டவுசருக்கு வந்த சோதன.




அல்சாமேரி குல்சா பார்டியா பூட்து பா, நம்ப நெலம, ஒரு நாளு காத்து
வாங்கறத்துக்கு பீச்சு பாக்கமா, டேரா போட்டம்பா, அப்போ நம்ப கிட்ட
வந்து ஒரு ஆளு,

இன்னாஒரே பீலிங்கா கீற மேரி கீது, இன்னா விஷியம் இன்னு கேட்டுகினான் ,

நா சொல்லிக்கினேன், தபாரு ராங் சைடுல வந்து டகால்டி காட்டாதே !!
நானே ஒரு மேரி கீறேன், போய்கீனே இரு இன்னு சொன்னேன்.

அதுக்கு, அந்த பிஸ்கோத்து பையன், எதுவா இருந்தாலும் சொல்லு டவுசரு,
சொம்மா கலாசிட்டு பூடுறேன். இன்னு சொன்னான்.

அது இல்லடா பேமானி, நேத்து நம்ப தோஸ்து ஒர்தர பாக்கறதுக்கு போய்
கினேன் , அவுரு இந்த கம்பீட்டரு போட்டி கீதே, அத்த வெச்சி கூட இன்னா
இன்னாவோ, பண்ணுவாங்களே , அந்த கம்பனிக்கு போனேன் .

அங்க இருந்த ஒரு குஜிலி நம்ப கிட்ட இன்னவோ இங்கிலீசுல டானா வேல
காடிட்சிபா, அது இன்னவோ , சொல்சீ , எனுக்கு ஒன்னிமே பிரியல ,
கட்சீல நம்ப தோஸ்து போட்டாவ காட்டி,

தே, இங்க பாரு மே , இந்த ஆளு நம்ப தோஸ்து இவர தான் நானு மீட்
பண்ணனும் அதுக்கு ஒரு ஏற்பாடு பண்ணு, இன்னு சொல்லி, ஒரே கட் அண்ட் ரைட்டா சொன்னம்பா !!

அப்பால தான் அந்த லூசு பொண்ணுக்கு, நம்ப சொன்னது பிரிஞ்சிது.

செரி , டவுசரு அதுக்கு போய் இன்னாத்துக்கு ஒரு பீலிங்கு காட்றே,
அதான் மேட்டரு முன்சீ போச்சே !!

போடா !! போடா !! சோமாறி , எதோ நானு கொஞ்சம் மூ கீஆளா இருக்க
சொல்லவே, இந்த ஒலகம் இப்பிடி கீதே ? உண்ணூம் ஒன்னிமே தெரியாத
ஆளா இருந்தா, பிஸ்கட்டு பண்ணிட்டு இருப்பாங்கோ பாரு,
இத நென்சி தான் நம்பளுக்கு ஒரே பீலிங்கு,

இல்ல நாம இன்னா வேற உலகத்திலையா கீறோம், நம்ப தமிழு நாட்டுல
தமில்லுல கேக்காத இன்னாவோ , வேற ஒரு மேரி கேட்டாக்கா !!

இன்னா பண்றது நீயே சொல்லு ??



வாஜாரே, நீ எப்பிடி நெனைக்கிறே ? என்ன மேரி ஆளு கிட்ட போய் இந்த மேரி உஸ்தாது காமிச்சா , எனுக்கு கோவம் வராத இன்னா வரும், சொல்லு

10 கருத்துகள்:

  1. சோக்காகீது சோதன வாஜ்ஜாரே :)

    பதிலளிநீக்கு
  2. என்ன மேரி ஆளுங்களுக்கு இந்த
    மேரி சோதன அடிக்கடி
    வர்து வாஜாரே, இன்னா தான்
    பண்றதோ ? தெர்ல

    பதிலளிநீக்கு
  3. மச்சி சோக்கா எலுதுறியே நீ..
    மயின்டுல வச்சிகிறேன்!

    அப்பாலிகா கண்டுகறேன்..
    இப்ப பாலோ பண்றேன்..

    பதிலளிநீக்கு
  4. //மச்சி சோக்கா எலுதுறியே நீ..
    மயின்டுல வச்சிகிறேன்!
    அப்பாலிகா கண்டுகறேன்..
    இப்ப பாலோ பண்றேன்..//

    - கலையரசன்.


    மொத தபா நம்ப ஊட்டாண்ட வந்ததுக்கு, ரொம்ப டான்குசு வாஜாரே,
    நம்ப பேட்டைல கூட அதான்
    சொல்லிகிறாங்கோ பா !!
    (அட,மெய்யாலுமே தாம்பா)

    பதிலளிநீக்கு
  5. அட இன்னா பாண்டி நீ இத்தகு போயி அல்டிகினு பீலிங்கு உட்டுகினு பீச்சாங்கரயாண்ட போயி குந்திகினு...... இன்னாபா நீ .... குஜிலீ பீட்று வுட்டா இன்னா ? நீ நாம லாங்குவேஜ்
    எட்த்து உட்டுகினா அந்த குஜிலி பொண்ணு ஒடிபூடும் நைனா.

    பதிலளிநீக்கு
  6. நீ இன்னாதா இந்த டவுசர கூல் பண்ணாலும்,ஒரு பிஸ்கோத்து குஜிலி நம்ப கிட்ட, அதும் கக்கு- மாணிக்கம், கூட்டாளிக் கிட்டியே ! !

    இது மேரி நடந்தா ? அப்பால நம்ப மருவாதி,( ? ) இன்னா ஆவறது சொல்லு நைனா ? அதாம்பா
    பீலிங்கு.

    பதிலளிநீக்கு
  7. ரொம்ப நன்னாகீது தோழரே தொடர்ந்து எழுது சர்யா வரட்டா

    நம்ம கடைப்பக்கம் வந்துட்டுப்போய் உங்க ஜனங்கட்ட சொல்லு தான்க்ஸு பா

    பதிலளிநீக்கு
  8. டவுஸர் அண்ணாத்தே ! எங்கியாவது போய் மாட்டிக்க்கீறீயே நைனா? சவுக்கியம்மா கீறியா நைனா?

    பதிலளிநீக்கு
  9. வடிவேலன் அண்ணாத்தே !! நீங்கல்லாம் பெரி பெரி ஆளுங்கோ !! இன்னாவோ , கூடம் அல்லாம் வெச்சிகீனு கீறீங்கோ !! நல்லா தாம்பா கீது !! வந்ததுக்கு ரொம்ப டாங்க்சுபா !!!!!!!

    பதிலளிநீக்கு
  10. மோகனு அண்ணாத்தே !! சவுக்கியமா கீறியா ? உன்ன பாத்தே ரொம்ப நாளாச்சிப் பா !!

    உங்க ஜூட்டு உட்டுக் கினே ? செரி , செரி இப்பவாது வந்தியே !! ரொம்ப டாங்க்சுபா ,

    அப்பால , நம்ப கதியே எங்கனா மாட்டிக் கீற மேரி தாம்பா ஆவுது, இன்னா பண்றது சொல்லு ?

    பதிலளிநீக்கு

.
.
எதாவது புரீரா மேரி எழ்து தலீவா !! .