என்னைக்கி, இன்னா வேல கீது ? இன்னு - மெயில் வர வைக்க .

ரொம்ப பீலிங்கா கீதுபா !! இன்னா மேட்டருன்னா, நம்ப 
தோஸ்த்து ஒர்த்தர்க்கு கல்யாணம் தலீவரே !! எனுக்கும்,  மட்ச்சீ  
நோட்டிசு அல்லாம் ,குட்தாறு , கண்டிப்பா வந்துடு டவுசரு இன்னு 
சொல்லிட்டு போனாரு , நோட்டிசு வாங்கி ( அதாம்பா பத்திரிக ) 
பட்சி ( ? ) பாத்தா , ஒரு மாசம் கைச்சி தேதி கீது !! செரி இண்ட்டு ,


நம்ப வேலைய பாத்துக்கீனு ( ஒன்னியும் இல்ல சொம்மா !! நானும் 

ரவுடி தான் கத !! ) இன்னாவோ !! நான்தான் பில்கேட்சுக்கு ஐடியா ?

குடுக்குறா மேரி !! இந்த பொட்டியவே நோண்டிக் கீனு , மெய்லு

பாத்துக் கீனு !! இர்ன்துட்டு தோஸ்து கல்யாணத்த கோட்ட,

உட்டுட்டேம்பா !! ஒரே பீலிங்கா பூட்சிபா !! இதுக்கு இன்னா 

பண்ணலாம் , இன்னு ரோசன பண்ணி நானும் பில்கேட்சு 

கணக்கா !! ரோசன பன்னேம்பா !! ( நம்ப மாட்டியே ? ) 

அப்ப, தான் இதுக்கு நம்ப கூகிள் அண்ணாத்தையே தேவலாம் ,

இன்னு பட்டுது தல , எப்பிடியும் மெயில் செக் பண்ணப் போறோம் !! 

பின்ன நாமள்லாம் யாரு ? 



அப்பிடியே !! கூகிள் அண்ணாத்த காதுல இது மேரி இது மேரி 

எனுக்கு , இன்னைக்கி கல்யாணத்துக்கு போவனும் , இன்னைக்கி 

குளிக்கணும் இன்னு என்ட்ரி போட்டு உட்டுட்டாக்கா !! அந்த 

மன்சன் கரீக்ட்டா நம்பளுக்கு மெயில் பண்ணி சொல்லிடுவாரு ,

தல , பாத்தியா அண்ணன் தம்பி கூட இது மேரி குளிடா , போடா !! 

இன்னு சொல்ல மாட்டாம்பா !! 










இது எப்பிடீன்னு பாரு தல !! ஏற்கனவே தெர்ந்ஜவங்கோ, 

தாண்டிப் பூடுங்கோ !! உங்க gmail ஓபன் பண்ணிட்டு , google .co .in 


ஹோம் பேஜ் போங்க தல !! அதுல more இன்னு இருக்குறதுல , போய் 
calendarஇன்னு கீரத , கிளிக் பண்ணுங்க அப்பால , ரைட்டு சைடுல 
இந்த மாசத்துக்கு காலண்டர் இருக்கும் , அதுல இன்னா தேதி ஒனுமோ 
அத கிளிக் பண்ணா !!  உங்களுக்கு ஒரு விண்டோ ஓபன் 
ஆவும் தல கிளிக் பண்ணி , மேட்டர சொல்ட்டு அப்பீட்டு உட்டுக்கோ !! 



நீ சொன்னா மேரி ,கரீக்டா !! மெயில் வந்து உனுக்கு நோட்டீசு  குட்துடும் பா !! 

அப்போ நீயும் உசாரா ஆயிக்கலாம் !! 



கவருமென்ட்டு லீவு என்னிக்கி இன்னு கூட தெரிஞ்சிக்கலாம் !! 

இதுக்கு month இன்றத கிளிக் பண்ணி பாருங்க லீவு , நாள்  தெரியும் !

இதுல உன்னும் நெரியோ மேட்டரு ,கீது !! தல , யூசு பண்ணி பாருங்க !!  

23 கருத்துகள்:

  1. //தகவலுக்கு நன்றி தலீவா//-malarvizhi கூறியது.

    உங்க வருகைக்கி டாங்க்ஸ் சகோதரி !!

    பதிலளிநீக்கு
  2. எனக்கும் ஒருமுறை அதுபோல ஆனது. தகவலுக்கு நன்றி பாஸ்.

    பதிலளிநீக்கு
  3. அதெப்டி தோஸ்த் ஈமேரி புச்சுபுச்சா உன்கு மேட்டரு சிக்குது.

    பதிலளிநீக்கு
  4. தலிவா, எப்புடி இந்த மேரி புச்சு புச்சா மேட்டர் புடிக்கிறீங்க, டாங்க்ஸ் .

    பதிலளிநீக்கு
  5. அப்படியே துட்டு எப்ப வோனுமோ அப்ப அனுப்பரதுக்கு எதுனா இருக்கா தோஸ்த்து ..:)

    சொம்மா ...சொன்னேன்,

    டாங்க்ஸ் மா.:)

    பதிலளிநீக்கு
  6. உன் காலண்டரில் 2010 பிப்ரவரி 15 திங்கட்கிழமை மத்தியானம் 2-3 குளிக்கனும் போட்டுக்கீது. ஞாபகமா மறந்திடப்போறே....போய் குளி....வரட்டா... வாழ்க வளமுடன் வேலன்.

    பதிலளிநீக்கு
  7. //அதெப்டி தோஸ்த் ஈமேரி புச்சுபுச்சா உன்கு மேட்டரு சிக்குது.//- Dr.P.Kandaswamy கூறியது.

    வாங்க !! அண்ணாத்தே !! நம்பளுக்கு தெரியாத விசியம் எவ்ளவோ கீது தல !! எதுனா ஒன்ன தேடும் போது, தான் இன்னொன்னு கெடைக்கும் !! உங்க வருகைக்கி டாங்க்ஸ் வாஜாரே !!

    பதிலளிநீக்கு
  8. //தலிவா, எப்புடி இந்த மேரி புச்சு புச்சா மேட்டர் புடிக்கிறீங்க,//-சைவகொத்துப்பரோட்டா,

    அண்ணாத்தைக்கி சொன்னது ரிபீட்டு !!

    பதிலளிநீக்கு
  9. //சொம்மா ...சொன்னேன்,//-ஷங்கர்.

    ஹா ஹா , இதுல இன்னா கீது தோஸ்து , கருத்துக்கு டாங்க்ஸ் பா !!

    பதிலளிநீக்கு
  10. //திங்கட்கிழமை மத்தியானம் 2-3 குளிக்கனும் மறந்திடப்போறே....போய் குளி.//-வேலன். கூறியது,

    இன்னாடா இது !! நானு ஒரு மெயில் தானே வரும் இன்னு பாத்தேன் , எனுக்கு மட்டும் கர்த்துக் கூட ஞாபகப் பட்த்தி உட்தே, நல்லா வேல
    செய்து பா !! google

    பதிலளிநீக்கு
  11. //எனக்கும் ஒருமுறை அதுபோல ஆனது. தகவலுக்கு நன்றி பாஸ்.//-ஜெய்லானி,


    வயக்கமா எல்லாருக்கும் நடக்கர்தது தான் தல !! இனிமேட்டு , நடக்காத பாத்துக்கலாம் , இன்னா ஒன்னு மெயில் படிக்க மறக்காத இர்க்கனும் பா !! அதான் மேட்டரு !! வர்கிக்கி டாங்க்ஸ் தல !

    பதிலளிநீக்கு
  12. எப்படிங்க? இந்தியாவில் இன்னும் "Google Calendar" popular ஆகலியா?

    பதிலளிநீக்கு
  13. I expect ur posting daily. So do it for us.
    http://sakthispeaks.blogspot.com

    பதிலளிநீக்கு
  14. //இந்தியாவில் இன்னும் "Google Calendar" popular ஆகலியா?//-Chitra கூறியது.

    சில பேருக்கு தெரியாம , இருக்கும் அத வெச்சி இந்தியால யாருக்கும் தெரில !! இன்னு முடிவு பண்ணிட முடியாது !! சகோதரி , உங்க வருகைக்கி டாங்க்ஸ்.

    பதிலளிநீக்கு
  15. //Neega pondy ya? I mean pondicherry alla?//-sakthi கூறியது.

    வாங்க தலீவா !! நானு பாண்டிச்சேரி இல்ல தல , பாண்டி from சேரி , உங்க வருகைக்கி டாங்க்ஸ் தல !!

    பதிலளிநீக்கு
  16. தல! கொஞ்சம் வேலையா வெளிய போனதால லேட்டாப் போச்சுப்பா! ஜோரான மேட்டரக் குட்ததுக்கு டான்க்சுப்பா!

    பதிலளிநீக்கு
  17. பரவாயில்ல தல !! லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வந்ததுக்கு டாங்க்ஸ் தல

    பதிலளிநீக்கு
  18. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  19. இதெல்லாம் ரொம்ப ஓவரா இல்லா டவுசர்?
    தேதிய மாத காலண்டரில் சுழித்து வைத்து விட்டால் தினம் தினம் பார்த்து பார்த்து குறிப்பிட்ட நாளில் தயாராகிவிடலாமே ? இப்படி தொட்டதெற்கெல்லாம் கம்ப்யூட்டர் ன்னு போய்கிட்டே இருந்தா ஊரு முழுக்க குட்டி குட்டியா தேர்களும் ஆட்டோ ரிச்ஷாகளும் தான் மோதிக்கொண்டு நிற்கும்.
    அடங்கவே மாட்டீங்களா புள்ளைகளா!!??

    பதிலளிநீக்கு
  20. தகவலுக்கு நன்றி அண்ணாத்தே!!

    பதிலளிநீக்கு
  21. லேட்டா வந்ததும் இல்லாம , என்ன வேற திட்டிக் கீனு கீரியா ? இரு கவுன்சிக்கறேன் !!

    பதிலளிநீக்கு

.
.
எதாவது புரீரா மேரி எழ்து தலீவா !! .