பாண்டி அகராதி

இன்னாபா = என்ன , வன்கம் = வணக்கம் , டாங்குசுபா = நன்றி , இனி மேட்டு = இனிமேல் , மெர்சலாவாதே = பயப்படாதே , டகால்ட்டி = ஏமாற்றுதல் , கலீஜா = அசிங்கமாக , சொம்மா = சும்மா , பிரீலே = புரியவில்லை , டாமாகோலீ = பெரியதாக , கீறியே = இருக்கின்றாய் , மன்சாலு = மனிதர்கள் , அக்காங் =ஆமாம் , பேஜாரா பூட்சி = கஷ்டமாக இருக்கிறது , அந்தே மேரி = அது மாதிரி , கொரலுகுட்தேன் = குரல் கொடுத்தேன் , சோக்கு = அழகாக , பெல்லக்கா பையன் = சின்னப் பையன் , தோஸ்துக்கோ = தோழர்கள் , மட்ச்சீ வந்தே = மதித்து வந்தாய் , கீது = இருக்கிறது , பாந்த்ரா பாந்த்ராவ = பெரிது பெரிதாக , குன்சா = அதிர்ஷ்டவசமாக , ரோசகாரமன்சன் = தன்மானமுள்ள மனிதன் , டிமிக்கி குட்தாம்பா = ஏமாற்றிவிட்டான் , கொட்டா = தியேட்டர் , பகுரா = பகட்டாக , சல்பேட்டா = சரக்கு , அப்பால = பிறகு , ஓர = சாராயம் , பிகிலு = சரியாக , உஸ்தாது = மிடுக்காக, டுபாகூரு = பொய் ,டாணாகார் - போலீஸ்கார் , உதாரு உட்டேன் - பயம் காட்டினேன் , சோக்கு குஜிலி - அழகான பெண் , ஜவ்வு - அறுவை , சோக் மாலு - நிறைய பணம் , பிஸ்தா - ரவுடி , அபீட்டு - வந்து விட்டேன் ,

தீ படத்தோட வெமர்சனம்,

· 9 கருத்துகள்










 


தீ
 
பத்தலே


நம்ப கொஞ்ச லேட்டுப்பா பின்ன 
இன்னா? நம்ப நெலைமிக்கு
ப்ளாக்கு டிக்கெட்டு எல்லாம்
தாங்காதுப்பா! இப்ப தான் 
நம்ப குஸூப்பு ஊட்டுக்காரு
நட்ச தீ படம் பாத்தேன் சும்மா
சொல்லக் கூடாதுப்பா நம்ப குட்த துட்டுக்கு வஜ்ஜன
இல்லாம நம்ப நமீதா பெண்டு 
கய்ட்டுதுப்பா, அப்பால இந்த வில்லன்
அட நம்ப பாரதி யாரு படத்துல
கூட நச்சாரே? அவரு இன்னா லூசாப்பா ?  
நம்ப சுந்தரு கூட இம்மாம் பெரி
சண்ட போட்டுட்டு அவரே
மறத்துட்டாரே இன்னாப்பா இது 
சேரி இவரு தான் இப்பிடீன்னா 
ஒன்நோர்தாரு வில்லன்
அவரே மறந்துட்டார் சொம்மா
ரவ தாடி மட்டு தான் விச்சிக் கீராரு
அதுக்கே யாருக்கும்
அவர தெர்ல அப்பால இவரு MLA
ஆவராறு இவரு குழதங்கல
அவனோங்க ஆக்கான கோரமிக்கே
இவரு தண்டனை கொடுக்குறாரு 
இன்னா கொடும இது ஒன்னு,
லாஜிக்க்கே இல்லப்பா யாராவது
இத பாக்க்கலாம்முன்னு 
கொட்டாவாண்ட
போய்ட கீய்ட போரீக்கப்பா 
ஒரே டமாஸ் தான் அப்பால
நம்ப உட்டுல பதில் சொல்ல முடியாது. 
அக்காங்..டான்குஸ்பா!


அட்த தபா நல்ல படமா
பாத்துட்டு வர்றேன்.  
உனுக்கு இன்னா தோனுதோ
அத எளுதுப்பா நம்ப தோஸ்துக்க
அல்லாருக்கும் நா பட்சி, 
காமிக்கறேன்.

( ஐயே ஒரு ஓட்ட தான் போடம்பா ! )

 







சும்மா பழச நெனைச்சேன்,

· 4 கருத்துகள்








அந்த காலத்துல நம்ம தலிவர் கமராஜறு கமராஜறு
அப்பிடின்னு ஒர்த்தரு முதலமிச்சரா, இருந்தாராம் , 
அப்போ இந்த மேரி வெளியே போம் போது கூட வந்த
ஒரே ஒரு சீப்பு வண்டி கூட வாணாம் போ, அப்பிடின்னு
டாக்க, கொடுத்துட்டு தனிய போனாராம்பா ! அட இப்பிடி
கூட ஒரு நல்ல மன்சனா , அப்பிடின்னு நம்ப கண்லே, தண்ணி 
வந்துட்சிபா, இப்ப கீற தலீவருங்கோ, சொம்மா , இப்பிடி அப்பிடி
இன்னு பந்தா , காட்டி பயாஸ்கோப்பு கட்டராங்கப்பா ,  
நம்பளுக்கு இந்த மேரி இந்த மேரி மேட்டருடா, அப்பிடின்னு
நம்ப ஈஸ்கூலு வாத்தி தான் சொல்லிச்சிப்பா , இல்லன்ன 
நம்ப மேரி ஆளுங்களுக்கு எப்பிடி தெரியு சொல்லு.

இந்த பொட்டிலே கீற ப்ளே பட்டன அமுக்கி
அந்த கோரமைய நியுந்தான் பாறேன் .
தேங்குசு பா ! நீயுதான் நாலு எடத்துல இந்த மேட்டற சொல்லுவியா !













நம்ப பேட்டைக்கி வந்து , நம்பள, கண்டுகுனதுக்கு ரொம்ப டாங்க்ஸ், வாஜாரே !! அடிக்கடி வந்துட்டுப் போங்க தலீவா !!

இப்ப நேரம் / தேதி

அவாடு குத்தாங்கோ

Photobucket Photobucket

50 -வது பதிவிற்காக, சகோதரி ஜலீலா கொடுத்த விருது

Photobucket

BEST TECHNICAL AWARD

Photobucket Photobucket

இங்கல்லாம் கீறேன்.

அடிக்காதீங்க !! !! !!!

 

IcyBlue | Copyright © 2009 - Blogger Template Designed By Simrandeep Singh