எப்பிடி வர வெக்கறது ? இன்னு பாக்கலாம் ,
இப்போ , நம்ப தோஸ்துங்கோ, பிளாக்கு அட்ரெஸ்ஸு அல்லாம்
கீது, அத்த , நம்பளும் நம்ப விட்ஜெட்டுல , போட்டு அத்த கிளிக்
பண்ணா , அங்க போர மேரி பண்ணி வெச்சிருப்போம் ,
அதுக்கு, நெரியோ பேர் நெரியோ ஐடியா !! பண்ணி ரெடி பண்ணி
இருப்பாங்கோ, சில பேருக்கு , மனசுல எடம் இருக்கும் , விட்ஜெட்டுல
எடம் இருக்காது , கரீக்ட்டா !!
அவங்கோ அல்லாம் இத்த ரவ ட்ரை பண்ணி பாத்துட்டு
போட்டுக்கலாம், செரி, இப்போ மேட்டருக்கு வரேன் ,
இத ரெடி பன்றதுக்கு, ஏதும் கோடிங்கு, அல்லாம் கெடியாது, இந்த
எடத்துல , ஓபன் பண்ணிட்டு , சொம்மா பேரு, அட்ரெஸ்ஸு
குடுத்தா, அதுவே ரெடி பண்ணி குட்துடும், மொத்தல்ல,
இந்த அட்ரெஸ்ஸ ஓபன் பண்ணிக்குங்கோ,

இந்த படத்துல கீற மேரி, Step 1 , இல போய் எத்தினி பேர் இன்னு
குடுங்கோ,

அப்பால, Step 2: - இல போய் , பேரு , அவுங்கோ அட்ரெஸ்ஸு, குத்துட்டு ,
அதுன் கீயே , Go to last step இன்னு கீர்த, அமுக்குனா ,
ஒரு கோடிங்க்கு வரும் ,
அத்த எட்துக்குனு போய் , வயக்கமா , குடுக்குற மேரி ,
Dashboard > Layout > Add a Gadjet > HTML/JavaScript , சேத்துட்டா,
முன்ஜிது கத, இப்போ !! கம்போ லிங்க்கு வந்துடும் , புட்சிக்கீதா ?


