டாக்குமெண்ட் பைல்களை upload செய்து download செய்வது எப்படி ?

இந்த தபா, பெரி இஸ்கூலு படிக்கிற புள்ளைங்களுக்கு
அவுகோ பாட சம்பந்தமா எதுனா, டாக்குமென்ட்டு ,

கீது பாரு அத்த மெய்லு பண்ணி தான் ஷேர், பண்ணிக்குவாங்கோ ,
ஆனா இந்த மேரி கொஞ்சம் டாக்குமென்ட்டு தான் , அனுப்ப முடியும் ,

ஆனாக்கா !! இந்த Deposite file . com - இன்னு கீரதுல , நீங்க
வெறுமினே sign பண்ணி அப்பால,
உங்களுக்கு ஒரு அக்கவுன்ட்டு ஓபன் பண்ணிக் கோங்க,
அப்பால எந்த பைல upload பண்ணனுமோ அத்த upload
பண்ணிட்டா !

அதனோட url குடுக்கும் , அத sms பண்ணி பைல டவுன்லோட்
பண்ணிக்கலாம் ,

இதுல 2 GB அளவுக்கு பைல upload பண்ணலாம் , ஊஸ் பண்ணி பாருங்கோ !!

புட்சா அல்லாருக்கும் சொல்லுங்கோ !!


அப்பிடியே எனுக்கு கருத்து ரவ சொல்லுங்கோ !!

10 கருத்துகள்:

  1. கண்ணுங்களா, படிக்கிற புள்ளங்களா ரவ இத்த பாத்திட்டு யூசு பண்ணிகிங்கோ. அப்பால அம்மா அப்பா ங்கோ இத்த பத்தி அவங்கோ புள்ளங்களுக்கு சொல்லிவுடுங்கோ. நம்ம டவுசரு

    அண்ணாத்த எம்மா நல்ல நல்ல காரியம் அல்லா சொல்லிகினுகீராறு ! அவருக்கு ஒரு டாங்க்சு சொல்லிடுங்கோ.ஆக்காங் .

    அண்ணாத்த ஒட்டு குத்திகினே, வர்டா

    பதிலளிநீக்கு
  2. யப்பா !! சூடா கருத்து போட்டு என்னை புல்லரிக்க வெச்சிட்டியே தல !!

    உனுக்கு ரொம்பவே தாங்க்ஸ் தலீவா !!

    பதிலளிநீக்கு
  3. அட... புல்லு அரிககிதாமா?? அத்து ஒன்னும் இல்ல, ரெண்டு நாளக்கி குளிக்காக கொல்லாமா இருந்தா இப்டீதா புல்லு த்தா அரிக்கும் பாண்டி. Yardley சோப்பு போட்டு குளிசிகினு அப்பால ஒரு full u அடிச்சா சும்மா கம்முண்ணு ஆயிபூடும் அனுப்பி வெக்கட்டா??

    பதிலளிநீக்கு
  4. //சும்மா கம்முண்ணு ஆயிபூடும் அனுப்பி வெக்கட்டா??//- கக்கு,


    வாணாம் !! வாணாம் அப்பால எங்க ஏரியாவுல என்னை சேக்கவே மாட்டாங்கோ பா !

    பதிலளிநீக்கு
  5. நீ ஒரு ஜீனியஸ் டவுசர்!
    பின்னிறீங்களே! 2ஜிபி அளவுக்கு என் நன்றிகளும் வாழ்த்துகளும்!

    பதிலளிநீக்கு
  6. //நீ ஒரு ஜீனியஸ் டவுசர்!
    பின்னிறீங்களே! 2ஜிபி அளவுக்கு என் நன்றிகளும் வாழ்த்துகளும்!//-ஜெகநாதன் கூறியது.

    எனுக்கு ஒன்னிமே பிரியலயே !! நம்பல வெச்சி காமிடி கீமிடி பண்றாங்களா ? ஆனா ஜெகனு அண்ணாத்தே " ரொம்ப நல்லவரு "

    ( ஒரு சேப்டிக்கி எதுக்கும் சொல்லிடலாம் ) , வாஜார் உங்க கருத்துக்கு ரொம்பவே டாங்க்ஸ்பா ! !

    பதிலளிநீக்கு
  7. உங்களது வேலைகளையெல்லாம் முடித்த பிறகு,,, ஆறுதலாக நம்ம வலைப்பக்கமும் வந்து பார்த்து ஏதாவது சொல்லிட்டு போனால் தானே ... எங்களுக்கும் இன்னும் ஏதாவது கிறுக்க ஆசை வரும்.... வாங்க எந்த நேரமும் வரலாம்.... கதவுகள் திறந்தே இருக்கும் என்று சொல்ல மாட்டன் ஏனென்றால் , நமக்கு கதவே கிடையாது...!!!

    பதிலளிநீக்கு
  8. //உங்களது வேலைகளையெல்லாம் முடித்த பிறகு//-பிரபா கூறியது.

    வேலையாவது வெட்டியாவது அதல்லாம் ஒன்னிமே இல்லப்பா !!

    சொல்ட்டே இல்லே கண்டிப்பா அடிக்கடி வரேன் தலீவா !!

    பதிலளிநீக்கு
  9. வழக்கம் போல நல்ல பதிவு வாத்யாரே!

    பதிலளிநீக்கு
  10. //வழக்கம் போல நல்ல பதிவு வாத்யாரே!//-Mohan கூறியது,


    தாங்க்ஸ் வாஜாரே !!

    பதிலளிநீக்கு

.
.
எதாவது புரீரா மேரி எழ்து தலீவா !! .