டவுசரை கால வாரி உட்டுட்டாங்கோ பா !!


 

 

 









ஒரு நாளு நம்ப நாயர் கடைல டீ, குட்சிட்டு அப்பிடியே 
ஒரு பீடி வலிச்சிக்கினு இருந்தேன் நம்ப நாயரு, மீதி 
துட்டு இந்தா டவுசரு அப்பிடீன்னு குட்த்தாரு பா , அத்த 
வாங்கி பாத்தா !! அந்த ரூபா நோட்லே ( 10 ரூபா நோட்டு ) 
ஒரு வாசகம் எழ்தி இருந்திச்சி அது இன்னானா

"தயவு செய்து இந்த நோட்டை திருப்பி பார்க்காதே "  

இன்னு இருந்திச்சி பா , நா ஒரு வெவரம் கெட்ட ஆளா 
பூட்டேன் , உடனே ,அந்த ரூபா நோட்ட திருப்பி 

பாத்தா !!!!!!!!!!!!!!!!! அதல போட்டுக்குது,, 

" இப்ப தானேடா சொன்னேன், அறிவு கெட்ட முண்டம் " 

அப்பிடின்னு போட்டுக் குதுப்பா !!! நா இன்னா பண்ணட்டும் 
நீயே சொல்லு இந்த நாயத்த ..



இத்த பத்தி ஊ கருத்து இன்னா அத்த மின்ன சொல்லு

ஐயே ! எனுக்கு தான் ஒரு ஓட்ட போடம்பா,

 






11 கருத்துகள்:

  1. நீதாம்பா ஒரிஜினல் அக்மார்க் இந்தியன்! நீ திருப்பி பாக்காம இருந்தீனாதான் ஆச்சர்யப் படறதுக்கு! நம்மதான் "இங்கே சிறுநீர் கழிக்காதீர்" னு எழுதி கீற செவுதாண்டடையே ஒன்னுக்கு போவுற மக்களாச்சே!

    சரி ச்ரி வுடு நைனா! எதேயும் மூடி வச்சுருந்தா தொறந்து பார்க்கத்தான் தோணும்! அததானே நீயும் சென்ச்ருக்க!

    பதிலளிநீக்கு
  2. ஆமாம்! எங்கிருந்து படத்துல கீற நோட்ட புட்ச்ச! வித்தியாசமா கீதேப்பா! அக்காங்!

    பதிலளிநீக்கு
  3. "இங்கே சிறுநீர் கழிக்காதீர்" னு எழுதி கீற செவுதாண்டடையே ஒன்னுக்கு போவுற மக்களாச்சே!

    - //Mohan கூறியது...//

    மோகன் அண்ணாத்தே !! நீ சொல்றது தாம்பா கரீக்ட்டு, என்ன மேரி பேந்தா, பசங்கள இப்பிடி ஏமாத்தராங்கோ, பாத்தியா ?

    பதிலளிநீக்கு
  4. //எங்கிருந்து படத்துல கீற நோட்ட புட்ச்ச!//
    -Mohan கூறியது...

    டவுசரு டெல்லிங்கு - அதல்லாம் சொல்லக் கூடாது,

    ( ஹி ஹி ஹி .. அல்லாம் ஒரு சேப்டி தா வாஜாரே !!)

    பதிலளிநீக்கு
  5. கரிக்கிட்டாதான் சொல்லிருக்கு ரூவா நோட்டு..!
    இன்னா பாண்டி, மெய்யாலுமேவா?

    பதிலளிநீக்கு
  6. //கரிக்கிட்டாதான் சொல்லிருக்கு ரூவா நோட்டு..!
    இன்னா பாண்டி, மெய்யாலுமேவா?//

    - டக்ளஸ்....... கூறியது...

    டவுசரு டெல்லிங்கு -

    யப்பா டக்லச்சு, மொத தபா, நம்ப ஊட்டுக்கு வந்து கீற , நீ செம ஆளுப்பா !! நம்ப கிட்டயேவா ?? வந்ததுக்கு, அப்பால கமண்டிரி குட்துதக்கு டாங்க்ஸ்பா ..

    பதிலளிநீக்கு
  7. டவுசர்!
    அண்ணா சொல்றத கேளு! உண்ட ஆராச்சிய அளவோட வச்சிக்கப்பா. என் தம்பி நீ முட்டாளுன்னா நான்..???
    எனக்கும் கூட கெட்ட பெயர் வாங்கித் தாரயேடா??

    பதிலளிநீக்கு
  8. நா இத்த உடப் போறது, இல்ல இத்தால என் டவுசரே கீன்ஜாலும் பரவால்லே ,

    என்ன சொன்ன கூட உடுவேன்,

    அனா உன்ன சேத்து சொன்னாக்கா எனுக்கு தாங்காதுப்பா !! அக்காங்,

    பதிலளிநீக்கு
  9. டவுசரு!! என்கொரு பெரிய ரூவா நோட்டு அனுப்புமா!!

    பதிலளிநீக்கு
  10. ஐயோ , நா செத்தேன் பா , அப்பால நம்பல கஞ்சி காசிடுவாங்கோ பா , வாணாம் என்ன உட்டுடு, ஊ சகவாசமே வாணாம் ,

    பதிலளிநீக்கு
  11. சூப்பர் மாமே.. அன்னாத்தே.

    நம்ம ஊட்டாண்ட வந்ததுக்கு நன்றிங்கோவ்.

    அப்பலக்கா பின்னூட்டம் பூட்டீங்களே அதுக்கு பெரிய நன்றிங்கோவ்

    பதிலளிநீக்கு

.
.
எதாவது புரீரா மேரி எழ்து தலீவா !! .