்னா சொல்றே , அவுங்கோ அல்லாம் டுபாகூரு பண்ணி தான் கெலிசங்கோ இன்னு சொல்றிங்களா ?

அய்யா ; பின்பு , இந்த தேர்தல் மட்டும் நேர்மையாக நடந்து இருந்தால் எங்களுக்கு இந்த தோல்வி இல்லை ,

டவு ; செரி , இனிமேட்டு இன்னா தான் பண்ண போறீங்கோ ?

அய்யா ; எனக்கும் கொஞ்சம் ரெஸ்ட் வேண்டாமா ?

டவு ; செரி எத்துக்கோ , அப்பால இன்னா பண்ண போறே ?

அய்யா; இப்போது தான் எங்களின் பசுமை தாயகம் வைத்த மரங்களை போய் பார்த்தேன் இன்னும் ஒரு ஆறு மாதத்தில் அவை செழிப்பாக வளர்த்து விடும் .

டவு ; ????????????? இன்னாட நொட்ட இவுரு போற ரூட்டே ஒரு மேரி கீது ? எகுறு நம்ப ஜூட்டு..

அய்யா ; டவுசரு நில்லு நில்லு ..........  

டவு ; மாட்டேன் மாட்டேன் ..................................................


கருத்து, சொல்லு நைனா புட்ச்சா வோட்டு போடு.8 கருத்துகள்:

யூர்கன் க்ருகியர் said...

உங்கிட்ட படா டமாசாகீது போ !

டவுசர் பாண்டி said...

யூர்கன் க்ருகியர்.அண்ணாத்தே !!! கோசிகாதே, உம் பேரே எனுக்கு வரலபா !!! அக்காங் எனுக்கு அத்தா கண்டி ரொம்ப பீளிங்குமா !!! நம்ப ஊடண்டண்ட வந்து கண்டுகுனதுக்கு டான்குசு வாஜார்

SUBBU said...

சோக்கா தெரிவிச்சப்பா டவுசர்...

டவுசர் பாண்டி said...

அல்லாருக்கும் பிரியராமேரி ,
தாம்பா இந்த

டவுசரு சொல்லுவான் !!!!!!!!

அப்பால, ஹி, ஹி , மொத தபா , நம்ப ஊட்டாண்ட வந்ததுக்கு ரொம்ப டான்குசுபா .

அடிக்கடி வா தலீவா !!

Tech Shankar said...

s u p e r

டவுசர் பாண்டி said...

சலாம் வாஜாரே, ரொம்ப டாங்க்ஸ்பா

பொன் மாலை பொழுது said...

அடி பின்னிட்டுக்கீற நைனா. ரெண்டு பெக்கு உட்டுகின மாறீ கீது. என்கு ரொம்ப புட்சிகீது.
சரிபா வர்ட்டா......

டவுசர் பாண்டி said...

//அடி பின்னிட்டுக்கீற நைனா. ரெண்டு பெக்கு உட்டுகின மாறீ கீது.//

;- கக்கு - மாணிக்கம்.

வா அண்ணாத்தே ! மொதல்ல உனுக்கு ஒரு வன்கம், இந்த டவுசர மத்சி நம்ப ஊட்டாண்ட வந்ததுக்கு, அப்பால நம்ப பேட்டைல வேற குட்தனம்,வந்துகினதுக்கு,
ரொம்ப ரொம்ப டாங்க்சுபா !!
உன்ன மேரி ஆள தான் எனுக்கு ரொம்ப புடிக்கும், நம்ப பாஷ தூள் டக்கரா பேசறியே நைனா !! சோக்கு தான்.
(அட அந்த ரெண்டு பெக்குல ரவவாது நம்பளுக்கு தெளிக்க கூடாதா நைனா?)

கருத்துரையிடுக

.
.
எதாவது புரீரா மேரி எழ்து தலீவா !! .

நம்ப பேட்டைக்கி வந்து , நம்பள, கண்டுகுனதுக்கு ரொம்ப டாங்க்ஸ், வாஜாரே !! அடிக்கடி வந்துட்டுப் போங்க தலீவா !!

இப்ப நேரம் / தேதி

அவாடு குத்தாங்கோ

Photobucket Photobucket

50 -வது பதிவிற்காக, சகோதரி ஜலீலா கொடுத்த விருது

Photobucket

BEST TECHNICAL AWARD

Photobucket Photobucket

இங்கல்லாம் கீறேன்.

அடிக்காதீங்க !! !! !!!

 

IcyBlue | Copyright © 2009 - Blogger Template Designed By Simrandeep Singh