பாண்டி அகராதி

இன்னாபா = என்ன , வன்கம் = வணக்கம் , டாங்குசுபா = நன்றி , இனி மேட்டு = இனிமேல் , மெர்சலாவாதே = பயப்படாதே , டகால்ட்டி = ஏமாற்றுதல் , கலீஜா = அசிங்கமாக , சொம்மா = சும்மா , பிரீலே = புரியவில்லை , டாமாகோலீ = பெரியதாக , கீறியே = இருக்கின்றாய் , மன்சாலு = மனிதர்கள் , அக்காங் =ஆமாம் , பேஜாரா பூட்சி = கஷ்டமாக இருக்கிறது , அந்தே மேரி = அது மாதிரி , கொரலுகுட்தேன் = குரல் கொடுத்தேன் , சோக்கு = அழகாக , பெல்லக்கா பையன் = சின்னப் பையன் , தோஸ்துக்கோ = தோழர்கள் , மட்ச்சீ வந்தே = மதித்து வந்தாய் , கீது = இருக்கிறது , பாந்த்ரா பாந்த்ராவ = பெரிது பெரிதாக , குன்சா = அதிர்ஷ்டவசமாக , ரோசகாரமன்சன் = தன்மானமுள்ள மனிதன் , டிமிக்கி குட்தாம்பா = ஏமாற்றிவிட்டான் , கொட்டா = தியேட்டர் , பகுரா = பகட்டாக , சல்பேட்டா = சரக்கு , அப்பால = பிறகு , ஓர = சாராயம் , பிகிலு = சரியாக , உஸ்தாது = மிடுக்காக, டுபாகூரு = பொய் ,டாணாகார் - போலீஸ்கார் , உதாரு உட்டேன் - பயம் காட்டினேன் , சோக்கு குஜிலி - அழகான பெண் , ஜவ்வு - அறுவை , சோக் மாலு - நிறைய பணம் , பிஸ்தா - ரவுடி , அபீட்டு - வந்து விட்டேன் ,
டவுசர் பாண்டி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
டவுசர் பாண்டி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

காணாத போன பாண்டி வன்ட்டேன்பா !!

· 35 கருத்துகள்

உஸ்ஸ் யப்பா !! அல்லா தோஸ்தும் , 
இந்த பாண்டிக்கு 

மன்னாப்பு குட்துடுங்கோ !! தலீவா !! 

பெப்ரவரி, மாசம் உங்க அல்லாருகிட்டியும் இருந்து , 


சொல்லிக்காம அம்பேலு உட்டவன் தான் , இப்போ ,


மறு படி வந்துக் கீரேன் , அக்காங் !! கிட்டத் தட்ட 


மூணு மாசம் , ஆவுது , 


வலை உலக தோஸ்துங்களுக்கு மிக்கிய அறிவிப்பு !!

· 31 கருத்துகள்

தல அல்லாரும் என்க்கு மன்னாப்பு குட்துடுங்க தல , இம்மாம் நாளுநானு காணாத பூட்டேம்பா !
 ( ஆமாம் , இவுரு இருந்து மட்டும் இன்னா கீச்சாறு )


பொங்கலுக்கு நம்ப தோஸ்து அல்லாரையும் பாத்து பொங்க மருவாத 
வாங்கிக்கீனு வரலாம் இன்னு , 


ஒரு ரவுண்டு வந்தேம்பா !! வந்து அட , நம்ப மக்களுக்கு எதுனா நூசு 
குடுக்கலாம் இன்னு , இந்த பொட்டிய தொறந்தா !! 


ஊர்ல கீர எல்லாருக்கும் இன்டர்நெட்டு வருது நம்பளுக்கு மட்டும் வரல , 
( எதிரி நாட்டு சதியா இருக்கும் ) இன்னாடா !! இது கோராமையா பூடுது 
இன்னு !! மாரியாத்தாவ வேண்டிக்கீனு மறுபடி நோண்டி பாத்தேன் பா !! 
அப்பவும் வரல, அது மட்டும் இல்ல , 


எதுவுமே ஓபன் ஆவல, ஒரே கஷ்டமா பூடுது , சரி நாம தான் பெரி ஆளா 
பூட்டோமே ( ? ) இன்னு நம்ப பொட்டிய , restore பண்ணலாம் இன்னு, 
ஒரு சாப்ட்டு வேறு போட்டு பாத்தேம்பா !! ( microsoft ல கீதே system restore 
அது இல்ல ) பூட் ஆச்சி , அப்பாடா இன்னு my computer ஓபன் பண்ணி பாத்தா , 


ஐயோ !! ரெண்டு டிரைவ்வக் காணோம் !! சரி , நாம தான் செரி இல்ல , 
நம்ப பில் கேட்சு அண்ணாத்த வழிய பாக்கலாம் இன்னு சிஸ்டம் restore 
பன்னேம்பா , 


அட இப்ப பாத்தா நம்ப கஷ்டமான தட்டு அதாம்பா , Hard disk கக் 
காணோம் இன்னு சொல்லுது , நா இன்னா பண்ணுவேன் , 


யாரோ சூனியம் வெச்சா மேரி நம்ப பொட்டி நம்பளுக்கு அம்பேல் 
குட்துடுதுபா !! ஒரு வேல நா எழ்தர்து யாருக்கோ புடிக்காத போய் 
இந்த மேரி பண்ணிட்டாங்கோ !! போல கீதுன்னு நென்சிக்கீனு , 
ஒரு கொர அழ்துட்டு , 


அத எட்துக்குனு அந்த கம்பனிக்கு போனேன்பா !! அங்க இருந்த ஒரு பெரி 
மன்சன் ok , உங்க பேரு , ஊரு , அட்ரசு எல்லாம் சொல்லுங்க இன்னு 
கேட்டான் , எல்லாத்தையும் சொல்லி , கைய நீட்டுனேன் , வாட் , இன்னு 
கேட்டான் , வேற குடு தல , இன்னேன் ,அதுக்கு ஒரு மொர மொரச்சிட்டு , 
போய் பத்து நாளு கழ்ச்சி வா , தேறுமா தேறாதா இன்னு சொல்றேன் 
இன்னு சொல்டாம்பா !! 


அட போடா கைத , அது வெரிக்கும் என் தொஸ்துங்களுக்கு யாரு தாவா 
சொல்றது , நானு இத்தினி நாளு மேட்டரு சொல்லாத இந்த பதிவுலகமே
அல்லோல, கல்லோலப் படுது , ( ? ) இதுல நீ வேற டமாஷ் பண்ணிக்கீனு,
இன்னு காரி மூன்சிட்டு , !!!


எவ்ளோ செலவானாலும் பரவாயில்ல இன்னு சொல்ட்டு வேற புது Hard 
டிஸ்க்கு வாங்கியாந்து மாட்டி , மாரியாத்தாவ மரியாதையா வேண்டிக் 
கீனு !! ஆன் பன்னேன்பா !! எனுக்கு ஒரே அழுவையா வந்துடுது அட 
நல்லா வேல செய்யுது !! அதுல வந்த ஆனந்த கண்ணீர் தாம்பா , 


செரி இதுக்கு போய் இன்னா இம்மாம் பெரி டீடைலு இன்னு கேக்கறீயா ? 
அப்ப தானே நானு பதிவு போடாமா கீரத்துக்கு உனுக்கு காரணம் பிரியும் 
அதாம்பா !! இம்மாம் பெரி கதை , 


வன்ட்டேன் , வன்ட்டேன் இனி மேட்டு பதிவு போட்டு உங்கள எல்லாம் 
ஒரு வயி பண்றேன் இன்னு சொல்லி என் கதைய முட்சிக்கறேன் , 
வாய்க அந்த Hard டிஸ்க்கு , வளர்க அந்த கம்பனி . 

புதுவை .காம் உடன் தொழில் நுட்பச் சந்திப்பு

· 26 கருத்துகள்

 பதிவுலக தோஸ்துங்களே !! அல்லாருக்கும் டவுசரோட வணக்கம் !! 




நம்ப பதிவுங்க மூலமா எனுக்கு கெடச்ச பிரண்டுங்கோ !! நெரியோ பேர் !! 
அதுல நானு ஏற்கனவே சொல்லிக்கீறேன் நம்பளுக்கு பிரான்சுல கூட 
தோஸ்து கீறாங்கோ இன்னு !! 


அவுர நேர்ல பாக்கற மேரி ஒரு சந்தர்ப்பம் கெடச்சது !! அவுரும் செரி 
நாம சந்திக்கலாம் இன்னு கேரன்ட்டி குட்து வந்தாரு !! 


எனுக்கு ஒரு பயம் தான் இன்னான்னா !! நம்பள பாத்து நாலு கேள்வி
(அறை உட்டு நீயல்லாம் இன்னாத்துக்கு எழ்தரே இன்னு  கேக்கப் 
போறாரு இன்னு தான் !! ) 




ஆனா அப்படி எல்லாம் நடக்கலை , அநியாயத்துக்கு நல்ல புள்ளையா 
கீறாரு பா !! இந்த காலத்துலே இப்பிடியா ? 


இந்த சந்திப்போட நோக்கமே வெறும் பதிவர் சந்திப்பு மட்டு இல்லே !! 
புதுவை .காம் ஒரு டெக்னிக்கல் பதிவருங்கோ கீர .com அவங்க 
நோக்கமே கற்போம் !! கற்பிப்போம் !!  - pudhuvai.com  

அதா  கண்டி அவங்களுக்கு தெரிஞ்ச விஷியத்த எல்லாருக்கும் சொல்லித் 
தர்றது தான் , 


இதை நான் பதிவர் சந்திப்பு இன்னு எல்லாம் சொல்ல மாட்டேன் ! 
ஏன்னா !! 


அவங்க வந்தது முதல் திரும்பிப் போகும் வரை எங்களின் கணினி 
பற்றிய சந்தேகங்களுக்கு , விளக்கம் அளிப்பதிலேயே நேரம் 
செலவானது !! மிகப் பயனுள்ளதாக அமைந்தது !! 


அதுனால , நம்ப கேட்ட டவுட்டுக் கெல்லாம் , சொம்மா !! நச்சு 
நச்சுன்னு !! பதிலு குட்துக் கீனாங்கோ ! !   


செரி நம்ப கூட இருந்த போட்டோ அல்லாம் போடறேன் , பாருங்க தலீவா !! 







இவங்க தான் புதுவை .காம் ,நண்பர்கள் ,முதலில் இருக்குறது 
நித்தியானந்தம், அடுத்து மோகன கிருஷ்ணன் ,  


ஹைட்டு மட்டும் இல்ல தலீவா !! மனசும் உயர்ந்த மனசு !! தான் , 
அடுத்து மோகன கிருஷ்ணன் பேரு மட்டும் இல்ல ஆளும் 
கிருஷ்ணன் மேரி தூளா கீராரு !! 





இது நம்ப வேலன் அண்ணாத்தே !! இன்னா மேரி டவுட்டு அல்லாம் 
கேக்குறாரு !! பாருங்க !! 







நம்ப செட்டுலயே ரொம்ப கொயந்த ( வயசுல தான் மத்த படி கம்பீட்டருல ம்ம்ம்ம்ம்ம்ம் ) 


invisible விஜி !!  விஜி கேட்ட டவுட்டுக்கு எல்லாம் பொறுமையா 
பதிலு குடுக்குறாரு !! நித்தி சார் !!









                                  ஹி!!  ஹி !! நம்பளுக்கு !!  







மோகன கிருஷ்ணன் சார் !! சொல்லிக் குடுக்கறாரு !! 









வேலன் அண்ணாத்தைக்கி , மோகன் சார் சொல்லித் தாராரு ! 
இன்னாமோ அந்த பொட்டிய ரெண்டு பேரும் ஒரு வயி பன்றாங்கோ !! 















மூணு பேரு கிட்டயும் மாட்டிக்கினாறு, மோகன் சார் !! 









சொம்மா !! லெப்ட்டு,  ரைட்டு அல்லாம் கேள்வி மேல கேள்வி !! 









எல்லாம் ஆச்சி !! இப்ப தான் கொஞ்சம் ப்ரீயா !! ஒண்ணா நின்னு 
போட்டோஎத்துக்கினோம் !! 



எனுக்கு ரொம்பவே ஆச்சரியமா பூடுது !! நாம இன்னா 
சந்தேகம் கேட்டாலும் டக்கு டக்குன்னு பதிலு குடுக்கறாங்க பாருங்க !! 
அப்ப தான் புதுவை .காம் மரியாதையே தெரிஞ்சிது !!                       


" நமக்கு தெரிஞ்சத நாலு பேருக்கு சொல்லிக் குடுக்கறதுல 
இருக்குற திருப்தி வேற எதுலயும் இல்லீங்க !! " -


இந்த இனிய சந்திப்புக்கு புதுவை .காம் நண்பர்களுக்கு நன்றி 






வாழ்க வளர்க !! 

















அனைத்து மொழி , தினசரிகளும் - ஒரே இடத்தில் படிக்க.

· 8 கருத்துகள்



முக்கியமான , தமிழ் தினசரி பத்திரிகைகளை , ஒரே இடத்தில்
பார்க்க easyinfo - என்ற தளம் நமபுளுக்கு ரொம்பவே ஹெல்ப்
பன்னுதுபா , தமிழ் தினசரி படிக்க , இங்கு ,

அப்பால , உன்னும் நெரி மேட்டரு கீது தலைவா !!
இந்த சைட்டுல - on line டிக்கெட்டு புக்கிங்க்கு , அப்பால , e - web papers ,
கூட கீது , இது அல்லா மொழிளையும் , கீது ,

மிக்கியமா , அல்லா நியூசையும் ஒரே எடத்துல கெடைக்கெரா
மேரி பண்ணிக்கீரங்கோ பா !! India , world news ,India Business நியூஸ்,
Cricket நியூஸ்,உன்னும் இந்த நூசுல இன்னா இன்னா கீதோ , அல்லாம் கீது ,

நூசு மட்டும் இல்லப்பா , உன்னும் நெரியோ கீது , Travel guide ,
வேல வாய்ப்பு ,அனைத்து மொழி News ,பார்க்க இங்கு ,

நம்ப இண்டெர்நெட்டு பீடு இன்னா ? இதுல்லாம் கூட கீது .

மறக்காத , புக்கு மார்க்கு பண்ணி வெச்சிக்கோ தலைவா ,

இந்த லெப்ட் சைடு கீற பார்ல , இன்னா இன்னா மேரி மேட்டரு
அல்லாம் கீது பாரு , சோக்கா இல்ல ,

உனுக்கு புட்சிக் கீதா ? இல்லியா ?

வயக்கம் போல உங்க கர்த்துக்கு + வோட்டுக்கு Photobucket வெய்டிங்க்கு பா !!





இதனால சகலமானவங்களுக்கும் தெரிவிப்பது இன்னான்னா ...

· 8 கருத்துகள்

ஒரு கற்பனை பேட்டி, 


( ரொம்ப நாள் ஆச்சி, பேட்டி எட்து ) டவுசர் பாண்டி, நொட்ட சேகர், இந்த முறை, மைக்கு, புட்சிக்க நம்ப குள்ள பாலுவ வேற கூட்டி கினு வந்தேன் அல்லாரும் நம்ப அறிவாலயம் வந்தாச்சி, 

( உள்ள போவரத்துக்குள்ள யப்பா !! வேத்து பூட்ச்சிபா )

டவுசர்; தலீவா !! வணக்கம், எப்பிடி கீற ?

கலைஞர்: வா என் கண்மணி, தேர்தலுக்கு முன் பார்த்தது. எப்படி இருக்கிறாய்?

டவு ; நா நல்லா தான் கீறன், சொம்மா, சாவுக்கு சங்கு ஊதுனா மேரி, மொத்த பேரையும் ஊட்டுக்கு அம்சிட்டியே, இத்த பத்தி நீ இன்னா சொல்ற ?

கலை ; காட்டாறு போல நம் தம்பிகளாம் கழகக் கண்மணிகள், வீறு கொண்டு எதிரியின் படைகளை, ஓட ஓட விரட்டி, களத்திலே புது ஒரு மௌன கீதம் இசைத்திட்டார்கள். என் சொல்வேன்,

டவு ; ஒரு எழவும் பிரில, நா இன்னா கேட்டேன், நீ இன்னா சொல்ற , செரி, அத்த வுடு , சோக்கா, ஊ புள்ளங்கோ ரெண்டு பேரையும், ராஜா மேரி ஆக்கிட்ட அத்த பத்தி சொல்லு ?

கலை ; மனதில் ஈரம் இல்லாமல் பேசாதே, இந்த இடத்திற்கு அவர்களை கொண்டு வர நான் பட்ட பாடு எனுக்கு தான் தெரியும். இருவரும் கழகதிருக்கு ஆற்றிய பணிகள் ஏராளம்

டவு ; தெரியும், தெரியும், செரி உங்க இளவரசிய இன்னாத்துக்கு கலட்டி உட்டுட்டே.

கலை ; யாரை கேட்கிறாய் ?

டவு ; கனி மொழி அம்மாவத்தாம்பா கேக்குறேன்.

கலை ; சமயம் வரும் போது அவர்களின், திறமைக்கு ஏற்ப பதவி தரப்படும்.

டவு ; அப்போ , இப்ப பதவி வங்கனவுங்கோ அல்லாரூம், தெறம சாளிங்கோ இல்லியா ?

கலை ; யாரடா ! இவன் தூக்கி வெளியே போடு .  

( டவுசர் எஸ்கேப் , அடுத்து நம்ப கேப்டன் வீடு )  

டவு ; வாஜாரே, வணக்கம்.

கேப் ; வா டவுசரு , சுகமாக இருக்கிறாயா ?

டவு ; இன்னாத்த சொகத்த கண்டேன் , ம்ம் இந்த பாழா போன சனக்கோ உனுக்கு ஒட்டு
போடல பத்தியா ? எனுக்கு அதுக்கே , சொம்மா மொளகா கட்சா மேரி கீது பா .

கேப் ; வெற்றியும் தோல்வியும் வீரனுக்கு சகஜம் .

டவு ; அதாம்பா , எனுக்கு கூட சந்தேகம், ஒரு பழ மொழி கீது, அழம் தெரியாம கால உடாதே இன்னு , நீ அத்த படிக்கலியா?

கேப் ; சும்மா , வெந்த புண்ணில் வேல உடாதே , டவுசரு ,

டவு ; எங்க உங்க ஊட்டு அம்மா , இந்த எலிக்சன்னுல, சொம்மா கீ கீன்னு கீச்சிட்டான்களே,

கேப் ; அதனால தான், ரெஸ்ட் எடுக்க போய் இருக்கின்றார்கள்.

டவு ; நீ கத்துன கத்துக்கு ஒரு இடமாவது வந்து இருக்கலாம், நீ உன்னூ கொஞ்சம் கருப்பா ஆனது தான் மிச்சம் .

கேப் ; எம்மேல, உனுக்கு இருக்குற பாசம் கூட இந்த மக்களுக்கு இல்லையே டவுசரு.

டவு ; செரி, செரி , அழுவாதே இனி மேட்டாவது பாத்து சூசகமா, நட்த்துக்கோ, வர்ட்டா .  

( டேய், நொட்ட, இந்த அம்மா எங்கட ஆளையே காநோம், டவுசரு வண்டிய கொட நாட்டுக்கு வுடு , அங்க தான் கீறாங்கோ, ) 

கொட நாட்டுக்கு வெளியே , ஏம்பா !! உள்ள போய், இந்த மேரி டவுசரு வந்து கீரான்னு ஒரு வார்த்த சொல்லு ,

வாட்ச் மேன் : யோவ், தள்ளி போயா , வந்டாருடா வடிவேலு , 

டவு ; ஏம்பா, கூட்டாளி நீ நம்ப ஆளா போய்ட்டே, ரவ கதுவ தெறந்து வுடேன், போ சொல்ல உன்ன கவுன்சிக் கிறேன். 

வாட் ; தே, சுருக்கா போய் உசாரா வந்துடுப்பா, ரெண்டு பேரும் , சொம்மா காண்டா கீறாங்கோ. 

டவு ; செரி ,செரி , டூ மினிட்ல வந்துட்ரம்பா .  


டவு ; அம்மா , வணக்கம், அக்கா வணக்கம் .

ஜெய ; இந்த கன்றி புருட்ட யாரு உள்ள விட்டது . டீ, சசி, கம் கம் , இந்த பசங்கள இன்னான்னு கொஞ்சம் கேளு .

சசி ; யாரு நீங்கலாம் ?

டவு ; யக்கா ! என்ன அடையாளம் தெரிலையா ? நல்லா பாரு யக்கா !!! நான் தான் டவுசரு பாண்டி .

சசி ; அக்கா , இவுங்க நம்ப பேட்ட நிருபருங்க அக்கா, நைஸ் மேன் .

ஜெய ; சரி , என்ன வேணும் .

டவு ; அம்மா உங்க கிட்ட சில கேள்வி .

ஜெய ; என்னது என் கிட்ட கேள்வியா ? எப்பவும் நான் தானே கேள்வி கேப்பேன் .

டவு ; சொம்மா, சில கேள்வி தாம்மா !!

ஜெய ; சரி கேள் .

டவு ; இந்த மேரி ஒரு தோல்விய நீங்க எதிர் பாத்தீங்களா?

ஜெய ; யார் தோத்தது, இது வந்ததே பெரி விஷயம் .

டவு ; செரி, இன்னாமோ ஒட்டு போட்டில சூது கீது இன்னு சொன்னீங்களே ? அது இன்னா மேரி கம்பிளைண்டு .

ஜெய ; சும்மா, நம்ப ஆளுங்க எல்லாம் சொல்ல சொன்னாங்கோ அதான் சொன்னேன் .

டவு ; அப்போ, ஒட்டு போட்டில வொண்ணும் இல்ல, இல்லையா ?

ஜெய ; அட நீ வேற சும்மா இந்த தேர்தல நியாபகப் படுத்தாதே, அடுத்த விஷயம் என்ன ?

டவு ; எப்ப மெட்ராஸ் வந்து உங்க கட்சி காரங்கள பாக்க போறீங்கோ ?

ஜெயா ; ரெஸ்ட் எடுத்து கொண்டு இருக்கிறேன் . இன்னும் ஒரு வருடத்தில் வந்து விடுவேன்

டவு ; அங்கு வந்த உடனே, இன்னா பொது குழுவ 
கூட்ட போறீங்களா ?

ஜெயா; சீ , சீ , உடனே பையனூர் பங்களா சென்று ஓய்வு எடுப்பேன் .

டவு ; அதுக்கு எத்தினி நாளு ஆவும், ?

ஜெயா ; உனக்கு எதற்கு நான் பதில் சொல்ல , சசி முதல்ல இந்த ஆள தூக்கி வெளிய போடு.  
( டவுசரு எஸ்கேப் , நொட்ட, டேய் டவுசரு அடுத்து நம்ப எங்க போறோம் , யப்பா !!நொட்ட இந்த எலீச்சன்ள சொம்மா வாந்தி , பேதி ஆனா மேரி கீறாங்களே , நம்ப டாக்டரு அய்யா , அவுர ரவ கண்டு கினு போலாம்பா )  

டவு ; அய்யா !! வணக்கம் , நல்லா கீறிங்களா ?

அய்யா; வா !! தம்பி , நான் நலமாக தான் இருக்கிறேன் .

டவு ; உங்க கட்சி இன்னா மேரி கவுந்துடுச்சி, அப்ப கூட சொம்மா உஸ்தாது மேரி கீறியே ?

அய்யா ; இது ஒரு தோல்வியா ? இந்த மாயா உலகத்தில் எந்த முறையுலோ எங்களையும் மக்களையும் ஏமாற்றி அவர்கள் பெற்ற வெற்றி ஒரு வெற்றியா ?

டவு ; அப்ப, இன்னா சொல்றே , அவுங்கோ அல்லாம் டுபாகூரு பண்ணி தான் கெலிசங்கோ இன்னு சொல்றிங்களா ?

அய்யா ; பின்பு , இந்த தேர்தல் மட்டும் நேர்மையாக நடந்து இருந்தால் எங்களுக்கு இந்த தோல்வி இல்லை ,

டவு ; செரி , இனிமேட்டு இன்னா தான் பண்ண போறீங்கோ ?

அய்யா ; எனக்கும் கொஞ்சம் ரெஸ்ட் வேண்டாமா ?

டவு ; செரி எத்துக்கோ , அப்பால இன்னா பண்ண போறே ?

அய்யா; இப்போது தான் எங்களின் பசுமை தாயகம் வைத்த மரங்களை போய் பார்த்தேன் இன்னும் ஒரு ஆறு மாதத்தில் அவை செழிப்பாக வளர்த்து விடும் .

டவு ; ????????????? இன்னாட நொட்ட இவுரு போற ரூட்டே ஒரு மேரி கீது ? எகுறு நம்ப ஜூட்டு..

அய்யா ; டவுசரு நில்லு நில்லு ..........  

டவு ; மாட்டேன் மாட்டேன் ..................................................


கருத்து, சொல்லு நைனா புட்ச்சா வோட்டு போடு.



இன்னா தான் ஆச்சி ? எங்க தான் கீராரு ? இலங்கை வீடியோ.

· 2 கருத்துகள்


பிரபாகரன் அண்ணாத்தே கீறாரா ? 


இன்றது ஒரு பிரச்சனைன்னா, அதுக்கோசரம் நம்ப ஆளுங்க பண்ற கூத்து கீதே !!! யப்பா !! ஒரே கேரா ஆய் பூட்ச்சிபா !!!! ஆளாளுக்கு ஒரு சந்தேகம் கெளப்பி உடுராங்கோ பா !!  
செரி, அல்லாருக்கும் சந்தேகப்படறத்துக்கு, உரிமை கீது நைனா !! 

அப்பிடியே எனுக்கும் அந்தே மேரி ஒரு சந்தேகம் பா.  

இந்தே விடுதலை புலிங்க, சண்டைல எப்போ இருந்து வீக்கு ஆனாங்கோ இன்னா, அவுங்க கூடவே இருந்த, இந்த கருணா திடீர்னு கோசிக்கினு ( அது இன்னா விசையமோ) போன பின்னாடி தான் இன்னு நா நெனைக்கிறேன் பா, அதுக்கோசரம் அவுரு மட்டு தான் காரணமின்னு நா சொல்லலைபா!! அதுவு ஒரு காரணமா இருக்கும்,  

அப்பால ஒரு மேட்டரு,  

இது வெரிக்கும் அல்லா மன்சாளுங்களும், ஆளாளுக்கு ஒவ் ஒன்னு கூவிகினு கீரா மேரி, இன்னாத்துக்கு, இந்த நூசு குடுக்குற ஆளுங்கோ, நேரா போய், கண்டுகினு வரத்து தானே ?  

அப்பால, இந்த கருணா இப்போ தமிழ் எம் பி தானே, அவுரு இன்னாதான் சொல்றாரு ? இன்னாத்துக்கு எதுமே சொல்லாம கீராரு ?  

நம்ப நெடு மாறன் அண்ணாத்தே இன்னாடான்னா, பிராபாகரன் உயிரோட தான் கீறாரு, அவுருக்கு ஒன்னிமே இல்ல, இன்னு சொல்றாரு, 

செரி அப்பிடியே எட்துக்கினா கூட, அவுரு எங்க கீராரு, இன்னா தான் மேட்டரு, ஆவுது ? 

ஒன்னிமே பிரிலபா, ஒரே கேரா கீது, உடனே, சில உன்மே விளம்பிங்கோ கிராங்கோ, அவுங்கோ சொல்றாங்கோ, 

இத்த வெச்சி செல பேரு பதிவு போடரங்கோ ஐயோ ! இது நாயமா ? எப்படா எளவு விழும் இன்னு காத்துகினு கீறாங்கோ பா !! இன்னு கூவி, கூவி, அதுக்கோசரமே, 

அத்த பதிவு போடாதீங்கோ இன்னு சொல்லி இவுங்கோ ஒரு பதிவு போடராங்கோ பாரு, 
இன்னா ஒரு அறிவு நம்ப ஆளுங்களுக்கு சொல்லு நைனா ?  

என்ன மேரி ஒன்னிமே தெரியாத, கை நாட்டு ஆளுங்கள எப்பிடி ஏமாத்துராங்கோ பாரு ? செரி, இதுக்கு மேல , 

எனுக்கு கீற சில டவுட்டு,  

1 ) புலி தலைவரு உசுரோட கிராருன்னு, நெடுமாறன் சொல்றாரே, எப்பிடி அவ்ளோ இஸ்ராங்கா, சொல்றாரு?  

2) இந்த விசையமா நம்ப கவுருமென்டு இன்னா தான் சொல்லுது ?  

3) முதல் அமைச்சரு கவித எழதி கீறாரே அதுக்கு இன்னா அர்த்தம் ?  

4) உலக நாடுங்க இத்த பத்தி இன்னா தான் சொல்லுது ?  

5) உலக வல்லரசு நாடு, அதாங்க இந்த அமேரிக்கா ஒன்னிமே கொரலு கொடுக்கலியே ?  

6) மின்னமே புலிங்க கூட இருந்த கருணா, இப்போ , எம் . பி யா, கீரர் அவுரு இன்னா சொல்றாரு ?  

7) மெய்யாலுமே, புலி தலைவரு இறந்துட்டாருன்னா, அவுரு பாடி எங்க ?

எதுக்கும் இங்க இன்னாதான் கீதுன்னு பாரேன்.  


இலங்கை அரசு டிவில கீற வீடியோ, பாரு .

    


நம்ப பேட்டைக்கி வந்து , நம்பள, கண்டுகுனதுக்கு ரொம்ப டாங்க்ஸ், வாஜாரே !! அடிக்கடி வந்துட்டுப் போங்க தலீவா !!

இப்ப நேரம் / தேதி

அவாடு குத்தாங்கோ

Photobucket Photobucket

50 -வது பதிவிற்காக, சகோதரி ஜலீலா கொடுத்த விருது

Photobucket

BEST TECHNICAL AWARD

Photobucket Photobucket

இங்கல்லாம் கீறேன்.

அடிக்காதீங்க !! !! !!!

 

IcyBlue | Copyright © 2009 - Blogger Template Designed By Simrandeep Singh