பாண்டி அகராதி

இன்னாபா = என்ன , வன்கம் = வணக்கம் , டாங்குசுபா = நன்றி , இனி மேட்டு = இனிமேல் , மெர்சலாவாதே = பயப்படாதே , டகால்ட்டி = ஏமாற்றுதல் , கலீஜா = அசிங்கமாக , சொம்மா = சும்மா , பிரீலே = புரியவில்லை , டாமாகோலீ = பெரியதாக , கீறியே = இருக்கின்றாய் , மன்சாலு = மனிதர்கள் , அக்காங் =ஆமாம் , பேஜாரா பூட்சி = கஷ்டமாக இருக்கிறது , அந்தே மேரி = அது மாதிரி , கொரலுகுட்தேன் = குரல் கொடுத்தேன் , சோக்கு = அழகாக , பெல்லக்கா பையன் = சின்னப் பையன் , தோஸ்துக்கோ = தோழர்கள் , மட்ச்சீ வந்தே = மதித்து வந்தாய் , கீது = இருக்கிறது , பாந்த்ரா பாந்த்ராவ = பெரிது பெரிதாக , குன்சா = அதிர்ஷ்டவசமாக , ரோசகாரமன்சன் = தன்மானமுள்ள மனிதன் , டிமிக்கி குட்தாம்பா = ஏமாற்றிவிட்டான் , கொட்டா = தியேட்டர் , பகுரா = பகட்டாக , சல்பேட்டா = சரக்கு , அப்பால = பிறகு , ஓர = சாராயம் , பிகிலு = சரியாக , உஸ்தாது = மிடுக்காக, டுபாகூரு = பொய் ,டாணாகார் - போலீஸ்கார் , உதாரு உட்டேன் - பயம் காட்டினேன் , சோக்கு குஜிலி - அழகான பெண் , ஜவ்வு - அறுவை , சோக் மாலு - நிறைய பணம் , பிஸ்தா - ரவுடி , அபீட்டு - வந்து விட்டேன் ,

தேவையான இடத்தை மட்டும் screen shot எடுப்பது எப்படி ?

· 28 கருத்துகள்



நம்ப தோஸ்துங்க , அல்லாருக்கும் இந்த டவுசர் பாண்டியோட

வணக்கம் பா !!

போன பதிவு , யப்பா !! இந்த கம்பனி ஆளுங்க பண்ண கலாட்டா கீதே !!
அதுவே ஒரு பதிவு போடலாம் போல கீது , அது மேரி ஒரு கலாட்டா
பண்ணிட்டாங்கோ !! செரி, நம்ப மேட்டருக்கு வரலாம் ,

இப்போ !! நம்பல மேரி பெரி " ? " ( சும்மா சொல்லிக்கலாம் ) பதிவருங்க ,
எதுனா நம்பளுக்கு பிரியரா மேரி !! சொல்றத்துக்கு இந்த screen shot
பண்ணி அந்த போட்டோவ காமிச்சி சொல்வாங்கோ !!

இதுக்கு , நம்ப key board ல இருக்குற print screen பட்டன அமிக்கி அத்த
எட்துக்குனு போய், பெயிண்ட் மூலம் தான் காப்பி பண்ண முடியும் ,

அதுவும் நம்ப ஸ்க்ரீன்ல இருக்குற மொத்தம் தான் capture ஆவும் , அதுல
நமக்கு தேவையான எடத்த பெயிண்ட் மூலம் தான் கட் பண்ணி காப்பி
பண்ணி save பண்ணுவோம் !! இது எவ்வளவு சுத்து வேல ஆனா !!

இந்த சின்ன சாப்ட்வேர் நம்ப இன்ஸ்டால் பண்ணிட்டா !! நமக்கு
தேவையான எடத்த மட்டும் நாம கரீக்ட்டா !! capture பண்ணலாம் !!
இப்போ அது எப்பிடி இன்னு பாக்கலாம் ,

மொதல்ல , இங்கு போய் இந்த சாப்ட்வேர் டவுன்லோட்
பண்ணிக்கோங்க !! 620 Kb அளவு தான் , (free software)

இத இன்ஸ்டால் பண்ணிட்டா நம்ப டெஸ்க் டாப்புல ஒரு ஐகான் வரும்
அத ஓபன் பண்ணாக்கா !! கீழே இருக்குற மேரி வரும் ,


இதுல , Browse இன்னு இருக்குறதுல போய் நாம எங்க save பண்ணனுமோ
அந்த எடத்த குடுங்க !! அப்பால ,

அந்த போட்டோவுக்கு பேர் வெக்க capture இன்னு இருக்குறதுல பேர்
குடுங்க , அடுத்து நாம இந்த screen ல இருக்குற ஒரு குறிப்பிட்ட எடத்த
மட்டும் capture பண்ண ,

கீழே இருக்குற மாதிரி selection இன்னு இருக்குற எடத்த டிக் பண்ணிடுங்க ,




பண்ணிட்டு capture இன்னு இருக்குறத ஒரு தடவை அமிக்கி விடுங்க ,
பிறகு ,

இத minimize பண்ணிட்டு எந்த பக்கம் நாம screen shot
எடுக்கணுமோ அத ஓபன் பண்ணிக்கோங்க !

அதுல எந்த எடம் வேணுமோ அத மட்டும் mouse மூலம் left click பண்ணி
அப்பிடியே அது முடியுற மட்டும் இழுத்து முடிச்சிடுங்க ,

நீங்க mouse சை விட்ட வுடன் நீங்க capture பண்ண வேண்டிய இடம் நீங்க
save பண்ண இடத்தில் வந்து விட்டு இருக்கும் ,

பல முறை செய்து பார்த்தால் சரியாக வரும் , முயற்சி செய்து பாருங்கள் ,
நாம paint மூலம் செய்ததை விட மிக சுலபமாக இருக்கும் ,

பதிவை முயற்சி செய்து விட்டு உங்கள் கருத்தை மறக்காமல்
சொல்லவும் , டான்க்ஸ் ,


கணினிக்கு தேவையான , 627 - தமிழ் fonts.

· 60 கருத்துகள்


USB disk Ejector - பதிவிற்கு மிக அதிக அளவில் ஆதரவு கொடுத்த

அனைத்து தோஸ்துக்கும், ரொம்பவே தாங்க்ஸ்,

அப்பால , என்னோட தமிழு செரியா பிரியல இன்னு ரொம்ப
அன்போடவும் , கண்டிப்போடவும் சொன்ன அத்தினி அன்பு
நண்பர்களுக்கும் , ரொம்பவே நன்றி ,

கூடிய சீக்கிரமே நல்ல படி பேசற தமில் கத்துக்கறேன் ,

கொஞ்சம் டைம் குடுங்கோ !! இப்பவே கொஞ்சம் கொஞ்சம் செரியா
தான் வர்துன்னு ,( நான் ) நெனைக்கிறேன் ,

செரி , இப்போ !! மேட்டர்க்கு போலாம் !! இது பெரி மேட்டர் இல்ல ,
ஆனா , இது இல்லாம சில சமயம் ரொம்பவே கஷ்டப்படுவோம்,

நம்ப கிட்ட இல்லாத தமிழ் font பொட்டி பொட்டி யா தான், தெரியும் ,
நண்பர் ஒர்த்தர் 500 தமிழ் font , வெளியிட்டு இருந்தார் அவருக்கு

" நன்றி "

அது மட்டும் இல்லாத 500 + 127 fonts சேத்து குடுத்து கீரேன்,

( சீ , பாஷே உன்னும் மாறலே ) கோச்சிக்காதே தலீவா !!

இது மொத்தம் 25.8 mb இதுக்கும் , extract பண்ணி உஸ் பண்ணுங்கோ !!

font add பண்ணத் தெரியாதவங்கோ !! மட்டும் இத படிங்க

start >control panel > fonts .போய் இங்க extract பண்ணத paste , பண்ணிடுங்க ,

(அல்லது )

My computer > c drive >WINDOWS >fonts . - ஓபன் பண்ணி paste ,
பண்ணிடுங்க , அவ்ளோ தான் ,

இங்க சென்று 627 fonts டவுன் லோட் பண்ணிக் கோங்க !!




நம்ப பேட்டைக்கி வந்து , நம்பள, கண்டுகுனதுக்கு ரொம்ப டாங்க்ஸ், வாஜாரே !! அடிக்கடி வந்துட்டுப் போங்க தலீவா !!

இப்ப நேரம் / தேதி

அவாடு குத்தாங்கோ

Photobucket Photobucket

50 -வது பதிவிற்காக, சகோதரி ஜலீலா கொடுத்த விருது

Photobucket

BEST TECHNICAL AWARD

Photobucket Photobucket

இங்கல்லாம் கீறேன்.

அடிக்காதீங்க !! !! !!!

 

IcyBlue | Copyright © 2009 - Blogger Template Designed By Simrandeep Singh