பாண்டி அகராதி

இன்னாபா = என்ன , வன்கம் = வணக்கம் , டாங்குசுபா = நன்றி , இனி மேட்டு = இனிமேல் , மெர்சலாவாதே = பயப்படாதே , டகால்ட்டி = ஏமாற்றுதல் , கலீஜா = அசிங்கமாக , சொம்மா = சும்மா , பிரீலே = புரியவில்லை , டாமாகோலீ = பெரியதாக , கீறியே = இருக்கின்றாய் , மன்சாலு = மனிதர்கள் , அக்காங் =ஆமாம் , பேஜாரா பூட்சி = கஷ்டமாக இருக்கிறது , அந்தே மேரி = அது மாதிரி , கொரலுகுட்தேன் = குரல் கொடுத்தேன் , சோக்கு = அழகாக , பெல்லக்கா பையன் = சின்னப் பையன் , தோஸ்துக்கோ = தோழர்கள் , மட்ச்சீ வந்தே = மதித்து வந்தாய் , கீது = இருக்கிறது , பாந்த்ரா பாந்த்ராவ = பெரிது பெரிதாக , குன்சா = அதிர்ஷ்டவசமாக , ரோசகாரமன்சன் = தன்மானமுள்ள மனிதன் , டிமிக்கி குட்தாம்பா = ஏமாற்றிவிட்டான் , கொட்டா = தியேட்டர் , பகுரா = பகட்டாக , சல்பேட்டா = சரக்கு , அப்பால = பிறகு , ஓர = சாராயம் , பிகிலு = சரியாக , உஸ்தாது = மிடுக்காக, டுபாகூரு = பொய் ,டாணாகார் - போலீஸ்கார் , உதாரு உட்டேன் - பயம் காட்டினேன் , சோக்கு குஜிலி - அழகான பெண் , ஜவ்வு - அறுவை , சோக் மாலு - நிறைய பணம் , பிஸ்தா - ரவுடி , அபீட்டு - வந்து விட்டேன் ,

நம்ப போட்டோவை டவ்ன் லோடு செய்யாமல் இருக்க ,எனுக்கு தெர்ஞ்ச சில வழி - டவுசரு பாண்டி.

·


அல்லாருக்கும் இந்த டவுசரோட ,வன்கம் பா !!

நா ஒரு எழ்த படிக்க தெரியாத ஆளுப்பா, எனுக்கு தெரிஞ்ச ( ! ) மேரி கீர
சில மேட்டருங்கள உங்க கிட்ட , சொல்லிக்கினு போலான்னு வந்து கீரன்பா !!

இந்த கம்பீட்டரு பொட்டிய, எந்த ஒரு மவராசன் கண்டு புட்சானோ தெர்லபா,
சோக்கா தான்யா, கண்டு புட்சான், மன்சன் .

இந்த பொட்டிய நா தொட்டு இப்ப தான்பா, கத்துகினு வரேன், செரி,
அதுக்கு இன்னாடா ? இன்னு கேக்கரியா , சில விசியம், என்ன மேரி
கஷ்டப்பட்டு புத்சா கீரவங்களுக்கு, உதவட்டுமேன்னு தான், இது பத்தி
கூவிக்கிறேன்,

நல்லா பட்ச மன்சாளுங்கோ, தயவு செஞ்சி உஷாரா, தாண்டி பூடுங்கோ ,
( அப்பால உனுக்கு தேர்ந்ஜதும் மறந்துட போது) இப்போ ,

அல்லாமே, இந்த பொட்டில கீற மேட்டரு தான், ( நெட்டுல )ஆனா அது எங்க
கீது ? அதும் இல்லாமே அத்த சில பேரு பட்சிட்டு வந்து இன்னவோ
இவுங்குளே கண்டு புட்ச்சா மேரி போட்டுகுராங்கோ பாரு, அதான்
இன்னான்னு பிரில,செரி , இப்போ இதல்லாம் எங்க கீது இன்னு
பாக்கலாம்.

இந்த எழ்துங்கோ அல்லாம் இப்பிடி அப்பிடி ஓடுதே , (running text)அது எப்பிடி
இன்னு பாக்கலாம். உனுக்கு இன்னா மேட்டரு ஒடனுமோ அத்த எழதி
அதுக்கு மின்னால , பின்னாலயும் இது மேரி சேத்துக்கோ, அதுக்கு
இங்க அமுக்கு உன்னோ நெரை மாடலு கீது.இதல கீற மாடல்ல எது
ஒனுமோ அத்த கப்புனு புடி. அக்காங், அப்பால, இதிலேயே கலரு குடுக்குற மேரி
அதுக்கு இங்க அமுக்கு

இந்த ரீஜண்ட்டா நமபுளுக்கு கமண்டு எழ்தனவங்கோ, நம்ப பிளாக்குல
தெரியர்த்துக்கு இதப் பத்தி வேற யாரோ ஒரு ப்ளாக்குல போட்டங்கோ பா !!
அதுக்கு ஒரிஜினல் லிங்க்குஇங்க கீது பாரு ,

அப்பால, இந்த ட்ராப்பு டவ்னு மெனு இன்னு ஒன்னு கீது பாரு ( ? ) அதாம்பா,
ஒரு சின்ன கட்டத்துல, தலைப்பு எழதி , அதுக்கு உள்ளயே ,
நெரியோ , தலிப்பு குத்து எது வோனுமோ அத்த கரீக்டா !!
எட்துகர்த்து தம்பா. இத கண்டுக்கோ.

அப்பாலிக்கா, நம்ப அழகான போடோவ யாராது ( ? ) அல்லேக் குத்து , எதுனா
உட்டாலங்கடி வேல பண்ணிட்டா இன்னா பண்றது நைனா , அதுக்கு தான்,
இது மேரி ஒன்னு கீது , இந்த டவுசரு போட்டோவ ரவ காபி பண்ணு ,
( செரி நம்ப அழகுக்கு யாரது நம்ப சொல்லி தான் பண்ணனும் )




டவுசரு கிட்ட போனாலே, தொடாதே, வாஜார்.- இன்னு கூவுது பாரு,
இது ஒன்னியும் நா கண்டு புட்ச்சது இல்லப்பா !! இந்த மேரி பண்றதுக்கு ,
இங்க வந்து பண்ணி பாரு,

செரி, இதுக்கும் அப்பால, ஒரு மேட்டரு கீது, நம்ப எழ்தரதுக்கும், பின்னாலே
ஒரு பேக்ரொவ்ன்டு, இர்னதாக்கா நல்லாத்தான் இருக்கும் இல்ல, அதுக்கு
ஒன்னு கீது , இங்கே போ வாஜார், உனுக்கு இன்னா பேக்ரொவ்ன்டு,
ஒனுமோ ! அது கிளிக்கு பண்ணி அதுக்கு ஒரு கோடின்கு, அதுவே
குடுக்குது பா !! இந்த கலரு புடிக்கலன்னா, அந்த அத்த மறுபடி ரீ
லோடு,பண்ணு வேற வரும். அப்பால உனுக்கு
இன்னா கஷ்டம் சொல்லு ?

செரி, இப்போ ஒரு சின்ன வெள்ளாட்டு உனுக்கு
இங்க கீற படம், பாத்தியா ? நல்லா கீதா ,
( எங்க குஜிலி ஆச்சே சோக்கா கீது ) இப்போ !! ரம்பா !! போட்டா கிட்ட இந்த
எலிய ( ? ) அதாம்பா !! மவுசு கீதே ,அத்த எத்துகீனு போய் வை , வெச்சிட்டு ,
அப்பால எட்துடு , நம்ப ரம்பா நாட்டிக்கிச்சி பத்தியா நைனா !! சோக்கா கீதா ?
மறுபடி வை , இதயே செய்துகினு இருக்காதே !! அப்பால ரம்பாக்கு எதுனா
ஆயிட கிய்ட போது , சும்மா பேப்படாத நா கீரேன் ,

( எதனா ஆச்சின்னா !! உன்ன உட்டுட்டு ஓடிப் பூட மாட்டேன், அக்காங் )

செரி , இதுக்கு மேல உன்னோ மேட்டரு சொன்னா !! அத்த தாபா,
எழ்தர்த்துக்கு மேட்டருக்கு நா எங்க போறது சொல்லு.






இந்த மேட்டரு அல்லாம் உனுக்கு புட்ச்சா ( ? ) ஓட்டு போடு , இல்லா காட்டி,, கர்த்து போடு !! )



11 கருத்துகள்:

Dubukku said...

கலக்கற போ பாண்டி பிரதர்...உனக்கு தெரிஞ்சது நாலு பேருக்கு தெர்யனும் நினைக்கிற பாரு...நீ ஜென்டில்மேன் பிரதர்

Mohan said...

டவுசர் அண்ணாத்தே! ரொம்ப பயனுள்ள மேட்டர் சொல்லிக்கீற! ரொம்ப டான்க்சுப்பா!
தொடர்ந்து இதுப் போல எழுதுப்பா! அக்காங்...

டவுசர் பாண்டி said...

//நீ ஜென்டில்மேன் பிரதர்//- Dubukku கூறியது..

?? -ஹய்யா !! நம்பல கூட ஜென்டில் மேன் இன்னு சொல்ற காலம் வந்துடுச்சி ( ? )

டவுசர் பாண்டி said...

//தொடர்ந்து இதுப் போல எழுதுப்பா! அக்காங்..// - Mohan கூறியது...

மோகனு அண்ணாத்தே , எழ்தரம்பா, எழ்தரன், ( ? ) அதுக்கோசரம் நம்ப கலாட்டாவே ரசிக்காமே பூடாதேபா !! அப்பால நம்ப பசண்கோ கோசிக்குவானுங்க்கோ,

Nathanjagk said...

நல்லா கீதுப்பா ​டெக்னிக்கு!
ஒரு தொடர்பதிவு விருதாக எனது வலைப்பூவான, காலடி-க்கு 'The Interesting Blog' அவார்ட் கொடுக்கப்பட்டிருக்கிறது! என்னை ஊக்குவிக்கும் விதமாக உங்கள் வலைப்பதி​வைக் காண்கி​றேன். அதற்கு என் அன்பு மற்றும் நன்றிகள்! உங்கள் வலைப்பூவைப் பற்றி இந்த இடுகையில் குறிப்பிடுவதில் ​பெருமகிழ்ச்சியடைகிறேன்!

டவுசர் பாண்டி said...

இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

டவுசர் பாண்டி said...

ரொம்ப டான்குசு வாஜார்,நம்பல நியாபகம் வச்சிக்கீனு கீரத்துக்கு,
நல்லா கீரியா ? இண்டறு ஸ்டிங்கு பிளாக்கு அவாடு வாங்கனதுக்கு, சந்தோசம் வாஜார். வாழ்த்துக்கள் தல .

யூர்கன் க்ருகியர் said...

சார் எவ்வள மேட்டர் சொல்லி இருக்கீங்க! கிரேட் சார்
நீங்க நல்ல இருக்கணும் சார். :)
மிகவும் பயனுள்ளதாக இருக்கு சார்.

டவுசர் பாண்டி said...

யப்பா !! நமபுளுக்கு ஜல்ப்பு புட்சிக்கீம் போல கீதே ?????

எனை வெச்சி காமிடி கீமிடி பண்ணலேயே ( ^ _ ^ )

பொன் மாலை பொழுது said...

அத்து இன்னாபா இந்த ரம்பா பொண்ணு இப்டீ பிஜ்லீ கணக்கா சில்துகினுகீது ? கரண்டு ஷாக் வசிகினியா தொற? அத்து செரீ இந்த ரம்பா பொண்ணு விஷ்யம் "மினியம்மா " கைல சொல்லிகினா நீ அம்பேல் !!!

டவுசர் பாண்டி said...

தப்பாரு !! ஐயே !! இன்னா வோனுமே அத்த சொல்லு ரவ, சல்பேட்டா
உட்டுக்கீரியா துரை , மினிமா கிட்ட எதுவு சொல்லாதே !! பெரி பேஜாரா பூடும், இன்னா !!

கருத்துரையிடுக

.
.
எதாவது புரீரா மேரி எழ்து தலீவா !! .

நம்ப பேட்டைக்கி வந்து , நம்பள, கண்டுகுனதுக்கு ரொம்ப டாங்க்ஸ், வாஜாரே !! அடிக்கடி வந்துட்டுப் போங்க தலீவா !!

இப்ப நேரம் / தேதி

அவாடு குத்தாங்கோ

Photobucket Photobucket

50 -வது பதிவிற்காக, சகோதரி ஜலீலா கொடுத்த விருது

Photobucket

BEST TECHNICAL AWARD

Photobucket Photobucket

இங்கல்லாம் கீறேன்.

அடிக்காதீங்க !! !! !!!

 

IcyBlue | Copyright © 2009 - Blogger Template Designed By Simrandeep Singh