நம்ப பிளாக்குல தனி பேஜ் போடுவது எப்படி?

அல்லா தோஸ்த்துக்கும் , டவசர் பாண்டியோட, வணக்கம் பா !!

நம்ப பிளாக்குல , நம்பளப் பத்தி , இன்னு கீர எடத்துல (profile )
ஒரு சில , விவரம் மட்டும் தான் குடுக்க முடியும் , இப்போ !! 
அதுக்காக ஒரு பேஜ் போட்டாக்கா , அது அடுத்த பேஜ் ,
போது பின்னாடி போயிடும் , செரி அத மட்டும் url எட்த்து ,
சைட்டுல போட்டாக்கா !! அதுல கருத்து அப்பால உன்னும்
சில மேடருங்கோ இருக்கும் , அதுக்கு ,

நாம தனியா சில பேஜ் போட்டு சில மிக்கியமான விசியம் ,
எல்லாம் சொல்லலாம் , அது எப்பிடி இன்னு பாக்கலாம் ,

மொதல்ல , டாஸ்போர்ட் , போங்க அப்புறம் இடுகைகளை 
திருத்து , போயிட்டு ஓபன் பண்ணுங்க , இது போல வரும் ,
                                                       (படத்தை பெரித்தாக்க கிளிக் பண்ணவும் )  



இதுல பக்கத்தை உருவாக்கு , இன்னு இருக்குறத கிளிக் 
பண்ணினாக்கா !! இது போல ஓபன் ஆகும் ,



அதுல பக்கத்தலைப்பு இன்னு இருக்குறதுல தலைப்பு குடுங்க ,
குத்துட்டு , இடுகைகை வெளியிடு குடுங்க ,

இன்னும் ஒரு பக்கம் ஒனும்னா !! மறு படி அதே மேரி போய்
புதிய பக்கம் போங்க !!   இதே மேரி பத்து பக்கம் கூட 
போடலாம் தலீவா !! 





இது உன்னும் சில எடத்துல யூசு ஆவும் , அதாவது 
நம்ப url லியே இருந்து , எடுக்க வேண்டிய சில 
விசியம் கீது ,அதாவது தனி விண்டோ வர இது மேரி ஒன்னு 
அவசியம் தேவ தல ,  அதப் பத்தி அப்பறம் சொல்றேன் !! 


தேவையானவங்கோ !! யூசு பண்ணி பாருங்க தல !! 
உங்க கருத்த ரவ சொல்லுங்க !! 

36 கருத்துகள்:

  1. நெம்ப சுளுவாக்கீதுபா

    நன்றிபா

    செய்து பார்த்துட்டேன்...

    பதிலளிநீக்கு
  2. //எதாவது புரீரா மேரி எழ்து தலீவா !! //

    டாங்ஸ் வாஜாரே!!!

    பதிலளிநீக்கு
  3. உபயோகமான பகிர்வு நண்பரே, உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  4. இன்னா பா..... ஆட்டோ
    புச்சாகீதே வருமா??

    ஆமா எனக்கு வெளங்காம தான் கேட்டிகினுகீரன், நீ இன்னா நைனா எப்ப பாத்தாலும் இந்த பொட்டிய பத்தியே ப்லிம் காம்சிகினுகீர ? போரடிக்கல ?? (எனக்கு அடிச்சிபோச்சே)அட மெய்யாலுமேதா.ப்லாகுன்ன வெரைட்டி வேணும் கண்ணு! நீன்னா வேற ப்ளாக்குகள் போயிபாரு தல. இந்தா பாரு ....நீ மட்டும் வெரைட்டி எழுதலைன்னா கண்டி அப்பால நானே அந்த
    "புனே ஆட்டோ சர்வீஸ் " கதைய படத்தோட என் ப்ளாக்குல போட்டு உட்டுடுவேன் ஆக்காங்...

    அம்மா தாயே தங்கச்சி மேனகா சத்யா இப்டி எல்லாத்துக்கும் "சூப்பராகீது சூப்பராகீது " இன்னு கமெண்ட்ஸ் உட்டு உட்டு இந்த டவுசர "மொக்கையா ' ஆக்கனுமாங்க?????

    பதிலளிநீக்கு
  5. நட்புடன் ஜமால் கூறியது...

    //நெம்ப சுளுவாக்கீதுபா நன்றிபா
    செய்து பார்த்துட்டேன்...//

    இன்னா தல , நீங்க போய் நன்றி எல்லாம் சொல்லிக் கீனு !! இதுல உன்னொரு மேட்டரு கீது தல !! அத அப்பால சொல்றேன் . வருகைக்கி டாங்க்ஸ் . தல !!

    பதிலளிநீக்கு
  6. LK கூறியது...
    //சூப்பர் தலைவா ..//

    ரொம்ப டாங்க்ஸ் வாஜாரே !!

    பதிலளிநீக்கு
  7. Chitra கூறியது...
    //Thank you very much.//

    நீங்கலாம் இதுக்கு போய் டாங்க்ஸ் சொல்லலாமா !! உங்க வருகைக்கி + கர்த்துக்கு நா தான் டாங்க்ஸ் சொல்லணும் .

    பதிலளிநீக்கு
  8. சைவகொத்துப்பரோட்டா கூறியது...
    //ரைட்டு தல, டாங்க்ஸ் :))//

    ஜமால் வாஜாருக்கு சொன்னது தாம்பா ரிபீட்டு !!

    பதிலளிநீக்கு
  9. ஜெய்லானி கூறியது...
    //எதாவது புரீரா மேரி எழ்து
    தலீவா !! //

    ஹா, ஹா ஹா .... நா சொல்றது தான் பிரியல இன்னு கூவராங்கோ !! அட்லீச்ட்டு நீங்க சொல்றதாவது எனுக்கு பிரியத் தாவலியா அதாம்பா !!

    பதிலளிநீக்கு
  10. Mohan கூறியது...
    //நல்லாருக்கு தல!//

    வாங்க தல !! கர்த்துக்கு டாங்க்ஸ் .

    பதிலளிநீக்கு
  11. Mrs.Menagasathia கூறியது...
    //சூப்பர்ர்ர்!!//

    டாங்க்ஸ் சகோதரி !! உங்க கர்த்துக்கு அப்பால வருகைக்கி .

    பதிலளிநீக்கு
  12. S Maharajan கூறியது...
    //நாசமா கீது மே //

    அய்யே !! இது இன்னா சப்ப மேட்டரு !! இதுல உன்னும் நெரியோ டகாட்டி வேல அல்லாம் காட்டலாம் பா ! அக்காங் !!

    ஐயோ !! நம்ப மேரியே பேசுதுபா, நம்ப கொட்டாக்கு, வாயேன் ஒரு வாய் காப்பி தண்ணி குட்சிட்டு போவலாம் !!

    பதிலளிநீக்கு
  13. சசிகுமார் கூறியது...
    //உபயோகமான பகிர்வு நண்பரே, உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.//

    உங்க வாழ்த்துக்கு ரொம்பவே டாங்க்ஸ் தல !!

    பதிலளிநீக்கு
  14. கக்கு - மாணிக்கம் கூறியது...
    //இன்னா பா..... ஆட்டோ
    புச்சாகீதே வருமா??

    ஆமா எனக்கு வெளங்காம தான் கேட்டிகினுகீரன், நீ இன்னா நைனா எப்ப பாத்தாலும் இந்த பொட்டிய பத்தியே ப்லிம் காம்சிகினுகீர ? போரடிக்கல ?? (எனக்கு அடிச்சிபோச்சே)அட மெய்யாலுமேதா.ப்லாகுன்ன வெரைட்டி வேணும் கண்ணு! //

    வன்டியா !! இரு இரு , இத்தினி நாளு எங்க போய் , மாட்டிக் கீனே ? அல்லேக் குட்துட்டு டாமா வேல காட்றியா

    சுண்ட கஞ்சி குடிக்க வருவே இல்ல , அப்ப கவுன்சிக்கிறேன் , உனுக்கு போரடிக்குதா ? நம்புளுக்கும் வேற ரூட்டு தெரியும் கண்ணு !!

    இரு டகால்ட்டியா , ஒரு பதிவு போடறேன் , அப்ப தெரியும் டவுசரு யாருன்னு !!! அக்காங் !!

    பதிலளிநீக்கு
  15. புதுசா edit pagesனு இருக்கே எப்படி யூஸ் பண்ணனும் என்று தெரியாமல் இருந்தேன் உங்கள் பதிவு பார்த்து தெரிந்துக்கொண்டேன்.நன்றி..//தனி விண்டோ வர இது மேரி ஒன்னு அவசியம் தேவ தல , அதப் பத்தி அப்பறம் சொல்றேன் !! // அடுத்த பதிவை பார்க்க ஆவலாக உள்ளேன்.. மீண்டும் உங்கள் பயனுள்ள தகவலுக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  16. அன்புடன் நண்பருக்கு வணக்கம் உங்களின் இந்த பதிவு நல்ல உபயோகம் நன்றி

    பதிலளிநீக்கு
  17. சிநேகிதி கூறியது...
    //உங்கள் பதிவு பார்த்து தெரிந்துக்கொண்டேன்.நன்றி.//

    வாங்க தங்கச்சி ! ! உங்க கர்துக்கு , ரொம்பவே டாங்க்ஸ் . எங்க கக்கு இன்னும் நெரியோ பேரு !!

    இன்னா எப்பப் பாத்தாலும் பொட்டி பத்தியே போட்டுக் கீரே, இன்னு சவுண்டு குடுக்கர்தாலே ,

    அத்த தபா , ஒரு கவித அப்பால இது மேரி மேட்டரு .இன்னா கரீக்டா !!

    பதிலளிநீக்கு
  18. hamaragana கூறியது...
    //அன்புடன் நண்பருக்கு வணக்கம் உங்களின் இந்த பதிவு நல்ல உபயோகம் நன்றி//

    உங்களைப் போன்ற பெரியவர்களின் ஆசி கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி , இதில்

    என் பங்கு ஒன்றுமே இல்லை , எது எது எங்கு இருக்கிறது என சொல்லும், ஒரு சாதாரண வேலை மட்டுமே நான் செய்கிறேன் , உங்கள் வருகைக்கு மிக்க நன்றி .
    வாழ்க நலமுடன் .

    பதிலளிநீக்கு
  19. தலீவா...

    கலக்குரீங்க போங்க...

    வாழ்த்துக்கள்...

    மோகனகிருஷ்ணன்,
    புதுவை.காம்

    பதிலளிநீக்கு
  20. தல முன்னாடி முயற்சி பண்ணேன், நாம கொடுக்கற மெனுவுல லின்க் கொடுக்கறது எப்படித்தல,
    உதாரணமா விமர்சனம்னு பேஜ் தலைப்பு கொடுத்தா அதுக்குள்ள விமர்சன பதிவுகளோட லின்க் எப்படி கொடுக்கறது...? ரொம்ப யோசிச்சு தலைவெடிச்சுப்போச்சு

    பதிலளிநீக்கு
  21. நாஞ்சில் பிரதாப் கூறியது...
    //விமர்சனம்னு பேஜ் தலைப்பு கொடுத்தா அதுக்குள்ள விமர்சன பதிவுகளோட லின்க் எப்படி கொடுக்கறது...//



    மச்சி மெயில் , பாக்கவும் , அம்சிட்டேன் அம்சிட்டேன் ..

    பதிலளிநீக்கு
  22. மோகனகிருஷ்ணன் கூறியது...
    //தலீவா...
    கலக்குரீங்க போங்க...
    வாழ்த்துக்கள்..//

    வாங்க !! தல எப்பிடி கீரீங்கோ !! பாத்தே நாள் ஆச்சி , எதோ நம்ப வண்டியும் ஓடிக் கீனு கீது !! உங்க வருகைக்கி டாங்க்ஸ் தல !!

    பதிலளிநீக்கு
  23. யூர்கன் க்ருகியர் கூறியது...

    //கவிதைக்கு வெயிட்டிங்!//

    எங்க தான் போய்டுவே தல !! ஆளையே காணோம் !! உனுக்கு இல்லாத கவிதையா !! நாளைக்கே போடுறேன் பா !! போன பதிவுக்கு
    மின்னால ரெண்டு போட்டுக் கரேன் , அத பட்சிட்டீன்களா ? கருத்து சொலுங்க தல !! வருகைக்கி டாங்க்ஸ் தல !!

    பதிலளிநீக்கு
  24. ய்ப்பா கலீக்கிட்டப்பா.
    ஒன்னை மாரி ஒரு ஆளத்தாம்பா இம்மாங்காலம் நான் தேடிக்கிண்ணு இருந்தேன்
    கடவுள் எப்பிடி இட்டாந்து வுட்டுக்கினாரு பாத்தியா,
    ரொம்ப தேங்க்ஸ் பா
    . உங்க வூடு மட்டும் சென்னைலே
    இருந்திச்சின்னு வெச்சிக்கோ ஒன்னை வுடுவே மாட்டேன்.
    அது சரி அல்லாரும் டிஃப்ரண்ட் டிஃப்ரண்ட்டா போட்டொவெல்லாம்
    எங்கேந்தோ புட்சாந்து நம்ம பக்கத்திலே போடறாங்களே . அடுத்த தவா
    அத பத்தி கொஞ்சம் சொல்றியா ப்பா...... அட ஒன்னைத்தாம்பா
    சொல்றியா...
    என் பேரு இன்னாங்கிறியா?

    அதாம்பா

    இனியன் பாலாஜி

    பதிலளிநீக்கு
  25. //ய்ப்பா கலீக்கிட்டப்பா.
    ஒன்னை மாரி ஒரு ஆளத்தாம்பா இம்மாங்காலம் நான் தேடிக்கிண்ணு இருந்தேன்//-இனியன் பாலாஜி கூறியது.

    அண்ணாத்தே !! உங்க மொத வருகைக்கி டாங்க்ஸ் பா !! இது மேரி டிபரன்ட்டா போட்டோ தேடறது ஒன்னியு பெரிய வேல இல்ல , அண்ணாத்தே !!

    நம்ப கூகுள அண்ணாத்த கிட்ட அவுருக்கு பிரியரா மேரி சொன்னா , போதும் !! அது பத்தி உங்களுக்கு மெயில் உடறேன் பா !!டைம் கெடச்சா, என்து பழைய பதிவுகளை பட்சி பாருங்க தல !! மறுக்கா டாங்க்ஸ் !!

    பதிலளிநீக்கு
  26. LK கூறியது...
    //thala comment pottiku eppadi color thara nee//

    தல , என்னோட மெயிலுக்கு , வாங்க அம்சி உடறேன் , தலக்கி, இது கூட செய்ய மாட்டேனா !!

    xyzrajkumar@gmail.com

    பதிலளிநீக்கு
  27. உங்க பதிவு எல்லாம் ரொம்ப நல்லா இருக்கு. நான் படித்தேன். எனக்கு உபயோகமாக இருந்தது.

    நான் ஆழ்கடல் களஞ்சியம் பிளாக்கு ஆரம்பித்து 1 மாதம் ஆகிறது.


    ஆனால் பாலோயிங்கு ஏன் வரவில்லை தெரியலை. எனக்கு இன்னும் சோதனை முயற்ச்சி அப்படி தான் வருது. ஏன் நண்பரே.


    முன்பு பிளக்கில் இடுவது போல் தெளிவாக சொன்னால் நன்றாக இருக்கும்.

    என் தளம் http://azhkadalkalangiyam.blogspot.com/

    பதிலளிநீக்கு
  28. உங்க பதிவு எல்லாம் ரொம்ப நல்லா இருக்கு. நான் படித்தேன். எனக்கு உபயோகமாக இருந்தது.

    பதிலளிநீக்கு

.
.
எதாவது புரீரா மேரி எழ்து தலீவா !! .