டான்சு ஆடற படம் ( gif ) - எப்பிடி பண்றது ?



அன்பான பதிவுலக தோஸ்துங்களே !! அல்லாருக்கும் வணக்கம் ,





இப்போ !! இந்த பதிவுல , நீங்க சில gif போட்டோக்கள ,பாத்து 
இருப்பீங்கோ !! அதாவது , ஓடரா மேரி , நடக்கறா மேரி , உன்னும்
நெரியோ, அதல்லாம் இப்ப இப்ப ரொம்ப சிம்பிளா எப்பிடி பண்றது ,
இன்னு பாக்கலாம் !! 

மொத்தல்ல , இங்க போய், இந்த சாப்டு வேர டவுன் லோடு 
பண்ணிக்கோங்க !! தல , (சின்னது தான் , 20 kb அளவு )

அப்பால , அத extract , பண்ணி ரன் பண்ணிட்டா , போதும் , செரி ,
இப்போ !! பெயிண்ட் ஓபன் பண்ணிக்கோங்க !! அதுல ஒரு சின்ன 
கோடு , போட்டு ,save as ல , கிளிக் பண்ணி , டெஸ்க் டாப் ல save 
பண்ணுங்க ,gif பைலா தான் save பண்ணனும் ,

இப்போ , மறுபடி பெயிண்ட் போய் உன்னொரு கோடு வேர கலர்ல 
போட்டு அதே மேரி save ,பண்ணுங்க .

நானு இந்த மேரி போட்டு கீரேன் பா !! ரெண்டு படமும் பாருங்க ,






 இப்போ !! இது ரெண்டும் சேந்து இன்னா , மேரி ஆட்டம் போடுது 
பாருங்க , தலீவா !! 

Photobucket

அப்பால , இந்த software ஓபன் பண்ணா , உங்களுக்கு இது மேரி 
வரும் 

,

இதுல , இருக்குற காலி எடத்துல நீங்க save பண்ண gif போட்டவ ,
ஈத்து உடுங்க , அதாம்பா ட்ராக் பண்ணி உடுங்க , உன்னோன்னையும் 
அதே மேரி பண்ணுங்க , 

இப்போ !! Make animated gif இன்னு கீரத ஒரே அமுக்கு அமிக்கி 
எங்க save பண்ணணுமோ !! அத குடுத்து save பண்ணிடுங்க ,
வேல முடிஞ்சிது ,

நல்லா டிராயிங் வரையத் தெரிஞ்சவங்களுக்கு , கூடவே கற்பனை 
அதிகமா கீரவங்களுக்கு , ( நம்பளுக்கு இல்லப்பா !! ) 
பொம்ம போட்டு , இது மேரி ஈசியா நெரியோ பண்ணலாம் பா !! 


அய்யே !! பட்சிட்டு அப்பிடியே போனா !! இன்னா அர்த்தம் ,
ரவ ஒட்டு போட்டுட்டு போங்க தல , கருத்தும் போட்டா 
நானு இன்னா வானாம்னா சொல்லப் போறேன் !!  
Photobucket

41 கருத்துகள்:

  1. ஜோராகீதுப்பா இந்த வெளாட்டு, ஓட்ட போட்டதுக்கு அப்பால நானும் இத்த ட்ரை பண்ணப்போறேன்,
    டான்க்சு தலிவா, வர்ர்ட்டா :))

    பதிலளிநீக்கு
  2. இன்னா மாரி, படா,படா பதிவெல்லாம் சோக்கா போடுற நைனா...
    கம்பூட்டர் பயலுவ எல்லாம் பீட்டரு உட்டுகினு இருக்கப்ப நீ படா சோக்கா மெட்ராசு பேசுற நைனா....

    பதிலளிநீக்கு
  3. மேட்டரு ஜூப்பராக்கீது

    கொஞ்சூண்டு திறமையும் வேணும் போலிருக்கே

    அது எங்கனா தரவிறக்க இயலுமா

    பதிலளிநீக்கு
  4. //ஜோராகீதுப்பா இந்த வெளாட்டு,//-சைவகொத்துப்பரோட்டா கூறியது.

    இது வெள்ளாட்டுக்கு ,மட்டும் இல்ல தலீவா !! ரோசன பண்ணி செஞ்சாக்கா, ஓடாரா மேரி எல்லாம் கூட பண்ணலாம் கர்த்துக்கு டாங்க்ஸ்பா !!

    பதிலளிநீக்கு
  5. இந்த வெளாட்டு ஷோக்காகீதுப்பா...

    பதிலளிநீக்கு
  6. //இன்னா மாரி, படா,படா பதிவெல்லாம் சோக்கா போடுற நைனா..//-தம்பி.... கூறியது.

    ஹி , ஹி அதல்லாம் ஒன்னியும் இல்ல தலீவா , ஏதோ, ரவ நோண்டி ,கீண்டி, பாத்துட்டு சொல்றேன் தல !! மொத தபா !! நம்ப ஏரியாவுக்கு வந்து கண்டுக்கீனதுக்கு டாங்க்ஸ் வாஜாரே !!

    பதிலளிநீக்கு
  7. //சோக்காகீதுபா..//- நாஞ்சில் பிரதாப் கூறியது.


    இன்னா தல !! சோக்கீமா, கீரியா ? என்ட்ரி குட்ததுக்கு டாங்க்ஸ் பா !!

    பதிலளிநீக்கு
  8. இன்னா ஆட்டம் ஆடுதுபா.இந்த எறும்பு.

    பதிலளிநீக்கு
  9. //கொஞ்சூண்டு திறமையும் வேணும் போலிருக்கே//-நட்புடன் ஜமால் கூறியது,



    என்னைப் பாத்ததுக்கு அப்பாலியுமா , இந்த டவுட்டு , கர்த்துக்கு டாங்க்ஸ்
    தல !!

    பதிலளிநீக்கு
  10. //இந்த வெளாட்டு ஷோக்காகீதுப்பா.//-Mrs.Menagasathia கூறியது.

    நம்ப கிட்ட கீர, எதுனா போட்டோ கூட பெயிண்ட்ல போய், GIF ஆ மாத்தி இது மேரி செய்யலாம் !! கர்த்துக்கு டாங்க்ஸ் சகோதரி !!

    பதிலளிநீக்கு
  11. //இன்னா ஆட்டம் ஆடுதுபா.இந்த எறும்பு//-ஜெய்லானி கூறியது.

    நானு இன்னாவோ பொம்ம வரையறதா நென்சிடம்பா !! அது எறும்பு மேரியா கீது ? செரி ஏதோ ஒன்னு நடந்தா
    செரி !! உங்க என்ரிக்கு டாங்க்ஸ் வாஜாரே !!

    பதிலளிநீக்கு
  12. //ஆஜர் கொடுக்றேன் தோஸ்த்து//-Dr.P.Kandaswamy கூறியது.

    அட பெரிய வாஜார் , வாங்க தல !! உங்க கர்த்துக்கு டாங்க்ஸ்
    அண்ணாத்தே !!

    பதிலளிநீக்கு
  13. //wow wow super super//-padma கூறியது.

    சவுண்டு குட்துக்கீனே , என்ட்ரி ஆனதுக்கு டாங்க்ஸ் தங்கச்சி !!

    பதிலளிநீக்கு
  14. தலீவா இன்னாமெறி மேட்ர சொல்லிட்ட! ரொம்ப தேங்க்ஸ் பா

    பதிலளிநீக்கு
  15. //தலீவா இன்னாமெறி மேட்ர சொல்லிட்ட! ரொம்ப தேங்க்ஸ் பா//-சசிகுமார் கூறியது.

    வாங்க சசி தலீவா !! உங்க கர்த்துக்கு ரொம்பவே டாங்க்ஸ் தல !!

    பதிலளிநீக்கு
  16. //super..//-அண்ணாமலையான் கூறியது.

    ரொம்பவே டாங்க்ஸ் தலீவா !!

    பதிலளிநீக்கு
  17. ஜோரா ஆட்டம் போடுது. தேங்க்ஸ் பா.

    பதிலளிநீக்கு
  18. //ஜோரா ஆட்டம் போடுது. தேங்க்ஸ் பா.//-Chitra கூறியது.

    கொஞ்சம் முயற்சி பண்ணாக்கா !! நாம வரஞ்சத ஓட உடலாம் !! உங்க வருகைக்கி டாங்க்ஸ் சகோதரி !!

    பதிலளிநீக்கு
  19. தல சூப்பர் தல....... உங்களோட இந்த தமிழ் படிக்குரதுக்க்காகவே உங்க ப்ளாக் வருவேன்........
    நீங்க பேசுற தமிழ் எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு.........

    அபி.

    பதிலளிநீக்கு
  20. நம்ப ஆளுங்களையே டான்ஸ்ஆட உடலாமா? வாழ்க வளமுடன். வேலன்.

    பதிலளிநீக்கு
  21. என்னாமா எறும்பு டான்சு ஆடுது... நல்லா இருக்கு டான்சு ஆடுவது..

    பதிலளிநீக்கு
  22. //நன்றி தலிவா?//-ManA கூறியது.

    இன்னாத் தலீவா !! இதுக்கு போய் நன்றி எல்லாம் சொல்லிக்கீனு !! நீங்க நம்ப ஏரியாவுக்கு வந்து கண்டுகுனதுக்கு நான் தான் ,தல டாங்க்ஸ் குடுக்கறேன் .

    பதிலளிநீக்கு
  23. //சுப்பராக்கீது வாத்யாரே//-விஜய் கூறியது.

    வா , தல !! உங்க கர்துக்கு டாங்க்ஸ் வாஜாரே !!

    பதிலளிநீக்கு
  24. //தல சூப்பர் தல....... உங்களோட இந்த தமிழ் படிக்குரதுக்க்காகவே உங்க ப்ளாக் வருவேன்.//-அபி.

    ரொம்ப டாங்க்ஸ் , பா !! இங்க கர்த்து குடுக்குற தோஸ்துங்க கூட ,
    சொம்மா !! நம்ப லேன்குவேஜில பூந்து வெல்லாடுராங்கோ, பாருங்க

    அதுவே எனுக்கு சொம்மா ஓர உட்டா மேரி !! அம்மாம் சந்தோசமா கீது , உங்க கர்த்துக்கு டாங்க்ஸ் தல !!

    பதிலளிநீக்கு
  25. //நம்ப ஆளுங்களையே டான்ஸ்ஆட உடலாமா?//-வேலன். கூறியது.

    நம்ப கம்பீட்டருக்கு ரெண்டு பாக்கட்டு ஓர வாங்கி ஊத்திட்டா இந்த சாப்ட் வேர் இல்லாமயே ஆடும்பா !! என்ட்ரி குட்ததுக்கு டாங்க்ஸ் வாஜாரே !!

    பதிலளிநீக்கு
  26. //என்னாமா எறும்பு டான்சு ஆடுது..//-சிநேகிதி கூறியது.

    மொத தபா !! நம்ப ஏரியாவுக்கு என்ட்ரி குட்ததுக்கு ரொம்பவே டாங்க்ஸ் சினேகிதி .

    இது எறும்பு மேரியா கீது ? நானு மன்சன் போட்டா இன்னு வரைஞ்சா , எறும்பு மேரி வந்துக் கீதே ? செரி இன்னாவோ ஒன்னு வந்தா செரி !!

    பதிலளிநீக்கு
  27. இன்று உலகமெங்கும் MULTIMEDIA & ANIMATION மிக பிரபலமாக உள்ளது. அதனுடைய அடிப்படையை அழகாக சொல்லி இருக்கிறீர்கள். ஆனாலும் பெயிண்ட்ல ஒரு கோடூ போடுறதே நமக்கு வராது தல. அதுதான் கொஞ்சம் யோசனையா இருக்கு.
    அருமையான பதிவு.

    பதிலளிநீக்கு
  28. நான் தங்கள் பதிவுகளை தொடற்சியாக படித்து வருகின்றென்.
    ஆரம்பத்தில் தங்கள் தமிழ் காரணமாக இருதடவை படித்தால்
    தான் புரியும் தற்போது பளகிவிட்டது.

    பதிவகள் அனைத்தும் நன்றாக உள்ளது.

    பதிலளிநீக்கு
  29. //பெயிண்ட்ல ஒரு கோடூ போடுறதே நமக்கு வராது தல. அதுதான் கொஞ்சம் யோசனையா இருக்கு.//-Sudhakaran கூறியது.

    வருமா !! வராதா !! இன்னு போட்டு பாத்தா தானே தல தெரியும் ? முயற்சி பண்ணா முடியாதது எதுனா கீதா ? சொம்மா !! ஊடு கட்டி அடிங்க
    தல !!! வருகைக்கி + கர்த்துக்கு ரொம்பவே டாங்க்ஸ் வாஜாரே !!

    பதிலளிநீக்கு
  30. //இருதடவை படித்தால்
    தான் புரியும் தற்போது பளகிவிட்டது.//-ghjghj கூறியது.

    அதாம்பா !! அதே தான் , அக்காங் !! பயகப் பயக , அல்லாமே இஜியா பூடும் தல !! கர்த்துக்கு டாங்க்ஸ் பா !!

    பதிலளிநீக்கு
  31. பாண்டி படம் சேக்கா கீது பா

    நமக்கு மப்புல தான் இது மரி தெரியும் - ஆன
    இப்ப பாரு இது வெப்புல தெரியுது.

    பதிலளிநீக்கு
  32. //நமக்கு மப்புல தான் இது மரி தெரியும்// -புதுவை சிவா,

    நம்ப மப்புல இருக்கும் போது இந்த பொம்ம பத்தியா , நினைக்கப்
    போறோம் !! இன்னா தல !! அதுக்கெல்லாம் வேற கீதுபா !! மப்ப நாபகப் பட்ததுனதுக்கு டாங்க்ஸ் தல !!

    பதிலளிநீக்கு
  33. ஹை.. என்னோட எறும்பும் டான்ஸ் ஆடுதுபா...

    நெம்ப டான்க்சு....

    பதிலளிநீக்கு
  34. நன்றி தல நானும் முயற்சிப் பண்ணிபார்க்கிறேன்.

    பதிலளிநீக்கு
  35. ஜோராக்கீதுப்பா..
    இத்தே மாரி எழ்தூ அண்ணாத்தே..

    பதிலளிநீக்கு
  36. உங்கள் பதிவுக்கு மிக்க நன்றி சகோதரரே.....

    My Favourite Website :- http://www.puthiyaulakam.com

    பதிலளிநீக்கு

.
.
எதாவது புரீரா மேரி எழ்து தலீவா !! .