பாண்டி அகராதி

இன்னாபா = என்ன , வன்கம் = வணக்கம் , டாங்குசுபா = நன்றி , இனி மேட்டு = இனிமேல் , மெர்சலாவாதே = பயப்படாதே , டகால்ட்டி = ஏமாற்றுதல் , கலீஜா = அசிங்கமாக , சொம்மா = சும்மா , பிரீலே = புரியவில்லை , டாமாகோலீ = பெரியதாக , கீறியே = இருக்கின்றாய் , மன்சாலு = மனிதர்கள் , அக்காங் =ஆமாம் , பேஜாரா பூட்சி = கஷ்டமாக இருக்கிறது , அந்தே மேரி = அது மாதிரி , கொரலுகுட்தேன் = குரல் கொடுத்தேன் , சோக்கு = அழகாக , பெல்லக்கா பையன் = சின்னப் பையன் , தோஸ்துக்கோ = தோழர்கள் , மட்ச்சீ வந்தே = மதித்து வந்தாய் , கீது = இருக்கிறது , பாந்த்ரா பாந்த்ராவ = பெரிது பெரிதாக , குன்சா = அதிர்ஷ்டவசமாக , ரோசகாரமன்சன் = தன்மானமுள்ள மனிதன் , டிமிக்கி குட்தாம்பா = ஏமாற்றிவிட்டான் , கொட்டா = தியேட்டர் , பகுரா = பகட்டாக , சல்பேட்டா = சரக்கு , அப்பால = பிறகு , ஓர = சாராயம் , பிகிலு = சரியாக , உஸ்தாது = மிடுக்காக, டுபாகூரு = பொய் ,டாணாகார் - போலீஸ்கார் , உதாரு உட்டேன் - பயம் காட்டினேன் , சோக்கு குஜிலி - அழகான பெண் , ஜவ்வு - அறுவை , சோக் மாலு - நிறைய பணம் , பிஸ்தா - ரவுடி , அபீட்டு - வந்து விட்டேன் ,

டவுசருக்கு வந்த சோதன.

·
அல்சாமேரி குல்சா பார்டியா பூட்து பா, நம்ப நெலம, ஒரு நாளு காத்து
வாங்கறத்துக்கு பீச்சு பாக்கமா, டேரா போட்டம்பா, அப்போ நம்ப கிட்ட
வந்து ஒரு ஆளு,

இன்னாஒரே பீலிங்கா கீற மேரி கீது, இன்னா விஷியம் இன்னு கேட்டுகினான் ,

நா சொல்லிக்கினேன், தபாரு ராங் சைடுல வந்து டகால்டி காட்டாதே !!
நானே ஒரு மேரி கீறேன், போய்கீனே இரு இன்னு சொன்னேன்.

அதுக்கு, அந்த பிஸ்கோத்து பையன், எதுவா இருந்தாலும் சொல்லு டவுசரு,
சொம்மா கலாசிட்டு பூடுறேன். இன்னு சொன்னான்.

அது இல்லடா பேமானி, நேத்து நம்ப தோஸ்து ஒர்தர பாக்கறதுக்கு போய்
கினேன் , அவுரு இந்த கம்பீட்டரு போட்டி கீதே, அத்த வெச்சி கூட இன்னா
இன்னாவோ, பண்ணுவாங்களே , அந்த கம்பனிக்கு போனேன் .

அங்க இருந்த ஒரு குஜிலி நம்ப கிட்ட இன்னவோ இங்கிலீசுல டானா வேல
காடிட்சிபா, அது இன்னவோ , சொல்சீ , எனுக்கு ஒன்னிமே பிரியல ,
கட்சீல நம்ப தோஸ்து போட்டாவ காட்டி,

தே, இங்க பாரு மே , இந்த ஆளு நம்ப தோஸ்து இவர தான் நானு மீட்
பண்ணனும் அதுக்கு ஒரு ஏற்பாடு பண்ணு, இன்னு சொல்லி, ஒரே கட் அண்ட் ரைட்டா சொன்னம்பா !!

அப்பால தான் அந்த லூசு பொண்ணுக்கு, நம்ப சொன்னது பிரிஞ்சிது.

செரி , டவுசரு அதுக்கு போய் இன்னாத்துக்கு ஒரு பீலிங்கு காட்றே,
அதான் மேட்டரு முன்சீ போச்சே !!

போடா !! போடா !! சோமாறி , எதோ நானு கொஞ்சம் மூ கீஆளா இருக்க
சொல்லவே, இந்த ஒலகம் இப்பிடி கீதே ? உண்ணூம் ஒன்னிமே தெரியாத
ஆளா இருந்தா, பிஸ்கட்டு பண்ணிட்டு இருப்பாங்கோ பாரு,
இத நென்சி தான் நம்பளுக்கு ஒரே பீலிங்கு,

இல்ல நாம இன்னா வேற உலகத்திலையா கீறோம், நம்ப தமிழு நாட்டுல
தமில்லுல கேக்காத இன்னாவோ , வேற ஒரு மேரி கேட்டாக்கா !!

இன்னா பண்றது நீயே சொல்லு ??வாஜாரே, நீ எப்பிடி நெனைக்கிறே ? என்ன மேரி ஆளு கிட்ட போய் இந்த மேரி உஸ்தாது காமிச்சா , எனுக்கு கோவம் வராத இன்னா வரும், சொல்லு


10 கருத்துகள்:

SUBBU said...

சோக்காகீது சோதன வாஜ்ஜாரே :)

டவுசர் பாண்டி said...

என்ன மேரி ஆளுங்களுக்கு இந்த
மேரி சோதன அடிக்கடி
வர்து வாஜாரே, இன்னா தான்
பண்றதோ ? தெர்ல

கலையரசன் said...

மச்சி சோக்கா எலுதுறியே நீ..
மயின்டுல வச்சிகிறேன்!

அப்பாலிகா கண்டுகறேன்..
இப்ப பாலோ பண்றேன்..

டவுசர் பாண்டி said...

//மச்சி சோக்கா எலுதுறியே நீ..
மயின்டுல வச்சிகிறேன்!
அப்பாலிகா கண்டுகறேன்..
இப்ப பாலோ பண்றேன்..//

- கலையரசன்.


மொத தபா நம்ப ஊட்டாண்ட வந்ததுக்கு, ரொம்ப டான்குசு வாஜாரே,
நம்ப பேட்டைல கூட அதான்
சொல்லிகிறாங்கோ பா !!
(அட,மெய்யாலுமே தாம்பா)

பொன் மாலை பொழுது said...

அட இன்னா பாண்டி நீ இத்தகு போயி அல்டிகினு பீலிங்கு உட்டுகினு பீச்சாங்கரயாண்ட போயி குந்திகினு...... இன்னாபா நீ .... குஜிலீ பீட்று வுட்டா இன்னா ? நீ நாம லாங்குவேஜ்
எட்த்து உட்டுகினா அந்த குஜிலி பொண்ணு ஒடிபூடும் நைனா.

டவுசர் பாண்டி said...

நீ இன்னாதா இந்த டவுசர கூல் பண்ணாலும்,ஒரு பிஸ்கோத்து குஜிலி நம்ப கிட்ட, அதும் கக்கு- மாணிக்கம், கூட்டாளிக் கிட்டியே ! !

இது மேரி நடந்தா ? அப்பால நம்ப மருவாதி,( ? ) இன்னா ஆவறது சொல்லு நைனா ? அதாம்பா
பீலிங்கு.

Vadielan R said...

ரொம்ப நன்னாகீது தோழரே தொடர்ந்து எழுது சர்யா வரட்டா

நம்ம கடைப்பக்கம் வந்துட்டுப்போய் உங்க ஜனங்கட்ட சொல்லு தான்க்ஸு பா

Mohan said...

டவுஸர் அண்ணாத்தே ! எங்கியாவது போய் மாட்டிக்க்கீறீயே நைனா? சவுக்கியம்மா கீறியா நைனா?

டவுசர் பாண்டி said...

வடிவேலன் அண்ணாத்தே !! நீங்கல்லாம் பெரி பெரி ஆளுங்கோ !! இன்னாவோ , கூடம் அல்லாம் வெச்சிகீனு கீறீங்கோ !! நல்லா தாம்பா கீது !! வந்ததுக்கு ரொம்ப டாங்க்சுபா !!!!!!!

டவுசர் பாண்டி said...

மோகனு அண்ணாத்தே !! சவுக்கியமா கீறியா ? உன்ன பாத்தே ரொம்ப நாளாச்சிப் பா !!

உங்க ஜூட்டு உட்டுக் கினே ? செரி , செரி இப்பவாது வந்தியே !! ரொம்ப டாங்க்சுபா ,

அப்பால , நம்ப கதியே எங்கனா மாட்டிக் கீற மேரி தாம்பா ஆவுது, இன்னா பண்றது சொல்லு ?

கருத்துரையிடுக

.
.
எதாவது புரீரா மேரி எழ்து தலீவா !! .

நம்ப பேட்டைக்கி வந்து , நம்பள, கண்டுகுனதுக்கு ரொம்ப டாங்க்ஸ், வாஜாரே !! அடிக்கடி வந்துட்டுப் போங்க தலீவா !!

இப்ப நேரம் / தேதி

அவாடு குத்தாங்கோ

Photobucket Photobucket

50 -வது பதிவிற்காக, சகோதரி ஜலீலா கொடுத்த விருது

Photobucket

BEST TECHNICAL AWARD

Photobucket Photobucket

இங்கல்லாம் கீறேன்.

அடிக்காதீங்க !! !! !!!

 

IcyBlue | Copyright © 2009 - Blogger Template Designed By Simrandeep Singh