பாண்டி அகராதி

இன்னாபா = என்ன , வன்கம் = வணக்கம் , டாங்குசுபா = நன்றி , இனி மேட்டு = இனிமேல் , மெர்சலாவாதே = பயப்படாதே , டகால்ட்டி = ஏமாற்றுதல் , கலீஜா = அசிங்கமாக , சொம்மா = சும்மா , பிரீலே = புரியவில்லை , டாமாகோலீ = பெரியதாக , கீறியே = இருக்கின்றாய் , மன்சாலு = மனிதர்கள் , அக்காங் =ஆமாம் , பேஜாரா பூட்சி = கஷ்டமாக இருக்கிறது , அந்தே மேரி = அது மாதிரி , கொரலுகுட்தேன் = குரல் கொடுத்தேன் , சோக்கு = அழகாக , பெல்லக்கா பையன் = சின்னப் பையன் , தோஸ்துக்கோ = தோழர்கள் , மட்ச்சீ வந்தே = மதித்து வந்தாய் , கீது = இருக்கிறது , பாந்த்ரா பாந்த்ராவ = பெரிது பெரிதாக , குன்சா = அதிர்ஷ்டவசமாக , ரோசகாரமன்சன் = தன்மானமுள்ள மனிதன் , டிமிக்கி குட்தாம்பா = ஏமாற்றிவிட்டான் , கொட்டா = தியேட்டர் , பகுரா = பகட்டாக , சல்பேட்டா = சரக்கு , அப்பால = பிறகு , ஓர = சாராயம் , பிகிலு = சரியாக , உஸ்தாது = மிடுக்காக, டுபாகூரு = பொய் ,டாணாகார் - போலீஸ்கார் , உதாரு உட்டேன் - பயம் காட்டினேன் , சோக்கு குஜிலி - அழகான பெண் , ஜவ்வு - அறுவை , சோக் மாலு - நிறைய பணம் , பிஸ்தா - ரவுடி , அபீட்டு - வந்து விட்டேன் ,

நம்ப கிட்ட கீர பாண்டு -பேரு இன்னா ? எந்த பாண்டு கீது ? அதப் பாக்க !!

· 21 கருத்துகள்

வாஜாரே !! லேட்டா பதிவு போடறதுக்கு , எனுக்கு மன்னாப்பு குட்துடு தலீவா !! 



இப்போ !! நம்ப கம்யூட்டர் பொட்டில நெரியோ பாண்டுகளை, அதாம்பா !! 
எழத்து இன்ஸ்டால் பண்றோம் , 


நா கூட ஏற்கனவே தமிழ் பாண்டு 627 பாண்டு குட்துக்கீனு கீரேன்பா !! 
அத்த டவுன்லோட் பண்ணாதவங்கோ !! 


இங்க கிளிக் பண்ணி , எட்துக்கோங்க !! 


செரி , இப்போ மேட்டருக்கு வரேன் , இது மேரி நம்ப பொட்டில கீர 
பாண்டுங்கள , பாக்கறதுக்கு ஒரு சாப்ட்வேர் கீது தல !! 


அதுக்கு மொதல்ல அந்த சாப்ட்வேர் - இங்க கிளிக் பண்ணி 
டவ்ன்லோட் பண்ணுங்க , 


ரொம்ப சின்ன சாப்ட்வேர் தாம்பா ( 823 kb அளவு )  அப்பால அத்த நம்ப 
பொட்டில போட்டு வெச்சிட்டா , நம்ப கிட்ட கீர பாண்டு பேரு இன்னா !! 
ஏது ? இன்ற வெவரம் அல்லாம் தெரிஞ்சி பூடும் , 


அப்பால , அத்த போல்டு , அப்பால இட்டாலிக் இன்றா மேரி அல்லாம் 
மாத்திக்கலாம் , 


அட ரவ இங்க குட்துக்கீர போட்டாவ நீயும் தான் ரவ பாரேன் !! 
உனுக்கே பிரிஞ்சிடும் !! 









நம்ப தலீவர் மோகனு மோகனச்சாரல் )அண்ணாத்தையின் 
50 -வது பதிவுக்கு பாண்டியோட அன்பு விருது !! 









அப்பால இன்னா !! கொர நம்பளுக்கு !! ஜோரா ஒரு ஓட்ட தான் 
போடுங்க ,  தல !! 


மறக்காம உங்க கர்த்த சொல்லுங்க தலீவா !!   



நம்ப டெஸ்க்டாப்ப நாலா பிரிச்சி யூஸ் பண்ணுவது எப்படி ?

· 19 கருத்துகள்

எல்லாருக்கும் டவுசர் பாண்டியோட வணக்கம் பா !! 



போன பதிவு எல்லாருக்கும் புட்சிருக்கும் இன்னு நெனைக்கிறேன் , 
அப்பால இந்த தபா !! 


பதிவுல நம்ப  டெஸ்க்டாப்பு, பத்தி பாக்கலாம் தலீவா !! 
இது பத்தி நம்ப நண்பர் ஒர்த்தர் போட்டு இருந்தாலும் , அதுக்கு யூஸ் 
பண்ணது வேற சாப்ட்வேர் , 


அதுவும் இல்லாம , இது கொஞ்சம் சிம்பிளா கீரா மேரி , நானு 
நெனைக்கிறேன் பா !! அதா கண்டி இந்த மாடலு , 


இப்போ !! நம்ப டெஸ்க் டாப்ப , வந்து நாலா பிரிச்சிக்கலாம் , 
இந்த மாடலு ரொம்ப பேருக்கு யூஸ் ஆவும் , 


மிக்கியமா ஆபீசுல சொந்த வேலையா நெட் யூஸ் பண்ணும் போது 
உதவும் , நாம பாத்துக்கிட்டு இருந்த டெஸ்க் டாப்பையே மாத்தி 
உடனே வேற எட்துக்கினு வந்துடலாம் , 


நம்ப பாத்துக்கிட்டு இருந்த பேஜ் உம் ஒன்னியும் ஆவாது , மறுபடி அத 
கொண்டு வர்றதும் ரொம்ப ஈசியா இருக்கும் , quick ஐகாணுல போய் 
ஒரு கிளிக் பண்ணி , 

எந்த பேஜ் ஒனுமோ அத right ( or ) left key யூஸ் பண்ணி 
கொண்டு வந்து Enter பண்ணாப் போதும் , 


நமக்கு தேவையான டெஸ்க் டாப் வந்துடும் , இந்த சாப்ட்வேர் 
டவுன் லோட் பண்ண இங்கு கிளிக் செய்யுங்க , தலீவா !! 



























இந்த சாப்ட்வேர் டவுன் லோடு பண்ணி முடிச்சவுடன், ஓபன் பண்ணி 
ரன் பண்ணுங்க தல , 


உங்களுக்கு quick lanch ல ஒரு ஐக்கான் கிடைக்கும் , அதுல போய் right 
கிளிக் பண்ணாக்கா, உங்களுக்கு கீழே இருக்குறா மேரி வரும் , 
அதுல உங்களுக்கு வேண்டிய மாடல செலக்ட் பண்ணி ஓகே பண்ணுங்க , 


அப்புறமா left கிளிக் பண்ணாக்கா !! நீங்க செலக்ட் பண்ண மாடல்ல 
டெஸ்க்டாப் வந்துடும் , 














யூஸ் பண்ணிப் பாருங்க , உங்க கருத்த மறக்காம சொல்லி, 
அப்பிடியே ஒரு ஓட்ட குத்தி உடுங்க தலீவா !! 







நம்ப பேட்டைக்கி வந்து , நம்பள, கண்டுகுனதுக்கு ரொம்ப டாங்க்ஸ், வாஜாரே !! அடிக்கடி வந்துட்டுப் போங்க தலீவா !!

இப்ப நேரம் / தேதி

அவாடு குத்தாங்கோ

Photobucket Photobucket

50 -வது பதிவிற்காக, சகோதரி ஜலீலா கொடுத்த விருது

Photobucket

BEST TECHNICAL AWARD

Photobucket Photobucket

இங்கல்லாம் கீறேன்.

அடிக்காதீங்க !! !! !!!

 

IcyBlue | Copyright © 2009 - Blogger Template Designed By Simrandeep Singh