இன்றது ஒரு பிரச்சனைன்னா, அதுக்கோசரம் நம்ப ஆளுங்க பண்ற கூத்து கீதே !!! யப்பா !! ஒரே கேரா ஆய் பூட்ச்சிபா !!!! ஆளாளுக்கு ஒரு சந்தேகம் கெளப்பி உடுராங்கோ பா !!
செரி, அல்லாருக்கும் சந்தேகப்படறத்துக்கு, உரிமை கீது நைனா !!
அப்பிடியே எனுக்கும் அந்தே மேரி ஒரு சந்தேகம் பா.
இந்தே விடுதலை புலிங்க, சண்டைல எப்போ இருந்து வீக்கு ஆனாங்கோ இன்னா, அவுங்க கூடவே இருந்த, இந்த கருணா திடீர்னு கோசிக்கினு ( அது இன்னா விசையமோ) போன பின்னாடி தான் இன்னு நா நெனைக்கிறேன் பா, அதுக்கோசரம் அவுரு மட்டு தான் காரணமின்னு நா சொல்லலைபா!! அதுவு ஒரு காரணமா இருக்கும்,
அப்பால ஒரு மேட்டரு,
இது வெரிக்கும் அல்லா மன்சாளுங்களும், ஆளாளுக்கு ஒவ் ஒன்னு கூவிகினு கீரா மேரி, இன்னாத்துக்கு, இந்த நூசு குடுக்குற ஆளுங்கோ, நேரா போய், கண்டுகினு வரத்து தானே ?
அப்பால, இந்த கருணா இப்போ தமிழ் எம் பி தானே, அவுரு இன்னாதான் சொல்றாரு ? இன்னாத்துக்கு எதுமே சொல்லாம கீராரு ?
நம்ப நெடு மாறன் அண்ணாத்தே இன்னாடான்னா, பிராபாகரன் உயிரோட தான் கீறாரு, அவுருக்கு ஒன்னிமே இல்ல, இன்னு சொல்றாரு,
செரி அப்பிடியே எட்துக்கினா கூட, அவுரு எங்க கீராரு, இன்னா தான் மேட்டரு, ஆவுது ?
ஒன்னிமே பிரிலபா, ஒரே கேரா கீது, உடனே, சில உன்மே விளம்பிங்கோ கிராங்கோ, அவுங்கோ சொல்றாங்கோ,
இத்த வெச்சி செல பேரு பதிவு போடரங்கோ ஐயோ ! இது நாயமா ? எப்படா எளவு விழும் இன்னு காத்துகினு கீறாங்கோ பா !! இன்னு கூவி, கூவி, அதுக்கோசரமே,
அத்த பதிவு போடாதீங்கோ இன்னு சொல்லி இவுங்கோ ஒரு பதிவு போடராங்கோ பாரு,
இன்னா ஒரு அறிவு நம்ப ஆளுங்களுக்கு சொல்லு நைனா ?
என்ன மேரி ஒன்னிமே தெரியாத, கை நாட்டு ஆளுங்கள எப்பிடி ஏமாத்துராங்கோ பாரு ? செரி, இதுக்கு மேல ,
எனுக்கு கீற சில டவுட்டு,
1 ) புலி தலைவரு உசுரோட கிராருன்னு, நெடுமாறன் சொல்றாரே, எப்பிடி அவ்ளோ இஸ்ராங்கா, சொல்றாரு?
2) இந்த விசையமா நம்ப கவுருமென்டு இன்னா தான் சொல்லுது ?
3) முதல் அமைச்சரு கவித எழதி கீறாரே அதுக்கு இன்னா அர்த்தம் ?
4) உலக நாடுங்க இத்த பத்தி இன்னா தான் சொல்லுது ?
5) உலக வல்லரசு நாடு, அதாங்க இந்த அமேரிக்கா ஒன்னிமே கொரலு கொடுக்கலியே ?
6) மின்னமே புலிங்க கூட இருந்த கருணா, இப்போ , எம் . பி யா, கீரர் அவுரு இன்னா சொல்றாரு ?
7) மெய்யாலுமே, புலி தலைவரு இறந்துட்டாருன்னா, அவுரு பாடி எங்க ?
இங்கே பார்க்கவும்.
இந்த வீடியோ காட்சி உண்மையா ? பொய்யா இன்னு எனுக்கு தெரிலப்பா.
எனுக்கு கீற சந்தேகம் உங்களுக்கும் தான் இருக்கும், இத்த பத்தி நீங்கோ இன்னா நினைக்கிரீன்களோ அத்த முடிஞ்சா உங்க கருத்து இன்ன்னானு சொல்லுங்கோ.