பாண்டி அகராதி

ஒரு நாளு நம்ப நாயர் கடைல டீ, குட்சிட்டு அப்பிடியே ஒரு பீடி வலிச்சிக்கினு இருந்தேன் நம்ப நாயரு, மீதி
துட்டு இந்தா டவுசரு அப்பிடீன்னு குட்த்தாரு பா , அத்த
வாங்கி பாத்தா !! அந்த ரூபா நோட்லே ( 10 ரூபா நோட்டு )
ஒரு வாசகம் எழ்தி இருந்திச்சி அது இன்னானா
"தயவு செய்து இந்த நோட்டை திருப்பி பார்க்காதே "
இன்னு இருந்திச்சி பா , நா ஒரு வெவரம் கெட்ட ஆளா
பூட்டேன் , உடனே ,அந்த ரூபா நோட்ட திருப்பி
பாத்தா !!!!!!!!!!!!!!!!! அதல போட்டுக்குது,,
" இப்ப தானேடா சொன்னேன், அறிவு கெட்ட முண்டம் "
அப்பிடின்னு போட்டுக் குதுப்பா !!! நா இன்னா பண்ணட்டும்
நீயே சொல்லு இந்த நாயத்த ..
அயன் படம் பத்தி ஒரு மிக்கியமான மேட்டரு.

இதுல கீற அயன எடுத்து ஒரு ஊடு கட்டலாம் . நல்லா ஸ்டான்கா இருக்கும்.
நம்ப ஊட்டுக்கு அயன் வாங்கும் போது, நல்லா கீதா, இல்ல வேற எதாவது டுபாகூரா அப்பிடீன்னு பாத்து வாங்கி கட்டுங்கோ ,

இன்னா நா சொல்றது பிரியுதா இல்ல மறந்து கிறந்து பூட போறீங்கோ !!!!!!!
நா இந்த அயன் பத்தி தான் சொன்னேன்.
நீ வேற இன்னா மோன்னு நினச்சியா ??? நல்ல டமாஸ் கார ஆளுப்பா நீ !!!