பாண்டி அகராதி

இன்னாபா = என்ன , வன்கம் = வணக்கம் , டாங்குசுபா = நன்றி , இனி மேட்டு = இனிமேல் , மெர்சலாவாதே = பயப்படாதே , டகால்ட்டி = ஏமாற்றுதல் , கலீஜா = அசிங்கமாக , சொம்மா = சும்மா , பிரீலே = புரியவில்லை , டாமாகோலீ = பெரியதாக , கீறியே = இருக்கின்றாய் , மன்சாலு = மனிதர்கள் , அக்காங் =ஆமாம் , பேஜாரா பூட்சி = கஷ்டமாக இருக்கிறது , அந்தே மேரி = அது மாதிரி , கொரலுகுட்தேன் = குரல் கொடுத்தேன் , சோக்கு = அழகாக , பெல்லக்கா பையன் = சின்னப் பையன் , தோஸ்துக்கோ = தோழர்கள் , மட்ச்சீ வந்தே = மதித்து வந்தாய் , கீது = இருக்கிறது , பாந்த்ரா பாந்த்ராவ = பெரிது பெரிதாக , குன்சா = அதிர்ஷ்டவசமாக , ரோசகாரமன்சன் = தன்மானமுள்ள மனிதன் , டிமிக்கி குட்தாம்பா = ஏமாற்றிவிட்டான் , கொட்டா = தியேட்டர் , பகுரா = பகட்டாக , சல்பேட்டா = சரக்கு , அப்பால = பிறகு , ஓர = சாராயம் , பிகிலு = சரியாக , உஸ்தாது = மிடுக்காக, டுபாகூரு = பொய் ,டாணாகார் - போலீஸ்கார் , உதாரு உட்டேன் - பயம் காட்டினேன் , சோக்கு குஜிலி - அழகான பெண் , ஜவ்வு - அறுவை , சோக் மாலு - நிறைய பணம் , பிஸ்தா - ரவுடி , அபீட்டு - வந்து விட்டேன் ,

டவுசரை கால வாரி உட்டுட்டாங்கோ பா !!

· 11 கருத்துகள்


 

 

 









ஒரு நாளு நம்ப நாயர் கடைல டீ, குட்சிட்டு அப்பிடியே 
ஒரு பீடி வலிச்சிக்கினு இருந்தேன் நம்ப நாயரு, மீதி 
துட்டு இந்தா டவுசரு அப்பிடீன்னு குட்த்தாரு பா , அத்த 
வாங்கி பாத்தா !! அந்த ரூபா நோட்லே ( 10 ரூபா நோட்டு ) 
ஒரு வாசகம் எழ்தி இருந்திச்சி அது இன்னானா

"தயவு செய்து இந்த நோட்டை திருப்பி பார்க்காதே "  

இன்னு இருந்திச்சி பா , நா ஒரு வெவரம் கெட்ட ஆளா 
பூட்டேன் , உடனே ,அந்த ரூபா நோட்ட திருப்பி 

பாத்தா !!!!!!!!!!!!!!!!! அதல போட்டுக்குது,, 

" இப்ப தானேடா சொன்னேன், அறிவு கெட்ட முண்டம் " 

அப்பிடின்னு போட்டுக் குதுப்பா !!! நா இன்னா பண்ணட்டும் 
நீயே சொல்லு இந்த நாயத்த ..



இத்த பத்தி ஊ கருத்து இன்னா அத்த மின்ன சொல்லு

ஐயே ! எனுக்கு தான் ஒரு ஓட்ட போடம்பா,

 








அயன் பத்தி ஒரு கண்ணோட்டம்

· 13 கருத்துகள்




 நா பாத்த அயன் படம் இதான் பா !! கோச்சிக்காதே நைனா




அயன் படம் பத்தி ஒரு மிக்கியமான மேட்டரு.







இதுல கீற அயன எடுத்து ஒரு ஊடு கட்டலாம் . நல்லா ஸ்டான்கா இருக்கும்.





நம்ப ஊட்டுக்கு அயன் வாங்கும் போது, நல்லா கீதா, இல்ல வேற எதாவது டுபாகூரா அப்பிடீன்னு பாத்து வாங்கி கட்டுங்கோ ,  










இன்னா நா சொல்றது பிரியுதா இல்ல மறந்து கிறந்து பூட போறீங்கோ !!!!!!!  


நா இந்த அயன் பத்தி தான் சொன்னேன்.  

நீ வேற இன்னா மோன்னு நினச்சியா ??? நல்ல டமாஸ் கார ஆளுப்பா நீ !!!





நம்ப பேட்டைக்கி வந்து , நம்பள, கண்டுகுனதுக்கு ரொம்ப டாங்க்ஸ், வாஜாரே !! அடிக்கடி வந்துட்டுப் போங்க தலீவா !!

இப்ப நேரம் / தேதி

அவாடு குத்தாங்கோ

Photobucket Photobucket

50 -வது பதிவிற்காக, சகோதரி ஜலீலா கொடுத்த விருது

Photobucket

BEST TECHNICAL AWARD

Photobucket Photobucket

இங்கல்லாம் கீறேன்.

அடிக்காதீங்க !! !! !!!

 

IcyBlue | Copyright © 2009 - Blogger Template Designed By Simrandeep Singh