பாண்டி அகராதி
Happy New Year 2010
அல்லா தோஸ்த்துக்கும் பாண்டியோட வன்கம்பா !!
இன்னைக்கி நாம பாக்கப்போற பதிவு , பதிவுன்களைப் பத்தி தாம்பா !!
இன்னா கொயப்பரனா !!அதாவது ,
நாம சில பிளாக்குங்கப் பக்கம் போய், அத ஓபன் பண்ணுவோம் !!
அப்போ சில பிளாக் மட்டும் ,ரொம்ப நேரம் லோடு ஆவும் ,
அப்பால பாத்தா !!
கிட்டத்தட்ட ஒரு பத்து இல்ல பதினஞ்சி பதிவுங்க ஒன்னு ஒண்ணா
இருக்கும் ,
அதுனால கூட நமக்கு ரொம்ப நேரம் லோடு ஆவும் தல !!
நெறைய பேர் இது மாதிரி தான் வெச்சிக்கிட்டு கீராங்கோ !! அதிகமான
பதிவுகள் எழதிட்டு இருந்தா இல்லன்னா போட்டோ நெரியோ upload
பண்ணி இருந்தாக்கா !!
இது மாதிரி வரும் , இதுக்கு இன்னா பண்றது ? இன்னா ? நம்மோட
பிளாக்குல ஒன்னு இல்லன்னா ரெண்டு பதிவு மட்டும் ஒரு பக்கத்துக்கு
வெச்சிட்டா இது மேரி கழ்டம் எல்லாம் வராது !!
கீழே கீர படத்துல எப்படி அத பண்றது இன்னு கூவிக் கீரேன் ,
ரவ பாருங்க தலீவா !!
மொதல்ல டாஷ்போர்ட் போயிட்டு
அடுத்து அமைப்புகள் கிளிக் பண்ணி ,
,வடிவமைத்தல் கிளிக் பண்ணி
அதுல 1 (அல் ) 2 என்பதை டைப் செய்யவும் ,
அப்பால save பண்ணவும் . இப்போ உங்க பிளாக் போய் பாருங்க ,
பதிவ படிச்சிட்டு அப்பிடியே உங்க கருத்து + ஓட்ட போட்டீங்கன்ன
ரொம்பவே சந்தோசமா இருக்கும் தல !!
நம்ப தோஸ்த்து அல்லாருக்கும் பாண்டியோட வணக்கம் பா !!
இப்போ !! நாம ஏற்கனவே copy to இன்ற சின்ன சாப்ட்வேர் பத்தி
பாத்தோம் ,
அதப் பத்தி படிக்காதவங்க , இங்கு சென்று பார்க்கவும் . இப்போ அதே
மேரி , copy , cut , paste பண்ணும் போது, வயக்கமா , copy ஆவறது ,
கொஞ்சம் லேட்டா ஆவும் ,
இந்த super copier நம்ப பொட்டில இன்ஸ்டால் பண்ணிட்டா !! அதும்
ஸ்பீடு சும்மா தூள் டக்கரா இருக்கும் ,
இதுல இன்னா ஒரு நன்மைன்னா !! minimize பண்ணிக்கலாம் , pass
பண்ணி வெக்கலாம் , இது கண்டிப்பா எல்லா பொட்டிளையும்
இருக்க வேண்டிய ஒன்னு !!
இங்கு சென்று ( சின்ன சாப்ட் வேர் தான் 454 kb அளவு )
இத டவுன் லோடு பண்ணிக்கங்க தல !!
வயக்கம் போல உங்க கருத்து + ஓட்டுக்கு இந்த பாண்டி வெயிட்டிங் .