பாண்டி அகராதி
போட்டோ ஷாப் இன்னு ஒரு விசியம் கீது , அப்பீடீன்ற மேட்டர்
எனுக்கு , நம்ப தலீவர் வேலன் எழ்தரப்பத்தான் தெரியும் , அதுல ,
இந்த மேரி பெரி பெரி தில்லாலங்கடி வேல அல்லாம் செய்யலாம் ,
அப்பெடீனு , லேட்டா தாம்பா தெரிய வந்துது , செரி, இன்னுட்டு
நானும் அத்த பத்தி தெரிஞ்சிக்கலாம் , இன்னு பாத்தா ,
நம்ப கிட்ட போட்டோ ஷாப் - சாப்ட் வேர், இல்ல .செரி அதுக்கு
நம்ப இன்னாடா !! பண்ணலாம், இன்னு ரோசன பண்ண பின்னால,
தான் இதுக்கு ஏண்டா ? பாண்டி பீலிங்கு , இன்னு தோஸ்து ஒர்த்தர்
சொன்னாருப்பா , அப்பால , அர்ஜீன்ட்டுக்கு அதுல போய் தான்
எதோ நம்பளுக்கு தெர்ஞ்ச வெரிக்கும்,கத்துக்கினு வர்றேன் .
செரி , என்ன மேரி போட்டோ ஷாப் - சாப்ட் வேர் இல்லாம ,
கஷ்டப்படரவங்களுக்கு உதவட்டுமேன்னு தான் இந்த மேட்டர
சொல்றேன் ,
போட்டோ ஷாப் - 6 - கீற அல்லா டூல்சுல்ம் இதுல இருக்கறதால
சாப்ட் வேர் இல்லை அப்படின்ற, கஷ்டமே இல்லை , ஆன் லைனுல -
பாத்துக்கோ தலீவா !! ரொம்ப நல்லா இருக்கும்.
அப்பால உங்களோட ஒட்டு + கருத்துக்கு தாம்பா டவுசரு வெய்ட்டிங்கு.

அல்லாரும் தான் , T - ஷர்ட்டு போட்டுக்கீனு கீறாங்கோ !!
இப்போ , இதுல கீர மேரி ஒரு டிசைன்னு பண்ணி,
புது மேரியா , நம்ப போட்டோவ அதுல ப்ரின்ண்டு பண்ணி ,
போட்டுக்கிட்டா , சொம்மா குஜாலா இருக்காது ?
நம்ப போட்டோவ போய் ( ? ) இன்னாத்துக்கு அப்பிடின்னு
நெனைக்கிரியா, செரி, உனுக்கு புட்ச
குஜிலி போடோவ போட்டுக்கோ !! இதுல கீர வீடியோவ பாரு ,
தலீவா !!