பாண்டி அகராதி

இன்னாபா = என்ன , வன்கம் = வணக்கம் , டாங்குசுபா = நன்றி , இனி மேட்டு = இனிமேல் , மெர்சலாவாதே = பயப்படாதே , டகால்ட்டி = ஏமாற்றுதல் , கலீஜா = அசிங்கமாக , சொம்மா = சும்மா , பிரீலே = புரியவில்லை , டாமாகோலீ = பெரியதாக , கீறியே = இருக்கின்றாய் , மன்சாலு = மனிதர்கள் , அக்காங் =ஆமாம் , பேஜாரா பூட்சி = கஷ்டமாக இருக்கிறது , அந்தே மேரி = அது மாதிரி , கொரலுகுட்தேன் = குரல் கொடுத்தேன் , சோக்கு = அழகாக , பெல்லக்கா பையன் = சின்னப் பையன் , தோஸ்துக்கோ = தோழர்கள் , மட்ச்சீ வந்தே = மதித்து வந்தாய் , கீது = இருக்கிறது , பாந்த்ரா பாந்த்ராவ = பெரிது பெரிதாக , குன்சா = அதிர்ஷ்டவசமாக , ரோசகாரமன்சன் = தன்மானமுள்ள மனிதன் , டிமிக்கி குட்தாம்பா = ஏமாற்றிவிட்டான் , கொட்டா = தியேட்டர் , பகுரா = பகட்டாக , சல்பேட்டா = சரக்கு , அப்பால = பிறகு , ஓர = சாராயம் , பிகிலு = சரியாக , உஸ்தாது = மிடுக்காக, டுபாகூரு = பொய் ,டாணாகார் - போலீஸ்கார் , உதாரு உட்டேன் - பயம் காட்டினேன் , சோக்கு குஜிலி - அழகான பெண் , ஜவ்வு - அறுவை , சோக் மாலு - நிறைய பணம் , பிஸ்தா - ரவுடி , அபீட்டு - வந்து விட்டேன் ,

சும்மா பழச நெனைச்சேன்,

·








அந்த காலத்துல நம்ம தலிவர் கமராஜறு கமராஜறு
அப்பிடின்னு ஒர்த்தரு முதலமிச்சரா, இருந்தாராம் , 
அப்போ இந்த மேரி வெளியே போம் போது கூட வந்த
ஒரே ஒரு சீப்பு வண்டி கூட வாணாம் போ, அப்பிடின்னு
டாக்க, கொடுத்துட்டு தனிய போனாராம்பா ! அட இப்பிடி
கூட ஒரு நல்ல மன்சனா , அப்பிடின்னு நம்ப கண்லே, தண்ணி 
வந்துட்சிபா, இப்ப கீற தலீவருங்கோ, சொம்மா , இப்பிடி அப்பிடி
இன்னு பந்தா , காட்டி பயாஸ்கோப்பு கட்டராங்கப்பா ,  
நம்பளுக்கு இந்த மேரி இந்த மேரி மேட்டருடா, அப்பிடின்னு
நம்ப ஈஸ்கூலு வாத்தி தான் சொல்லிச்சிப்பா , இல்லன்ன 
நம்ப மேரி ஆளுங்களுக்கு எப்பிடி தெரியு சொல்லு.

இந்த பொட்டிலே கீற ப்ளே பட்டன அமுக்கி
அந்த கோரமைய நியுந்தான் பாறேன் .
தேங்குசு பா ! நீயுதான் நாலு எடத்துல இந்த மேட்டற சொல்லுவியா !













4 கருத்துகள்:

டவுசர் பாண்டி said...

இன்னாபா நம்ப தோஸ்து கபாலிக்கு ஒரு எடம் கூட யாரும் சொல்லல, குயந்த பையன் மனசு உடஞ்சி கடக்குறான்.

அது சரி(18185106603874041862) said...

பொது ஜனம் கண்டுக்கலைன்னு கவலைப்படாத கண்ணு....நீ புச்சு இல்லியா...அதான் சனம் இன்னும் கெவினிக்கல...நீ மெர்சலாயிடாத...

டவுசர் பாண்டி said...

//அது சரி
அண்ணாத்தே ! //

நீயாவது நம்பல மச்சி
கண்டுகீநியப்பா!
ரொம்ப தாங்க்ஸ் வாத்தியாரே .

ஆனந்த். said...

காமராஜரின் குணத்திற்கு இதுவும் ஒரு எடுத்துக்காட்டு.
வாழ்க காமராஜர் புகழ்.

கருத்துரையிடுக

.
.
எதாவது புரீரா மேரி எழ்து தலீவா !! .

நம்ப பேட்டைக்கி வந்து , நம்பள, கண்டுகுனதுக்கு ரொம்ப டாங்க்ஸ், வாஜாரே !! அடிக்கடி வந்துட்டுப் போங்க தலீவா !!

இப்ப நேரம் / தேதி

அவாடு குத்தாங்கோ

Photobucket Photobucket

50 -வது பதிவிற்காக, சகோதரி ஜலீலா கொடுத்த விருது

Photobucket

BEST TECHNICAL AWARD

Photobucket Photobucket

இங்கல்லாம் கீறேன்.

அடிக்காதீங்க !! !! !!!

 

IcyBlue | Copyright © 2009 - Blogger Template Designed By Simrandeep Singh