பாண்டி அகராதி

இன்னாபா = என்ன , வன்கம் = வணக்கம் , டாங்குசுபா = நன்றி , இனி மேட்டு = இனிமேல் , மெர்சலாவாதே = பயப்படாதே , டகால்ட்டி = ஏமாற்றுதல் , கலீஜா = அசிங்கமாக , சொம்மா = சும்மா , பிரீலே = புரியவில்லை , டாமாகோலீ = பெரியதாக , கீறியே = இருக்கின்றாய் , மன்சாலு = மனிதர்கள் , அக்காங் =ஆமாம் , பேஜாரா பூட்சி = கஷ்டமாக இருக்கிறது , அந்தே மேரி = அது மாதிரி , கொரலுகுட்தேன் = குரல் கொடுத்தேன் , சோக்கு = அழகாக , பெல்லக்கா பையன் = சின்னப் பையன் , தோஸ்துக்கோ = தோழர்கள் , மட்ச்சீ வந்தே = மதித்து வந்தாய் , கீது = இருக்கிறது , பாந்த்ரா பாந்த்ராவ = பெரிது பெரிதாக , குன்சா = அதிர்ஷ்டவசமாக , ரோசகாரமன்சன் = தன்மானமுள்ள மனிதன் , டிமிக்கி குட்தாம்பா = ஏமாற்றிவிட்டான் , கொட்டா = தியேட்டர் , பகுரா = பகட்டாக , சல்பேட்டா = சரக்கு , அப்பால = பிறகு , ஓர = சாராயம் , பிகிலு = சரியாக , உஸ்தாது = மிடுக்காக, டுபாகூரு = பொய் ,டாணாகார் - போலீஸ்கார் , உதாரு உட்டேன் - பயம் காட்டினேன் , சோக்கு குஜிலி - அழகான பெண் , ஜவ்வு - அறுவை , சோக் மாலு - நிறைய பணம் , பிஸ்தா - ரவுடி , அபீட்டு - வந்து விட்டேன் ,

கூகிள் வீடியோக்களை நமது பிளாக்கில் இணைப்பது எப்படி ?

· 22 கருத்துகள்


தலீவா !! எல்லாருக்கும் வணக்கம் , 



இப்போ , நெரியோ கூகிள் வீடியோ கீது , அதுல எந்த தலைப்புல கீர,
வீடியோ ஒனும்னாலும் நம்ப பிளாக்குல வர வெச்சி நம்ப பிளாக்க
பாக்கறவங்க , இந்த வீடியோவையும் பாக்கறா மேரி பண்ணலாம் .


செரி, இப்போ அதுக்கு மொதல்ல நீங்க உங்க கூகிள் அக்கௌன்ட்ட 
ஓபன் பண்ணி வெச்சிட்டு , இந்த எடத்துக்கு போங்க , 


            

படத்துல கீரா மேரி ஒரு பேஜ் ஓபன் ஆவும் , அதுல 1 , இன்னு இருக்குற 
எடத்துல உங்களுக்கு தேவையான தலைப்பு குடுங்க , நானு வடிவேலு 
காமிடி குடுத்து கீரேன், அடுத்து , 2 , இன்னு இருக்குற எடத்துல , உங்க 
பிளாக்கு அட்ரச குடுங்க , அப்பால ,

3 , இன்னு கீர எடத்துல generate code இன்னு இருக்குற அமுக்கி அதனோட 
கோட எடுங்க ,கீய கீர படத்த பாருங்க !! 

                    


அப்பால வயக்கம் போல  

Dashboard > Layout > Add a Gadjet > HTML/JavaScript ,
சேத்துட்டா, போதும் ,

இப்போ , இதை எந்த எடத்துல வெச்சா நல்லா இருக்கும் இன்னு 
நீங்க நெனைக்கேரீன்களோ !! அந்த எடத்துல வர வெக்க , 
கீய கீர படத்துல இருக்குறா மேரி பண்ணாக்கா , போதும் .அப்பால , 

       


      

ரொம்ப மிக்கியமான விசியம் பதிவு புடிச்சா ஒரு ஓட்ட போடுங்க 
தலீவா !! 


வலை உலக தோஸ்துங்களுக்கு மிக்கிய அறிவிப்பு !!

· 31 கருத்துகள்

தல அல்லாரும் என்க்கு மன்னாப்பு குட்துடுங்க தல , இம்மாம் நாளுநானு காணாத பூட்டேம்பா !
 ( ஆமாம் , இவுரு இருந்து மட்டும் இன்னா கீச்சாறு )


பொங்கலுக்கு நம்ப தோஸ்து அல்லாரையும் பாத்து பொங்க மருவாத 
வாங்கிக்கீனு வரலாம் இன்னு , 


ஒரு ரவுண்டு வந்தேம்பா !! வந்து அட , நம்ப மக்களுக்கு எதுனா நூசு 
குடுக்கலாம் இன்னு , இந்த பொட்டிய தொறந்தா !! 


ஊர்ல கீர எல்லாருக்கும் இன்டர்நெட்டு வருது நம்பளுக்கு மட்டும் வரல , 
( எதிரி நாட்டு சதியா இருக்கும் ) இன்னாடா !! இது கோராமையா பூடுது 
இன்னு !! மாரியாத்தாவ வேண்டிக்கீனு மறுபடி நோண்டி பாத்தேன் பா !! 
அப்பவும் வரல, அது மட்டும் இல்ல , 


எதுவுமே ஓபன் ஆவல, ஒரே கஷ்டமா பூடுது , சரி நாம தான் பெரி ஆளா 
பூட்டோமே ( ? ) இன்னு நம்ப பொட்டிய , restore பண்ணலாம் இன்னு, 
ஒரு சாப்ட்டு வேறு போட்டு பாத்தேம்பா !! ( microsoft ல கீதே system restore 
அது இல்ல ) பூட் ஆச்சி , அப்பாடா இன்னு my computer ஓபன் பண்ணி பாத்தா , 


ஐயோ !! ரெண்டு டிரைவ்வக் காணோம் !! சரி , நாம தான் செரி இல்ல , 
நம்ப பில் கேட்சு அண்ணாத்த வழிய பாக்கலாம் இன்னு சிஸ்டம் restore 
பன்னேம்பா , 


அட இப்ப பாத்தா நம்ப கஷ்டமான தட்டு அதாம்பா , Hard disk கக் 
காணோம் இன்னு சொல்லுது , நா இன்னா பண்ணுவேன் , 


யாரோ சூனியம் வெச்சா மேரி நம்ப பொட்டி நம்பளுக்கு அம்பேல் 
குட்துடுதுபா !! ஒரு வேல நா எழ்தர்து யாருக்கோ புடிக்காத போய் 
இந்த மேரி பண்ணிட்டாங்கோ !! போல கீதுன்னு நென்சிக்கீனு , 
ஒரு கொர அழ்துட்டு , 


அத எட்துக்குனு அந்த கம்பனிக்கு போனேன்பா !! அங்க இருந்த ஒரு பெரி 
மன்சன் ok , உங்க பேரு , ஊரு , அட்ரசு எல்லாம் சொல்லுங்க இன்னு 
கேட்டான் , எல்லாத்தையும் சொல்லி , கைய நீட்டுனேன் , வாட் , இன்னு 
கேட்டான் , வேற குடு தல , இன்னேன் ,அதுக்கு ஒரு மொர மொரச்சிட்டு , 
போய் பத்து நாளு கழ்ச்சி வா , தேறுமா தேறாதா இன்னு சொல்றேன் 
இன்னு சொல்டாம்பா !! 


அட போடா கைத , அது வெரிக்கும் என் தொஸ்துங்களுக்கு யாரு தாவா 
சொல்றது , நானு இத்தினி நாளு மேட்டரு சொல்லாத இந்த பதிவுலகமே
அல்லோல, கல்லோலப் படுது , ( ? ) இதுல நீ வேற டமாஷ் பண்ணிக்கீனு,
இன்னு காரி மூன்சிட்டு , !!!


எவ்ளோ செலவானாலும் பரவாயில்ல இன்னு சொல்ட்டு வேற புது Hard 
டிஸ்க்கு வாங்கியாந்து மாட்டி , மாரியாத்தாவ மரியாதையா வேண்டிக் 
கீனு !! ஆன் பன்னேன்பா !! எனுக்கு ஒரே அழுவையா வந்துடுது அட 
நல்லா வேல செய்யுது !! அதுல வந்த ஆனந்த கண்ணீர் தாம்பா , 


செரி இதுக்கு போய் இன்னா இம்மாம் பெரி டீடைலு இன்னு கேக்கறீயா ? 
அப்ப தானே நானு பதிவு போடாமா கீரத்துக்கு உனுக்கு காரணம் பிரியும் 
அதாம்பா !! இம்மாம் பெரி கதை , 


வன்ட்டேன் , வன்ட்டேன் இனி மேட்டு பதிவு போட்டு உங்கள எல்லாம் 
ஒரு வயி பண்றேன் இன்னு சொல்லி என் கதைய முட்சிக்கறேன் , 
வாய்க அந்த Hard டிஸ்க்கு , வளர்க அந்த கம்பனி . 

நம்ப பேட்டைக்கி வந்து , நம்பள, கண்டுகுனதுக்கு ரொம்ப டாங்க்ஸ், வாஜாரே !! அடிக்கடி வந்துட்டுப் போங்க தலீவா !!

இப்ப நேரம் / தேதி

அவாடு குத்தாங்கோ

Photobucket Photobucket

50 -வது பதிவிற்காக, சகோதரி ஜலீலா கொடுத்த விருது

Photobucket

BEST TECHNICAL AWARD

Photobucket Photobucket

இங்கல்லாம் கீறேன்.

அடிக்காதீங்க !! !! !!!

 

IcyBlue | Copyright © 2009 - Blogger Template Designed By Simrandeep Singh