பாண்டி அகராதி
இன்னாடா இது கோரமையா கீது, இந்த எலீச்சனுல தோத்து பூட்டு,
எதனா மூள,கீள, கொழயம்பி பூட்சாப்பா !! நம்ப டாக்டருக்கு,
போன வாரம் ஒரு நியூசு பேப்பருல ஒரு அறிக்க குட்தாருபா,
அது இன்னான்னா ,
இனி மேட்டு ஆருக்கும் ஒரு ரூவா கூட குடுக்காத, அல்லா
எலீச்சன்னுளையும் கெலிக்கப் போறேம் பார், அப்பிடீன்னு
பேட்டி அல்லாம் குட்துக் கீறாரு ?
இவுரு இன்னா தான் சொல்ல வாராரு ? அப்ப , இது வெரிக்கும் துட்டு
குட்து தான் கேலிச்சாருனு சொல்ல வராரா,
அப்பிடியே , இவுரு ஒரு ரூவா கூட குடுக்க மாட்டேன்னு சொன்னா கூட,
இந்த எலீச்சனுக்கு டெப்பாசிட்டு கட்டத் தேவலீயா ? இன்னாடா இது
அநியாயமா கீது ?
அப்போ நம்ப கூட எலீச்சனுல துட்டு கட்டாத நிக்கலாமா ?
ரவ கேட்டு தான் சொல்லேன் . ஐய , சொம்மா நம்ப பேட்டைளையும்
உஸ்தாது கணக்கா , சுத்தி சுத்தி வருவேனே . இன்னா சொல்றே ?
14 கருத்துகள்:
Thanks thala.. Thanks Bond - Engal Anbu James Bond
//யப்பா !! தலீவா !! உண்மைக்க, மெய்யாலுமே சொல்றேன், அல்லா போட்டவும்
தூள் டக்கரும்மா !! உனுக்கு ஒரு சல்யூட்டு வாஜாரே !!
////Thanks thala.. Thanks Bond - Engal Anbu James Bond//
- தமிழ்நெஞ்சம்.
இன்னவோ ,நம்பல
கலாக்கிராருனு பிரியுது ஆனா, இன்னான்னு தான் பிரியல
கலக்கிட்டே வாத்தியாரே! அத்து இன்னா பா scolling ஒடிகினுகீடு !!?? நல்ல ஐடியா நைனா
நம்ம மெட்ராஸ் லாங்குவேஜி மத்த மன்சாளுக்கு பேஜாரு தலிவா. அத்த பிர்ஜிகினு நல்லாதான் ச்க்ரோலு உட்டுகினுகீர. அத்து இன் நானு தெரிலப்பா களுத நம்கும் புத்சீகீது தல.
நல்லாத்தான் டமாசு பண்ணிக்கினு ,கலாய்ச்சிகினு, ரவ்சு பண்ணிகினு .... O.K.
Best of Luck "tavusar paandi"
பிரியமுடன்
கக்கு-மாணிக்கம்.
நான் சத்தியமா அசல்.கும்பகோணத்துக்காரன் (தஞ்சாவூர்) சென்னை வாசம் சென்ற 30 வருடங்களாக.
"சென்னை தமிழில் " பேச என்னக்கு கொள்ளை ஆசை. வீட்டில் பேசினால் மகா கேவலமாகிவிடும் பொழப்பு .... இனி உங்க கூட்டத்துடன் நானும் .... மாணிக்பாஷா -பேரு எப்படிக்கீது ? கலீஜா இல்லந்காட்டி இடத்தையே வேச்கோ தல. வரட்டா ......
//"சென்னை தமிழில் " பேச என்னக்கு கொள்ளை ஆசை. வீட்டில் பேசினால் மகா கேவலமாகிவிடும் பொழப்பு .//
- கக்கு - மாணிக்கம்.
நா கீறேன் வாஜாரே, உனுக்கு
நம்ப கூட சொம்மா
உட்டாலங்கடி கணக்கா, பேசலாம், நம்ப கூடசேந்துக் கீனே இல்ல, உன்ன ஒரு வயி பண்ணிகீறேன்.
(பேசி தாம்பா. அதுக்குள்ளே நீ பேந்துக்காதே)
Thank you so much : வாஜாரே
என்னாபா எப்டிகீர தோஸ்த்து ......? ஒன் பத்த்லு பட்சேம்பா ஒரே குஜாலா புட்து நைனா. நல்லாந்தா ராவிகினே. உன் அட்ரசு என்கைல சொல்லு நைனா , உன்கு இன்னா பிராண்டு வேணும் நம்ம கையல சொல்லு தோஸ்து. இட்டாரேன் ராசா. நம்க்கு தோஸ்துநாக உசிரு தொர. நம்மாளு நல்லா எளுதிகீர அட ஒரு ஓட்ட இட்டா இன்னா அப்படீனு ரோச்னயில அந்த கருமம் அத்து இன்னா ...அந்தபொத்தான அமிக்கி அமிக்கி என் வெரலு நோவுது நைனா . நான் இன்னாதான் பண்றது நீயே சொல்லு. இளக்சனு ஒட்டு மிசினு கணக்கா "error message " வர்து ராசா. இன்னாட இது நம்மாளுக்கு ஒட்டு போட்டுக்க இயலாம பூட்சேனு ஒரே பீலிங்கா பூட்டுது.
அன்புள்ள "டவுசர் பாண்டி"
நாம் இங்கு நடத்தும் 'ராவடிகல" நினைத்து ஒரு பழைய திரைப்படம் நினைவில் வந்தது.
பாதகாணிக்கை - நம்ம "சாம்பார்' ஜெமினியும் சாவித்திரியும் அத்தை மாமா உறவில் ஜோடிகள், காதலர்களும் கூட. சமையல் அறையில் அவர்கள் மெட்ராஸ் பாஷயில் ஒருவரை ஒருவர் வாரிவிட்டுக்கொண்டு பேசுவார்கள். அசல் மெட்ராஸ் கன்னியப்பன் -மினியம்மா ரேஞ்சில் பிரமாதமாக இருக்கும். சந்த்ர பாபு கூட ஒரு படத்தில் பால் காரனாக வந்து "நம்ம பாஷையில் " வெளுத்துகட்டுவார். ரசமாக இருக்கும். புதியவர்களுக்கு இந்தபாஷை அலறவைக்கும் ஆனால் அந்த மனிதர்கள் உண்மையில் இறக்க குணமும், முன் பின் தெரியாதவர்களுக்கு கூட கைம்மாறு கருதாது உதவும் பண்பும் கொண்டவர்கள் என்று கண்டவன். அனால் சண்டையென்று வந்துவிட்டால் தொலைந்து , சகலமும் பாழ். காதில் துணியை கிழித்துத்தான் அடைத்துக்கொள்ளதோன்றும். எழுத்தாளர் திரு ஜெயகாந்தன் அவர்கள் கூட இந்தமக்களையும் இந்தபாஷயையும் அதிகம் கையாண்டவர் என்பது குறிப்பிடவேண்டும்.
சரி நைனா.. டயம் ஆய்பூட்சிபா, நாவர்டா.
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
இன்னாது, நம்ப வோட்டு உயளியா ??
இத்த நா சொம்மா உடப் போறது இல்ல,
இந்த டவுசருக்கே இந்த கதின்னா,
நம்ப மருவாதி இன்னா ஆவறதுன்னு சொல்லு, ?
செரி, நீ வோட்டு போடறதுக்கு லாகு இன்னு ஆனியா ?
இல்லியா ?? அத்த சொல்லு ? அப்பால, அது காண்டி
கரீக்டா இருந்து, வோட்டு உயலீன்னா ?
இந்த டவுசரு யாருன்னு இந்த பொட்டிகி காட்றேம்பார் !!
சொம்மா பொக வர வெரிக்கும் உட மாட்டான் இந்த
டவுசரு .
இன்னாபா தோஸ்த் .... எங்க பூட்ட நீ ........ கண்ல காண்ல ? வெரசாவா. அத்த வுடு. நாம புச்சா வூடு கட்டிகினுகிரப வந்து கண்டுகினியா ? ரொம்ப டான்க்சு பா. அத்து நம்ப தோஸ்துந்கொ கபாலி ,குள்ள பாலு ரெண்டு களுதங்களும் புது வீட்டாண்ட வந்து கண்டுகினாங்களா .....அவனுங்கல கடிகீ இட்டாந்து அத்துகளுக்கு சல்பேட்டா ஊத்திகினுகீரபோ நீ வந்துகின போல.
அத்து இன்னா நீ கலரு சட்ட இட்டுகினு, கண்ல க்ளாசு இடடுகினு உன் மூஞ்ச மூடிகினு ஹீரோ கணக்கா கீரபா ஆனாக்க என்கு மெய்யாலுமே . ஒன் மெய்லு ID அப்பால ஒன் படம் (அசலு ) அனுப்பு நைனா
வேறு யாருன் உன்னிய மாத்ரி பிரியா குஜாலா இல்ல தொர.
சரி தல ... வர்டா ... மெய்லு அனுப்பு.
Aha
//
போடா !! போடா !! சோமாறி , எதோ நானு கொஞ்சம் மூள கீற ஆளா இருக்க
சொல்லவே, இந்த ஒலகம் இப்பிடி கீதே ? உண்ணூம் ஒன்னிமே தெரியாத
ஆளா இருந்தா, பிஸ்கட்டு பண்ணிட்டு இருப்பாங்கோ பாரு,
இத நென்சி தான் நம்பளுக்கு ஒரே பீலிங்கு,
டாங்க்சுபா !!!
இம்மாந் தொலைவு வந்து நம்பல கண்டுகுனதுக்கு,
ஆனாலும் சோக்கா கீதுபா
ஷோபிகண்ணு -- வாஜார்,
பேரே சோக்கா கீதுபா !!!
வா , தலீவா !! நம்ப ஊட்டுக்கு புச்சா வந்துகீற , அதுக்கு உனுக்கு
ஒரு சலாம், அப்பால , வந்தது தான் வந்தே ஒரு வாய் காப்பித் தன்னியாது குட்சிட்டு போதாவளியா ? என்ட்ரி குட்ததுக்கு ரொம்ப டான்குசுபா !!
கருத்துரையிடுக