பாண்டி அகராதி

இன்னாபா = என்ன , வன்கம் = வணக்கம் , டாங்குசுபா = நன்றி , இனி மேட்டு = இனிமேல் , மெர்சலாவாதே = பயப்படாதே , டகால்ட்டி = ஏமாற்றுதல் , கலீஜா = அசிங்கமாக , சொம்மா = சும்மா , பிரீலே = புரியவில்லை , டாமாகோலீ = பெரியதாக , கீறியே = இருக்கின்றாய் , மன்சாலு = மனிதர்கள் , அக்காங் =ஆமாம் , பேஜாரா பூட்சி = கஷ்டமாக இருக்கிறது , அந்தே மேரி = அது மாதிரி , கொரலுகுட்தேன் = குரல் கொடுத்தேன் , சோக்கு = அழகாக , பெல்லக்கா பையன் = சின்னப் பையன் , தோஸ்துக்கோ = தோழர்கள் , மட்ச்சீ வந்தே = மதித்து வந்தாய் , கீது = இருக்கிறது , பாந்த்ரா பாந்த்ராவ = பெரிது பெரிதாக , குன்சா = அதிர்ஷ்டவசமாக , ரோசகாரமன்சன் = தன்மானமுள்ள மனிதன் , டிமிக்கி குட்தாம்பா = ஏமாற்றிவிட்டான் , கொட்டா = தியேட்டர் , பகுரா = பகட்டாக , சல்பேட்டா = சரக்கு , அப்பால = பிறகு , ஓர = சாராயம் , பிகிலு = சரியாக , உஸ்தாது = மிடுக்காக, டுபாகூரு = பொய் ,டாணாகார் - போலீஸ்கார் , உதாரு உட்டேன் - பயம் காட்டினேன் , சோக்கு குஜிலி - அழகான பெண் , ஜவ்வு - அறுவை , சோக் மாலு - நிறைய பணம் , பிஸ்தா - ரவுடி , அபீட்டு - வந்து விட்டேன் ,

நிரந்தரமாக - பைல்களை அழிக்க எளிய வழி

·
அல்லாருக்கும் இந்த டவுசர் பாண்டியோட வணக்கம் பா !!

போன பதிவுக்கு ஆதரவு குட்து, கருத்து போட்ட
தோஸ்துகளுக்கும், வருகை தந்தவர்களுக்கும் , ரொம்ப டாங்க்ஸ்பா !!

இந்த பதிவுல , நிரந்தரமா ஒரு பைல அழிப்பது எப்படி இன்னு ,
பாக்கலாம் ,

இப்போ , சாதாரணமா ஒரு பைல delete - பண்ணும் போது, அது
delete ஆகிடும் , அந்த பைல் நம்பளோட Recycle Bin -ல , போய்
உக்காந்துடும் ,

செரி, இன்னு நெறைய பேர் Shift + Delete யூஸ் பண்ணினால் சுத்தமா
அழிந்து பூடும் இன்னு நெனைப்பாங்கோ !! ஆனா !!

அது நம்மோட Hard Disk ல போய் உக்காந்துக்கும் , அந்த மேரி
நேரத்துல தான் இந்த சாப்ட்டு வேரு நமபுளுக்கு ரொம்பவே யூசு
ஆவுது தலீவா !!

இதும் பேரு Sure delete , இது ரொம்ப சின்ன சாப்ட் வேர் தான் , இத்த
down load , பண்ண இங்கு , down load பண்ணி முடிச்ச வுடன் , run
குட்துடுங்கோ ,

உங்களுக்கு இது மேரி ஒரு ஐக்கான் வரும் , இப்போ !! இத்த கிளிக்
பண்ணி ,

கீய கீரா மேரி வரும் , அதுல Add file இன்னு கீர்த அமுக்கி , அப்பால
உங்களுக்கு தேவை இல்லாத பைல அதுல Add பன்னுக்கோ !!

ஒரு வேல தப்பான பைல சேத்துட்டா கூட இதுல clear list இன்னு
ஒரு ஆப்சனு கீது , அத்த அமுக்கி மறுபடியும் , செரியான பைல குட்து ,
next பட்டன அமுக்குங்கோ , மறுபடியும் next அமுக்கர்த்துக்கு மின்ன
கன்பார்ம் பண்ணிக்கினு next அமுக்குனா ,

இப்போ !! அந்த பைல் சுத்தமா !! அழிஞ்சி பூடும் . இன்னா தான்
recovery soft ware போட்டாலும் இதும் மூலமா அழிச்சது
கெடைக்காது , தலீவா !!

இத்த யூஸ் பண்ணி பாருங்கோ !! அப்பிடியே ஒரு ஒட்டு போட்டு ,
உங்க கருத்த சொல்லுங்கோ !! தலீவா !!


34 கருத்துகள்:

பொன் மாலை பொழுது said...

அண்ணாத்த லேட்டா வந்துகினாலும் லேட்டஸ்டா ஏதானும் குட்திகினுதான் கீறாரு. நீயீ பூந்து வெள்ளாடு தொற. நம்ம பேட்டைல பாண்டியண்ணாத்ததான் ஹீரோ. மெய்யாலுமே ரொம்ப யூஸ் புல்லான வெசயத்த தான் இப்போவாம் சொல்லிகினுகீராறு. சலாம் வாஜாரே!

டவுசர் பாண்டி said...

இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

டவுசர் பாண்டி said...

யப்பா !! தொரெய் நீங்கல்லாம் பெரி மான்சளுங்கோ !!

உங்குளுக்கு நேரமே கெடிக்குதோ ? இல்லியோ ? போன பதிவுல ஆளையே காணோம் !!

ஐயே !! மாம்ஸ் தான் இப்பிடின்னா , மாம்ப்லே , நம்பல மறந்தே பூட்டாரு !! இருக்கட்டும் பா !! அப்பால கவ்ன்சிக்கிறேன் !!

டவுசர் பாண்டி said...

//அண்ணாத்த லேட்டா வந்துகினாலும் லேட்டஸ்டா ஏதானும் குட்திகினுதான் கீறாரு//-கக்கு - மாணிக்கம் கூறியது,

ரொம்ப டாங்க்ஸ், உங்க இனிமியான கர்துக்கு + ஓட்டுக்கு நன்றிங்கோ !!

வேலன். said...

மாப்ளை மனது சரியில்லாமல்கீராருப்பா...அதான் மாம்ஸ் மட்டும்மில்லைமல் யாரையும் கண்டுக்காம கீராரு...அப்பாலா
பதிவு சூப்பரு...வராட்டா...வேலைஇருக்கு
அப்பாளிக்கா வர்ரன்

வாழ்க வளமுடன்,
வேலன்.

யூர்கன் க்ருகியர் said...

ஐயோ அய்யோ !!
மறக்க கூடிய நண்பர்களா நாம ?
என்றும் அன்புடன்
யூர்கன் க்ருகியர்.

யூர்கன் க்ருகியர் said...

டவுசர் சார்,

மிக பயனுள்ள விடயம்.
விண்டோஸ் இன் மூலமாக நாம் பெர்மனன்ட் ஆக அழிக்க முடியாதா :)

யூர்கன் க்ருகியர் said...

விண்டோஸ் மூலமாக அழிக்க முடியுமெனில் அட்மினிஸ்ட்ரேடர் லாகின் இருந்தால்தான் முடியுமா அல்லது மத்த யூசர் லாகின் கூட பண்ண முடியுமா?

டவுசர் பாண்டி said...

//அப்பாலா பதிவு சூப்பரு.//- வேலன். கூறியது,


உங்க கர்துக்கு ரொம்ப டாங்க்ஸ் , வாஜாரே !!

டவுசர் பாண்டி said...

//மறக்க கூடிய நண்பர்களா
நாம ?//-யூர்கன் க்ருகியர் கூறியது.

அப்பிடியா ? தலீவா !!

அதுனால தான் நம்ப , பாலோயர்ஸ் லிஸ்ட்டுல இருந்து போய்டீன்களா? இல்ல,

டவுசருக்கு போய் நாம ஒரு
பாலோயரா ? இன்னு நெனைச்சிட்டீங்கள ?

டவுசர் பாண்டி said...

//விண்டோஸ் மூலமாக அழிக்க முடியுமெனில் அட்மினிஸ்ட்ரேடர் லாகின் இருந்தால்தான் முடியுமா அல்லது மத்த யூசர் லாகின் கூட பண்ண முடியுமா?//-யூர்கன் க்ருகியர் கூறியது.

எனது நண்பர் ஒருவர் கீராரு ? பேரு ஜெய் , அவுரு கிட்ட கேட்டு சொல்றேன் பா !!

பொன் மாலை பொழுது said...

சும்மா காட்டியும் மாம்சையும் மாப்லையையும் வெருப்பெத்திகினுகீறாங்கோ ....அக்காங் ..
ஆருகிட்டேயிருந்தும் மெய்லு வந்துகினா பத்த்லு குட்திகினுவான் இந்த மாம்ஸ் . நம்ப மாப்ள கூட அப்படிதான் கீறாரு. அண்ணாத்தந்கலுக்கு மெய்லு உட்டுகினா அல்லாத்தையும் 'பேணட்டுக்கு ' கீழே இட்டுகினு பொட்டிய நோன்டிகினுகீராங்கோ. இப்பால இங்க வந்துகினு
கமெண்ட்ஸ் குட்டுகினு, இன்னா பயாஸுகோப்பு ஒட்டிகினுகீரீங்கோ !!
வேணும்னா மாப்ள கைல கேட்டுகினுங்கோ நானும் மாப்ளையும் டெய்லி பேசிகினு மெய்லு உட்டுகினுதா கீறோம். அக்காங் !!

டவுசர் பாண்டி said...

இரு இரு வந்து பேசிக்கிறேன் தல

யூர்கன் க்ருகியர் said...

மச்சி... நல்லா கேட்டீங்க :)

பெயரில்லா said...

Dear Mr.Pandi,

Very Very useful article.. Keep writing.. Madras bashayil Computer solli kodukka mudiyumkirathu Oru sathanaitha.. Vazhga..

Mahesh.

டவுசர் பாண்டி said...

//மச்சி... நல்லா கேட்டீங்க//- யூர்கன் க்ருகியர் கூறியது.

இன்னா !! மாம்சுக்கு மாப்ஸ்
சப்போட்டா !! ரெண்டு பேரும் ,
சேந்து

இந்த டவுசர வார்ரீங்களா !! இன்னாவோபா !!
ஒன்னியும் பிரியல !! பெர்சு !! உன் மாப்சு பதிவு எழத மாட்டேன் . இன்னு வைராக்கியமா கீதே !! அத்த ஒன்னியும் கேக்க மாட்டியா ?

டவுசர் பாண்டி said...

//Madras bashayil Computer solli kodukka mudiyumkirathu Oru sathanaitha.. Vazhga..//-பெயரில்லா கூறியது,

தலீவா !! இந்த மேரி ஆதரவு இருந்தா போதும் தல , அப்பால நமபுளுக்கு தெரிஞ்ச பாஷைல தானே சொல்ல முடியும் , உங்க வருகைக்கி + கர்துக்கு ரொம்பவே டாங்க்ஸ்பா !!

Dubukku said...

Nice one. Kalakunga...

Dubukku said...

பாண்டி டெக்னிகலா சும்மா புகுந்து விளையாடுறமா...சூப்பர் டிப்ஸ் அல்லாமே

பொன் மாலை பொழுது said...

மொதல்ல ஒங்க ' பேணட்டுக்கு' கீழே கீற அல்லா மெய்ளையும் எட்து ஒருதபா பட்சி பாத்துகினு பொறவு பேசு.................டவுசரு ...........அக்காங். நம்ம வேலன் அண்ணாத்த கைல வேண்ணாலும் கேட்டுகோ, அத்தான் அவ்ரு உங்க ஊட்டாண்டதானே கீறாரு? மாப்ள புட்ச்சா ஒன்னும் வுட்டுகல்யா கண்டி அத்து நார்மலாதான் கீது. டெய்லி மெய்லு உடுது,பேசிகினுதா நாங்க கீறோம். அக்காங் .... நா எத்தன மெய்லு உட்டுகினே ஒன்கு, பத்த்லு உட்டுகினியா நீயீ????????????????????
கெடயாது. நா ஒரு பாட்டு கூட உட்டுகின போன வாரம் தா. மாப்ள கிண்டல் பண்ணி பண்ணி எழுதிகினுகீது கண்டி நீங்க எல்லான் ரொம்ப பிசியாகீரிங்கோ.அக்காங்.

அத்து செரி தல..................... 'பேனட்டு ' அப்டீன்னா இன்னா மொதல்ல? அத்த 'இன்னான்னு ' கண்டுகினு அப்பால மெய்லு பொட்டிய தொறந்து நல்லா கண்ல வெயக்கெனய உட்டுகின்னு நல்லா பாரு நைனா.

பொன் மாலை பொழுது said...

மொதல்ல ஒங்க ' பேணட்டுக்கு' கீழே கீற அல்லா மெய்ளையும் எட்து ஒருதபா பட்சி பாத்துகினு பொறவு பேசு.................டவுசரு ...........அக்காங். நம்ம வேலன் அண்ணாத்த கைல வேண்ணாலும் கேட்டுகோ, அத்தான் அவ்ரு உங்க ஊட்டாண்டதானே கீறாரு? மாப்ள புட்ச்சா ஒன்னும் வுட்டுகல்யா கண்டி அத்து நார்மலாதான் கீது. டெய்லி மெய்லு உடுது,பேசிகினுதா நாங்க கீறோம். அக்காங் .... நா எத்தன மெய்லு உட்டுகினே ஒன்கு, பத்த்லு உட்டுகினியா நீயீ????????????????????
கெடயாது. நா ஒரு பாட்டு கூட உட்டுகின போன வாரம் தா. மாப்ள கிண்டல் பண்ணி பண்ணி எழுதிகினுகீது கண்டி நீங்க எல்லான் ரொம்ப பிசியாகீரிங்கோ.அக்காங்.

அத்து செரி தல..................... 'பேனட்டு ' அப்டீன்னா இன்னா மொதல்ல? அத்த 'இன்னான்னு ' கண்டுகினு அப்பால மெய்லு பொட்டிய தொறந்து நல்லா கண்ல வெயக்கெனய உட்டுகின்னு நல்லா பாரு நைனா.
நம்ம டவுசருக்கு அத்தான் இம்மாம் பெரிசாகீதே !!!! நா பாக்லய கண்டி, நமக்கு இன்னா ஒன்னும் தெர்ரியாதா இன்னா ????????????????????????????????????????????????????????????????????????????

மாம்ஸ்

பொன் மாலை பொழுது said...

ஐயோ ஐயோ ...நா கொழம்பி பூட்டன் . அத்து பேனட்டு இல்ல ...பின்ன இன்னாவாம்?
'டிக்கி ' ...அக்காங் ....இந்த பிளஷறு காருங்களுக்கு பினாடி கீதே ? ஆங் ...அத்தான் 'டிக்கி'

இன்னா பிரிச்கினிங்களா அல்லாரும்? சலாம் ....அபீட் ......................

TAMIL said...

please vot for
tamilish.com

Nathanjagk said...

அச்டிஎம்எல் புலி(ப்பாண்டி)!!! நல்லாத்தான் புடிக்கிறீங்க (படிக்கிறவங்க) நரம்​பை! நான் ​மெக்கானிக்கல் இன்ஜினியரிங்.. இருந்தாலும் ​சொல்​றேன் - ஒங்கிட்ட என்ன​மோ இருக்கு!
நான் முதல்ல நார்டன் க​மெண்டர்-ங்கிற டாஸ் யுட்டிலிட்டி பயன்படுத்தி ஃ​பைல் ​டெலிட் ​செய்​வேன்.. அதுல ​​டெலிட் ஆன​தை என்ன பண்ணினாலும் எடுக்க முடியான்னு ஒரு அண்ணன் ​சொல்லியிருக்காரு! நீங்க ​சொல்றது புதுசா, பார்க்கவும் கவர்ச்சியா இருக்கு!

​கொஸ்டின்ஸ்: (ஏன்ஸர் ​சொல்லணும், ஆமா)
இப்படி ஏகப்பட்ட ​கெட்ஜட்களா ​சேத்திக்கிட்​டே ​போனா வ​லைப்பதிவு பார்க்க நல்லாயிருக்குமா? ஒரு சில ​கெட்ஜட்கள் நாம​ளே அடிக்கடி யூஸ் பண்ணாம, எப்ப​வோ வாங்கி வச்ச டம்பிள்ஸ் மாதிரி ​தே​மேன்னு ​கெடக்குமே? யூஸ் பண்ணாத ​கெட்ஜட்க​ளை எடுக்கிறது சிரமமா?
அப்புறம் தமிழ்ல ​டைப் பண்றது பத்தியும் சில ​கேள்விகள் இருக்கு! நீங்கதான் ​சொம்புல 'புளிச்சுனு' ​எச்சிலைத் துப்பிட்டு ஒரு நியாயத்​தை ​சொல்லணும்..! ​​கேட்கலாமா??

MUTHU said...

சூப்பர் இதே போல் டாப் பட்டன் (top button) கோடிங் சொல்லவும்

பெயரில்லா said...

பயன்படுத்துகிறேன்..
நன்றி!

-சரவணன்.

டவுசர் பாண்டி said...

//இன்னா பயாஸுகோப்பு ஒட்டிகினுகீரீங்கோ !! //-கக்கு - மாணிக்கம்

இன்னாமா கோவம் வருதுப் பா !! நம்ப பெரிய தலைக்கி , அது இன்னது பானேட்டா அப்பிடின்னா ?
பிரியலையே !! நா மெயில்ல வரேன்,

டவுசர் பாண்டி said...

//பாண்டி டெக்னிகலா சும்மா புகுந்து விளையாடுறமா...சூப்பர் டிப்ஸ் அல்லாமே//- Dubukku கூறியது.

ரொம்ப டாங்க்ஸ் தலீவா !! அடிக்கடி வந்துட்டு போங்க உங்களோட கருத்துக்கு நன்றி .

டவுசர் பாண்டி said...

//இப்படி ஏகப்பட்ட ​கெட்ஜட்களா ​சேத்திக்கிட்​டே ​போனா வ​லைப்பதிவு பார்க்க நல்லாயிருக்குமா?//- ஜெகநாதன் கூறியது.

மொதல்ல உங்க வருகைக்கி ரொம்ப டாங்க்ஸ் வாஜாரே !! இந்த கேள்விக்கி ஒரு உதாரணத் தோட, பதிலு உட்டுக்கறேன் , இப்போ !! நாம பாத்திரக் கடைக்கி போறோம் , நம்பளுக்கு தேவையான பாத்திரம், மட்டும் தான் வாங்குறோம் !! ஆனா !! அது மட்டுமா , அங்க கீது ?
உங்களுக்கு தேவையானது , அடுத்தவங்களுக்கு தேவைப் படாது !! .... repeat ,அதே மேரி தான் , தல

டவுசர் பாண்டி said...

//யூஸ் பண்ணாத ​கெட்ஜட்க​ளை எடுக்கிறது சிரமமா?//

அது இன்னா தல பெரிய விஷியமா இன்னா ? வானான்னு தோனுச்சின்னா !! dasboard போய் தூக்கிட வேண்டியது தானே !! ?


//அப்புறம் தமிழ்ல ​டைப் பண்றது பத்தியும் சில ​கேள்விகள் இருக்கு! நீங்கதான் ​சொம்புல 'புளிச்சுனு' ​எச்சிலைத் துப்பிட்டு ஒரு நியாயத்​தை ​சொல்லணும்..! ​​கேட்கலாமா??//

நா,சொம்புல துப்பாதியே ரெடி பா !!

டவுசர் பாண்டி said...

//சூப்பர் இதே போல் டாப் பட்டன் (top button) கோடிங் சொல்லவும்//-MUTHU கூறியது.

<a style="display:scroll;position:fixed;bottom:5px;right:5px;" href="#" target="_self" title="Back to Top"> <img src="http://www.ranegrouppune.com/images/top-arrow.jpg"/></a>

டவுசர் பாண்டி said...

//பயன்படுத்துகிறேன்..
நன்றி!//-சரவணன்.

தங்கள் வருகைக்கி ரொம்பவே டாங்க்ஸ் தலீவா !! அது இன்னா பேரு இல்லாத இன்னு கீது , - சரவணன் ,

பெயரில்லா said...

நன்றி தலிவா ரொம்ப தாங்க்ஸ்
அப்டியே நம்ப ப்லோக் வன்தட்டு போங்க

http://bestinbox.blogspot.com

டவுசர் பாண்டி said...

//நன்றி தலிவா ரொம்ப தாங்க்ஸ்
அப்டியே நம்ப ப்லோக் வன்தட்டு போங்க //- life0 கூறியது.

உங்க வருகைக்கி ரொம்ப டாங்க்ஸ் தலீவா !! உங்க பிளாக் வந்தேன்
தலீவா !! ரொம்பவே சூப்பர் ஆ
கீது !! வரலாறு - இன்னாமா பேரு வெச்சி கீரிங்கோ !! தகவலுங்கோ அல்லாம் ரொம்ப நல்லா கீது !! வாழ்க , வளர்க !!

கருத்துரையிடுக

.
.
எதாவது புரீரா மேரி எழ்து தலீவா !! .

நம்ப பேட்டைக்கி வந்து , நம்பள, கண்டுகுனதுக்கு ரொம்ப டாங்க்ஸ், வாஜாரே !! அடிக்கடி வந்துட்டுப் போங்க தலீவா !!

இப்ப நேரம் / தேதி

அவாடு குத்தாங்கோ

Photobucket Photobucket

50 -வது பதிவிற்காக, சகோதரி ஜலீலா கொடுத்த விருது

Photobucket

BEST TECHNICAL AWARD

Photobucket Photobucket

இங்கல்லாம் கீறேன்.

அடிக்காதீங்க !! !! !!!

 

IcyBlue | Copyright © 2009 - Blogger Template Designed By Simrandeep Singh